Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

விருப்பு, வெறுப்புகளே சினம் உருவாக காரணங்களாம். சினமற்ற இடத்தில் மனம் அடங்கியே இருக்கும்.ஆனால், “சினமடங்க கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் அடங்க கல்லார்க்கு வாயேன் பராபரமே”, என்று தாயுமானவர் சொல்லுகிறார்.அப்படியானால் சினம் அடங்கினால் மனம் அடங்காதா??

மகரிஷி :
மனம் அடங்கும் என்பதற்கு சரியான பொருள் உணர வேண்டும். மனதை எப்போதுமே அடக்க முடியாது.
ஆழ்ந்த உறக்கத்திலே மனம் அடங்கி நிற்கும். மயக்க மருந்தான குளோரோபாம்(chloroform) கொடுக்கும் இடத்திலே மனம் அடங்கி நிற்கும்.

பிற வேளைகளில் மனம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
ஆகவே மனதை அடக்க முடியாது. யோகத்தின் மூலம், அகத்தவத்தின் மூலம், மனத்தை உயிர்மேல் செலுத்தி உயிர் உணர்வு பெற்று உயிருக்கு மூலமான மெய்ப்பொருள் நிலையை உணர்ந்து, அந்த விரிவு நிலையிலே ‘அவனே நானாக இருக்கிறான்’ என்ற உண்மையை அறிந்து தன்னடக்கம் பெற்றுவிட்டால்,

தன்முனைப்பு நீங்கி அந்த இடத்திலே மனம் விரிந்து விரிந்து, அதன் ஆதி நிலையோடு எப்போதும் ஒன்றி நின்றுகொண்டிருக்கும்.

இதனை ‘சகஜ நிட்டை ‘ என்று சொல்லுவார்கள். அந்நிலையிலே மனம் விரிந்து நிற்கும். அதுகூட அடங்குவது அல்ல.

விரிந்த நிலையிலே மனம் உடையவர்களுக்குச் சினம் எழாது. சினம் எழவேண்டிய அவசியமே அவர்களுக்கு இல்லை.

ஆனாலும் உலக வாழ்க்கையிலே விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வாழும் மக்களிடையே அந்த நிலையிலே இருந்து சினம் எழாமல் காத்து மனதை அமைதி நிலைக்கு கொண்டு வருவதற்கு ஏற்ற பயிற்சியைதான் நான் கொடுத்து வருகிறேன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக