Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 31 மே, 2014

பழிச்செயல் நீக்கம்


பிராயச்சித்தம், மேல்பதிவு, அடியோடு அழித்தல் (Expiation, superimposition & dissolution) என்று கருமப் பதிவுகளைப் போக்கிக்கொள்ள மூன்று வழிகள் உள்ளன. ஆக்கினைத் தவத்தினால் ஆகாமிய கர்மம் போகும். துரிய நிலைத் தவத்தில் ஆகாமிய கர்மமும், பிராரப்த கர்மமும் போகும். துரியாதீத தவத்தில் ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மம், சஞ்சித கர்மம் ஆகிய மூன்றுமே போகும். நீண்ட நாள் மருந்தினால் போகாத நோய் கூடத் துரியாதீத தவத்தால் நீங்கும்.

வெள்ளி, 30 மே, 2014

மனவளக்கலையின் நான்கு அங்கங்கள்

மனவளக்கலை பயிற்சி முறை நான்கு அங்கங்களை கொண்டது. தவம் (Meditation), தற்சோதனை அல்லது அகத்தாய்வு (Introspection) குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) என்பவை. தவத்தினால் உயிரின் படர்கைநிலை கழிந்து அடக்கநிலை கிடைக்கிறது; உயிரிலேயே ஒன்றி நிற்கிறோம். விவகாரங்களிலிருந்து விடுபட்டு நிற்க மனதிற்குத் திறமை கிடைக்கிறது; மன வலிமை (Will Power) கிடைக்கிறது. "நான் யார்?" துன்பம் ஏன் வருகிறது? துன்பம் நீங்கிய இன்ப வாழ்வெய்த என்ன வழி? இந்தச் சமுதாயத்தின் வளத்திற்கும் உயர்வுக்கும் என் பங்குப் பனி என்ன? நான் எங்கே போக வேண்டும்? எப்படிப் போவது?" - இவையெல்லாம் தற்சோதனையின் பாற்படும். தன்னைப்பற்றி, தன் தகுதியை பற்றி, தன மதிப்பைப் பற்றி ஆராய்வது தற்சோதனை. இந்தத் தற்சோதனையில் பெறும் தெளிவைக்கொண்டு எடுக்கும் முடிவை, தவத்தினால் மனத்திற்கு கிடைத்திருக்கும் உறுதியைக் கொண்டு, வாழ்வில் எதிர்காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது கிடைப்பதுதான் "குணநலப்பேறு". தவத்தாலும் தற்சோதனையாலும் கிடைக்கும் குணநலப்பேற்றின் இறுதிப்படிதான் "முழுமைப்பேறு (Perfection). மனவளக்கலையின் நான்கு அங்கங்களுக்கும் மனமே விளைநிலம். மனம் தன் திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சிதான் தவம் (Meditation). மனம் தன்னை தூய்மை செய்து கொள்ள எடுக்கும் முயற்சிதான் தற்சோதனை (Introspection). தூய்மையில் மேலும் மேலும் அடையும் முன்னேற்றந்தான் குணநலப்பேறு (Sublimation). தூய்மையில் பூரணத்தைக் காணும் இடந்தான் முழுமைப்பேறு (Perfection).
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

வியாழன், 29 மே, 2014

மறைபொருள் சுரங்கம்


மனவளம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையா வாழ்க்கை நியதியாகும். இயற்கையில் அமைந்துள்ள மறைபொருட்கள் எண்ணில் அடங்கா. அவையாவும் உடலுக்கும் உயிருக்கும் இடையே, உயிருக்கும் மனதுக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையே, ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் விரிந்த பேரியக்க மண்டலத்துக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே மனித மனத்தின் மூலமே வெளிப்படுகின்ற...ன.
இத்தகைய கோடிக்கணக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் மனித மனத்தால் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகளால் ஏற்றுக் கொள்ளப் பெற்றுக் கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம். மனித மனத்தின் தொடக்கம், எல்லாம் வல்ல, காலம் கடந்த, எல்லையற்ற மெய்ப் பொருளேயாகும். அதன் இயக்கங்கள் பேரியக்க மண்டல உணர்வுகள் அனைத்தும் ஆகும். அதன் முடிவோ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய மனமேயாம்.
இத்தகைய பேராற்றலுடைய மனதைப் பெற்ற மனிதன் அதன் மதிப்பை உணர வேண்டும். ஆக்க முறையில் அம்மனதைப் பண்படுத்த வேண்டும். பயன் கண்டு பேரின்ப நிலையிலே வாழ வேண்டும். இந்த மதிப்புள்ள தகுதியை மனிதன் பெற ஏற்ற திட்டமிட்ட கலைதான் மனவளக்கலை.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனம் நிறைந்த நிலத்தில் எது போட்டாலும் விளையும்.
ஆனால் எது போட வேண்டும் என்று
சிந்தித்து போட வேண்டும்".

.
"விளைவறிந்து, நலமுணர்ந்து நல்ல நாட்டத்தோடு
எண்ணம், சொல், செயல்களைப் பயன்படுத்தும் கலையே தற்சோதனை".
.

"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்" .
.

"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள்,புகழ்,செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று,
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 27 மே, 2014

தத்துவஞானம்

முழுமுதற் பொருளை (மெய்ப்பொருளை) அறிய வேண்டும்; அதோடு கலப்புற வேண்டும் என்ற பிரபஞ்சத்தையே உள்ளடக்கிய ஒரு தத்துவத்தை, பெரிய ஆற்றலை உள்ளடக்கி இருப்பவன் தான் மனிதன். பிறந்தது முதற்கொண்டு அந்த வேகம் அப்படியே இருந்து கொண்டு இர...ுக்கிறது. வேறு சில சிறு சிறு காரணங்களால், புலன் அறிவின் மயக்கத்தினால் எழுந்து இயங்க முடியாமல் அறிவு தேக்கமுற்று இருக்கிறது. அந்த வேகத்தை ஒரு சிறு பொருள் மேல் பாய்ச்சுகிறோம். ஒரு செயலின் மேல் பாய்ச்சுகிறோம். ஒரு நாளைக்கு திருப்தியாக இருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து திருப்தி இல்லை. இப்படி எந்தப் பொருள்களின் மீதும் ஆசை வைக்கிறோம். அனுபவிக்கிறோம். மீண்டும் வெறுக்கிறோம்.

காரணம் என்னவென்றால் - உண்மையாக எழுச்சிப் பெற்று உள்ளுணர்வாக இருக்கக்கூடிய ஆசை என்ற அறிவின் எழுச்சி, அது இதை நாடவில்லை என்பதே இதற்கு காரணம். அது நாட வேண்டியது பரிபூரணமான எல்லையை அடைவதே. அந்த அறிவின் எழுச்சியை சிறு சிறு எல்லையில் புகுத்தும் போது அது குறுகிய காலத்தில் நிறைந்து விடுகிறது. பிறகு வழிந்து ஓடுகிறது.

பெரிய வெள்ளம் வருகிறது. ஒரு குட்டையில் ஒரு நிமிடத்தில் நிரம்பிவிடுகிறது. நிரம்பிய அந்த வெள்ளம் மறுபடியும் வேறு பக்கம் ஒரு ஏரியில் போகிறது, ஏரி நிரம்பிவிட்டால் அதன் பிறகும் போகிறது. பெரிய அணையில் நிரம்பிய பிறகு மீண்டும் ஆறாகப் போகிறது. சமுத்திரத்திற்குப் போன பிறகுதான் அதற்கு அமைதி வரும். எங்கே இருந்து புறப்பட்டதோ, அங்கே போனால்தான் அமைதி இருக்கும். பேராற்றலுள்ள அறிவு நிலைக்கும், எந்த இடத்திலிருந்து பிறவி தோன்றியதோ, அந்த இடத்தை அறிந்து கொண்டால் தான் திருப்தியாக இருக்கும். அங்கேதான் நிறைவு கிட்டிடும்.
இதற்கு மத்தியில் எந்தப் பொருளாலும் நிறைவு கிட்டாது. அறிவு உயர்வதற்காக மற்ற பொருட்கள், ஆராய்ச்சி எல்லாம் தேவை. கடமையினால்தான் அவை தேவையாக இருக்கின்றனவே தவிர, அவையே நம்மை இறைநிலைக்குக் கொண்டு போய் விட்டு விட முடியாது. ஆழ் மனம் தேடும் பொருளின் (ஆதிநிலை / மெய்ப்பொருள்) மேல் தான் மனதிற்கு ஓயாத நினைவு (தேடுதல்) இருக்கும். அதன் மேல்தான் மதிப்பு இருக்கும். தேடுகிற பொருளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆராயும்போது அதுதான் தத்துவஞானம்.
 

திங்கள், 26 மே, 2014

நால்வகை ஆற்றல் வரவு

வயிறானது எப்போழுதுமே நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இந்தப் பழக்கத்தினால் என்ன ஆகும் என்றால் உணவு கொஞ்சம் குறைந்துவிட்டாலும் ஏதோ இழந்து விட்டது மாதிரி இருக்கும். அதைப்போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கிற வரைக்கும் மனதுக்கு திருப்தி இருக்காது....

நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம் தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்து கொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து வரக் கூடிய அலைகளாக (Astronomical radiations) சேர்ந்து வர அவை துகள்களாகி அது ஒரு பகுதி, பூமியின் நடு மையத்திலிருந்து (Atomic fission) அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக்கூடிய அந்த துகள்கள் எல்லாம் பூமியினுடைய மேல்பக்கம் தான் நோக்கி வரும். அதிலேயிருந்து ஒரு பகுதி - ஆக நான்கு வகையிலே நம் உடலில் உள்ள சிற்றறைகள் (Cells) நமக்குத் தேவையான உயிர்ச் சக்தியை அவ்வப்போது தேவையான அளவுக்கு ஏற்றிக் கொள்ளும். இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான கனம் (density) உண்டு. அறிவுக்கும் உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன. சிலருக்கு கால்சியம் சத்து குறைவாகவுள்ளது. இரும்புச் சத்து குறைவாகவுள்ளது (Calcium deficiency, iron deficiency) என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும்.

அதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் அது சுத்தமாயும் நல்ல சத்துடையதாகவும் இருக்க வேண்டும். போஷாக்கு என்பது உணவின் அளவைப் பொருத்தல்ல. நீங்கள் ஜீரணம் செய்து பழகிய உணவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அடுத்த முறை உணவு எடுக்கும் போது ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் அளவு முறை. ஒரு மணி நேரம் தினந்தோறும் இரண்டு வேளையும் பசி இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவ காந்த சக்தியை இழுக்க முடியவில்லை என்றால் உடல் தானாகவே காற்றில் இருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். வயிற்றை மட்டும் நாம் நிரப்பிக் கொண்டிருந்தால் உலக விவகாரங்களில் உழைக்கிறது என்ற வரைக்கும் தான் வரும். அதற்கு மேலே சிந்தனை ஆற்றல் நமக்குப் பெருகுவது சிரமம். சிந்தனை ஆற்றலே மனிதனின் சிறப்பு.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உணவில் எளிமை, உழைப்பில் கடுமை
ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு".
.
உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை,
நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு."
.

அணுவின் பெருமை:

"அணுவிலே பிரபஞ்சம்
அடக்கம் பெற்றிருப்பதனை
அறிவை யறிந்தோர் அறிவர்;
அவர் அணுவாய் நின்றதனால்".
.

அணு :

"அணுவினது தத்துவத்தை யான் ஆராய்ந்தேன்
அண்டபிண்ட சராசரங்கள் அதன் கூட்டன்றோ?
அணுவினிலே சூடுண்டு குளிரும் உண்டு
அதனுள்ளே காந்தமென்ற உயிரும் உண்டு
அணுவினிலே இருளுண்டு ஒளியும் உண்டு
அசைவுண்டு எழுச்சி கவர்ச்சிகளு முண்டு
அணுவினிலே அண்டபிண்டம் அனைத்தும் உண்டு
ஆலமரம் அதன்வித்தில் உள்ளாற்போல".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 25 மே, 2014

ஹோமியோபதி பற்றி மகரிஷியின் கருத்து



 

மனவளக் கலை

பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக்கொண்டு இருக்கிற மனிதன் பழக்கத்தை முறையாக மாற்றிக் கொண்டு விளக்கத்தை நல் விளக்கமாகப் பெற்று அந்த விளக்கத்தின் வழியே வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு முறையான பயிற்சி எதுவோ அதைத்தான் "மனவளக் கலை" என்று சொல்கிறோம். பதினைந்து பதினாறு வயது ஆனவுடனேயே இந்தப் பயிற்சிக்கான தகுதி எல்லோருக்கும் உண்டாகிறது. இந்த அகத்தவ (Meditation) பயிற்சியாகிய - குண்டலினி யோகத்தை குடும்பத்திலுள்ள ஆண், பெண் எல்லோருமே பயிலலாம். விடாமுயற்சியுடன் செய்யத் தொடங்கினோமேயானால் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டு, தன்னைப் பற்றி, சமுதாயத்தை பற்றி, இயற்கையை பற்றி அறிந்து தெளிவாக தெரிந்துகொண்டு, பூரண நிலையை (Perfection) பெற்று வாழ்வாங்கு வாழ முடியும் என்ற ஒரு தெளிவும், நம்பிக்கையும் பெற முடியும். தானும் சிறப்பாக வாழ்ந்து பிறரையும் சிறப்பாக வாழ வைக்க முடியும்.


வெள்ளி, 23 மே, 2014

மனிதன் நல்லவனாக வாழ


தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், புலன் மயக்கம் மாயையும், பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று கலங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதி நிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு முற்படுகிறது. அதற்கு, ஒவ்வொருவரும் தனது தீயவினைப் பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். ஜீவகாந்த சக்தியை "குண்டலினியோகம்" எனும் அகத்தவப் பயிற்சியாலும் (Meditation), நல்ல செயல்களாலும் தூய்மை செய்து மாற்றியமைக்க வேண்டும். அப்படிச் செய்யச் செய்ய, அறிவாட்சித் தரம் (personality) உயர்ந்து விடும். தானும் மாறலாம். தனக்குப் பின்னால் வரக் கூடிய சந்ததிகளும் மாற்றியமைக்கப்படுவார்கள்.

"மனவளக்கலை" குண்டலினி யோக பயிற்சி - தற்சோதனை (Introspection), குண நல மேன்மை (Sublimation), முழுமைப் பேறு (Perfection) இவற்றை அடக்கமாகக் கொண்டதால், உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனை முறை ஆகும். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்த இறைஆற்றலே அறிவாக அமைந்துள்ளது என்ற உணர்வு வருமேயானால், தீமை செய்ய முடியாது. எப்போதுமே செயலின் விளைவாக வருவது இறையாற்றலே தான். இந்த உண்மையை உணர்ந்தால் தான் மனிதன் நல்லவனாக வாழ முடியும். நன்மையே செய்ய முடியும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 22 மே, 2014

வேதாத்திரி என்ற பெயர்

ஐயா! தங்களுக்கு "வேதாத்திரி" என்ற பெயர் பெற்றோர்கள் வைத்த பெயரா?
அல்லது ஆன்மீகத் துறையில் வந்த பிறகு வைத்துக் கொண்டீர்களா?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயரே ''வேதாத்திரி' 'தான்.
ஒரு நாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார்.
வழக்கம்போல் வந்த விருந்தினரை உபசரித்த என் பெற்றோர்கள் ஏழ்மையிலும் தங்களுக்கு எளிய உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளனர்.
அப்போது உள்ளே குழந்தை அழும் குரல் கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம் தங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஓர் ஆண்மகவு பிறந்துள்ளதை என் தாயார் கூறியுள்ளார்.
உடனே அந்த பெரியவர் குழந்தைக்கு "வேதாத்திரி" என்று பெயர் வையுங்கள் என்று கூறினாராம்.
இரவில் திண்ணையில் தங்கிய அவரை காலையில் மேலும் விசாரிக்க என் பெற்றோர்கள் பார்த்த பொழுது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவரை காணவில்லையாம்.
பிறகு அவர் சொன்னபடியே "வேதாத்திரி" என்ற பெயரையே எனக்கு என் பெற்றோர்கள் சூட்டினார்களாம்.
இது பிற்காலத்தில் என் தாயார் எனக்கு கூறியது

புதன், 21 மே, 2014

அறிவாட்சித் தரம்



மனித இன வாழ்வில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. விரைவான போக்குவரத்துச் சாதனங்களும், விரைவாக செய்திகள் பரவும் வசதிகளும் பெருகியுள்ளன. உலகில் எந்த மூலையில் எந்த இடத்தில் ஒரு மனிதனால், ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அது உலகில் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் விரைவாகப் பரவும் வசதி பெருகியுள்ளது. பொருளாதாரம், அரசியல், மதம் ...என்ற மூன்று துறைகளாலும், மனித இன வாழ்க்கையும் பண்பாடும் ஒன்றிணைக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளை மனதில் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், மனித இனத்திற்குப் பறித்துண்டு வாழும் முறை பொருந்தாது என்பதை உணரலாம். தேவையும் இல்லை. பழக்கப் பதிவுகளாலும், சிந்தித்துத் தெளிவு பெற்று திருந்தி வாழ முடியாத தேக்கமுற்ற மனநிலையாலும், தேவையே இல்லாத துன்பமே விளைக்கும் தீய செயல்கள் மனித வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலைமை மாற வேண்டுமெனில், உலக அறிஞர்கள் பலர் கூடிச் சிந்தித்து, திட்டமிட்டு, கூட்டாகச் செயல்புரிய வேண்டியுள்ளது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், பழக்கப் பதிவுகளை மாற்றி பறித்துண்ணும் வாழ்விலிருந்து திருத்தம் பெறவும் உதவக்கூடிய ஆன்மீகக் கல்வி உலகமெங்கும் பரவ வேண்டும். முதலில் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், பொருள் துறைத் தலைவர்களும், கல்வித் துறைகளின் தலைவர்களும் பிரம்ம ஞானம் எனும் உயர் அறிவு பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கை வழியையே துணைகொண்டும், அடிபற்றியும் மக்கள் வாழ்வு நடைபெற்று வருகிறது. பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளிதான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும் புலன் கவர்ச்சிகளில் மயக்கமும், பரித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்கு பிரம்ம ஞானம் தானாக ஒளிவிடத் தொடங்கும். படிப்படியாக, பிரம்மமே தானாக இருக்கும் "அறிவாட்சித்திறம்" உண்டாகும்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
அறிஞர்:

"அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்,
அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்".
.

அறிஞர்களின் நிர்வாகம்:

"ஒழுக்கம் அறம் தவம் மூன்றும் உலகோர் வாழ்வில்
ஓங்க; அறிவும் செயலும் தூய்மைகொள்ளும்
பழக்கம் இயல்பாய் அமைய; கல்வி, செல்வம்,
பண்புடையோர் நிர்வாகம் பரவவேண்டும்".
.

நற்பழக்கம்:

"பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே
பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;
பழக்கத்தை வளர்ந்த மக்கள் மாற்றுவது கடினம்,
பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைக்கும் எளிது".
.

அமைதியின்மை எதனால்?

"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்
அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர் இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைத்துளது மனிதர் வாழ்வில்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 20 மே, 2014

எண்ண அலைகள் :



இயற்கையை உணர்ந்து அறவழி ஒழுகி அறியாமையை தூய்க்கவல்ல ஒரு மதிப்புள்ள உயர் மனிதனாக இருந்தும் தன் தகைமையும் இயற்கையாற்றலின் இயக்க நியதியும் அறியாமல் மனிதன் தனது எண்ண ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். தன் தேவை, தற்கால இன்பம் என்ற அளவில் குறுகி உணர்ச்சி வயமாகி பிறர்க்கும் பிற்காலத்திற்கும் தீமை விளைவும் வகையில் செயல்புரிகிறான். பிறரை தாக்க...ி தீமைவிளைவிக்கும் எண்ண அலைகளை பரப்பிக் கொண்டே இருக்கிறான். தன குடும்பம், சமுதாயம், வேறுநாட்டு மக்கள் இவர்கள் மேல் சினம், வெறுப்பு, பகைகொண்டு அவன் எண்ண அலைகளை எப்போதும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறான். இவ்வெண்ண அலைகள் அணு ஆற்றலாகவே பரவி மனித இன உடல்களிலும் மூளையிலும் பொருந்தா உணர்வு பதிவுகளாகவும் அமைகின்றன. இப்பதிவுகளை பாவப் பதிவுகள் என்றும் சாபம் என்றும் அறிவறிந்த முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகி பொதுவாக சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்குத் துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும், அதற்கு துணிந்து செயல்புரிவதும், பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கின்றேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்து பிறர்க்குத் துன்பமளிக்காமலும், இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.     

மகரிஷியின் மணிமொழிகள்:
--------------------------------------------
.

"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும் ".
.

எண்ணமும் செய்கையும்:

"எண்ணு, சொல், செய் எல்லோர்க்கும் நன்மை தர;
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு".
.

வாழ்க்கையை ஆக்கும் சிற்பி:

"எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி,
எண்ணி என்னிட இனிதே பயக்கும்".
.

நன்மையே நோக்கு:

"எண்ணம் சொல் செயலால் எவருக்கும், எப்போதும்,
நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு".
.

"பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு
எழும் ஒரு ஒலியே 'வாழ்த்து' என்ற வார்த்தையாகும்".


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 19 மே, 2014

உடலானது உயிர்ச் சக்தியினை எவ்வாறு சேர்த்துக் கொண்டிருக்கிறது ?




நான்கு வழிகளில் உயிர் வரவு அவை :

[1] உணவிலிருந்து,
[2] காற்றிலிருந்து,
[3] கோள்களிலிருந்து வரக் கூடிய ஆற்றலிலிருந்து,
[4] பூமி மையத்தில் சிதைந்து கொண்டேயிருக்கின்ற அடிப்படை அணுக்களிலிருந்து (Isotopes) சக்தி மேற்பரப்பை நோக்கி வந்து கொண்டே இருக்கும் - அதிலிருந்து,
...
இந்த நான்கு வழிகளில் இந்த உடல், உயிர்ச் சக்தியை எப்பொழுதும் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது. உடலியக்கம் உயிர்ச் சக்தியை அதன் செலவுக்கேற்றவாறு ஈர்த்துச் சேமித்துக் கொண்டேயிருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 18 மே, 2014

உயிர்சக்தி எந்தெந்த வகையில் இந்த உடலால் செலவழிக்கப்படுகிறது...



1. இந்த உடலும் உயிரும் இணைந்து இயங்கும் காரணத்தால் இயற்கையாக மனிதனுக்கு ஏற்படுகின்ற பசி, வெட்ப தட்ப ஏற்றம், உடல் கழிவுப் பொருட்களின் உந்து வேகம் என்ற வகையில் ஏற்படும் தேவைகளை காலத்தோடும், முறையோடும் தக்க பொருட்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்வதற்கு உயிர்ச்சக்தி அளவோடு செலவு செய்யப்படுகிறது.
2. அறிவானது புலன்களைக் கொண்டு செயலாற்றும்போது உயிர்ச் சக்தியானது சந்தர்ப்ப, சூழ்நிலைக்கேற்றவாறு எழுச்சியாகி உடலில் ஊறுதல் உணர்ச்சியாகவும், கண்களில் ஒளியாகவும், நாவில் ருசியாகவும், காதுகளில் ஒலியாகவும், மூக்கில் வாசனையாகவும் செலவாகிக் கொண்டே இருக்கிறது.
3. இந்த மாற்றதிற்குத் தேவையான முறையிலும், அளவிலும் உடல் காந்த சக்தியாகவும், இரசாயன சக்தியாகவும், உணர்தல் சக்தியாகவும் மாற்ற மூளையின் நுண்ணியக்கத்தின் மூலம் உடலிலே உள்ள பல கோடி பேரணுக்கோளங்களில் கபாட இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இந்த முறையிலும் ஓரளவு உடல் காந்த சக்தி செலவாகிறது.
4. கொள்ளும் இயக்கமாகவும், தள்ளும் இயக்கமாகவும் உடல் முழுவதும் நடைபெற்றுவதால் ஓரளவு உயிர்ச் சக்தி செலவாகிக் கொண்டு இருக்கிறது.
5. எண்ணம், சொல், செயல்களினால் ஜீவன்பெறும் மாற்றுத் தன்மையால் பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, வஞ்சம் என்ற ஆறு தீய குணங்களின் வழியாகவும், பழக்க வழக்க ஒழுக்கங்களினாலும் உயிர்ச் சக்தி செலவாகிக் கொண்டு இருக்கிறது.
6. மிதமிஞ்சிய போகம், ஆகாரம், பேச்சு, உழைப்பு, வெட்ப தட்ப தாக்குதல் இவைகளாலும், நோயாளிகள், தீய குணமுடையோர், வீட்டு விலக்கான பெண்கள் இவர்கள் ஸ்பரிசமும், கற்பொழுக்கத் தவறுதலாலும் உயிர்ச் சக்தியானது ஒவ்வொரு அளவில் அதனதன் அளவுக்கு ஏற்ப செலவழிக்கப்படுகிறது.
7. கவலை, கோபம், பொறாமை, பயம், பந்துக்கள், பாசம், பொருள்பற்று, பேராசை, காமம் முதலான எண்ண இயக்கங்களால் உயிர் ஆற்றல் பெரும் அளவில் செலவழிக்கப்படுகிறது.


உயிர் நிலையறிய :

"கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை,
உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை".
.

சச்சிதானந்தம்:

"உயிரின் இயக்கமே உணர்ச்சிகள் அனைத்துமாம்
உயிரின் உணர்தலே உள்ளமாம் அறிவிதே
உயிரின் ஒடுக்கமே வெளியெனும் உயர்வீடு
உயிரின் நிலைகளே உயர் சத்-சித்-ஆனந்தம்".
.

பரம் - உயிர் - அறிவு:

"உணர்ச்சிகளில் அறிவியங்க உயிர்விளக்க மாகாது
உள்ளொடுங்க உயிர் உணர்வாம்; உயிர் ஒடுங்க தெய்வநிலை;
உணர்ச்சி உயிர் பரம் மூன்றும் உணரவழி அகத்தவமே;
உண்மை, உயிர், உலகு அறிவு உணர்பவனே மூன்றாவான்."
.

உயிரறிய ஞானம்:

"உயிர் அறிந்தால் அறிவறியும் உண்மை தோன்றும்
உலகமெலாம் உயிருக்குள் இருக்கக்காணும்
உயிரறிந்த அறிவாலே உலகை நோக்க
உயர்வு தாழ்விலாத சமநிலை சித்திக்கும்;
உயிரறியா அறிவு நிலை மாயையாகும்
ஒப்பற்ற உயிரறிய ஞானமாகும்
உயிராயும் அறிவாயும், தெய்வமாயும்
ஒங்குமுயர் மறைபொருள் "நான்" உண்மை தேர்வோம்".
.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

சனி, 17 மே, 2014

கேள்வி: நமது குண்டலினி யோகம் பயின்ற ஒருவருக்கு, மூன்று வருடம் கழித்து இந்தக் காலத்தில், கிரஹ நிலைப்படி மரணம் வரும் என்று ஜோதிடரால் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியுள்ளவர் நமது நவக்கிரக தவத்தைச் செய்தால் மரணத்தை வெல்லமுடியுமா?


வேதாத்திரி மகரிஷியின் விடை: முடியும். தியானம் செய்து வந்தாலே மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம். தவம் செய்யும் போது பீட்டா வேவிலிருந்து ஆல்பா வேவுக்கு மன அலை வந்துவிடுகிறது. அலை நீளம் குறைவதால் உயிராற்றல் சேமிக்கப்படுகிறது. மரணம் வெல்லப்படுகிறது.
நவக்கிரகங்களில் தவம் செய்தால் நிச்சயமாக மரணத்தைத் தள்ளிப் போட்டு விடலாம்; ஆனால் தினம்தோறும் நவக்கிரகத்தில் இருந்து சம்யமமாகி தவம்செய்து வரவேண்டும். சங்கற்பம், வாழ்த்து, காப்பு இவைகளை முறையாகக் கூறி வரவேண்டும்.
எனக்கு 52 வயது தான் என்று சோதிடர்கள் கூறினார்கள். நான் வந்த வேலை இன்னும் இருக்கிறது. ஆகையால் எனக்கு இப்போது மரணம் இல்லையென கூறினேன். நமது யோக முறையினால் மரணம் வெல்லப்பட்டது

 

வெள்ளி, 16 மே, 2014

கவலை இல்லை


திறமையின்மை, அச்சம் இவையிரண்டும் கவலைகளைப் பெருக்கும் மன நிலைகளாகும். மனத்தின் விழிப்பு நிலை பிறழ்ந்த மயக்க நிலையும், இயற்கையின் ஒழுங்கமைப்பை அறியாமையும், எளிதில் தீர்வு காணத் தக்க கூர்மை அறிவை வளர்க்கும் சிந்தனைப் பயிற்சியின்மையும் திறமையின்மையாகும். தவறான செயல்களின் விளைவைக் கண்டோ அல்லது தனது வாழ்வின் போக்கில் ஊறு விளைவிக்கும் என்று கற்பனை செய்து கொண்டோ, துணிவிழந்து வருந்துதல் அச்சமாகும்.
...
கவலையால் உடல், உள்ள நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும், தோல்வியாகவும் அமைந்து விடுகிறது. இதனை மனிதன் ஒழித்தேயாக வேண்டும். கவலையை ஒழிக்க வேண்டுமெனில் இயற்கையின் ஒழுங்கமைப்பை அறிய வேண்டும்; சிந்திக்கும் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை வேண்டும். முயற்சி வேண்டும். துணிவு வேண்டும்.
மாறாத இயற்கை விதிகளை உணர்ந்து கொள்ளல், சமுதாய ஒழுங்கமைப்பைப் புரிந்து, மதித்து வாழ்தல், தன்னிலை விளக்கம் பெற்றுப் பிறவியின் லட்சியத்திற்கு ஒத்த இசைவான வகையில் வாழ்க்கை நடைமுறைகளை அமைத்துக் கொள்ளல் என்ற அறிவுடைமை வந்து விட்டால் தானே சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொள்ளாத தகைமை கிடைக்கிறது. சிக்கல்கள் இல்லாமல் போகவே, துன்பமில்லை, கவலையுமில்லை என்றாகி வாழ்வே ஓர் இன்பச் சோலையாக மாறிவிடும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"கவலை இல்லாத மனிதர்கள் உலகில் உண்டு;
ஆனால் 'சிக்கல்' இல்லாத மனிதர்கள் உலகில் இல்லை".
.
"சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத
மனநிலையைக் கவலை என்கிறோம்."
.
"ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும்
ஒரு தேர்ந்த 'மனவளக்கலைஞனுக்கு - குண்டலினியோகிக்கு'
எவ்விதத்தும் கவலை வர வாய்ப்பே இல்லை. அத்தகைய
"அறிவுடைமையை" நாம் பெற்றாக வேண்டும்".
.
"முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல
சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட உடலும் உள்ளமும்
துன்பங்களைத் தாங்க வல்லமையுடையவை ஆகின்றன."
.
"கரு வளர வளர கருப்பையும் அகன்று
தேவைக்கேற்ப விரிவு அடைகிறது.
இது போல அறிவு வளர வளர அது -
செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும்
பெருகிக் கொண்டே இருக்கும்".
.
"கவலை யென்பதுள்ளத்தின் கொடிய நோயாம்
கணக்குத் தவறாய் எண்ணம் ஆற்றலாம்
கவலை யென்பதோ வாழ்வில் சிக்கல் கண்டு
கலங்கி மனம் திகைப்படையும் நிலைமையாகும்;
கவலை உடல்நலம் உள்ள நலன் கெடுக்கும்
கண் முதலாய்ப் பொறி ஐந்தின் வளம் கெடுக்கும்
கவலையினை முயற்சி சிந்தனை இவற்றால்
கடமையினைத் தேர்ந்தாற்றி வெற்றி கொள்வோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

வியாழன், 15 மே, 2014

வினா: சுவாமிஜி, மனிதனுக்கு புகழ் எவ்வாறு கிடைக்கும்?


 .
...
வேதாத்திரி மகரிஷியின் விடை: மனிதன் எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதில் புகழ் இல்லை. என்ன நல்ல செயல்களை சமுதாயத்திற்கு செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தான் புகழ் இருக்கிறது.
.
புகழ் என்பது தன்முனைப்பிற்கு போடும் தூபம் அல்ல!
.
நற்செயலின் விளைவினால் பயனடையும் மக்கள் அன்போடு கொடுக்கும் மதிப்புணர்வே புகழாகும்.
.
நீங்கள் புகழைத் தேட முயற்சித்தீர்களானால் அந்த வேட்பே புகழ் உங்களை அணுகாமல் துரத்தும் சக்தியாகும்

புதன், 14 மே, 2014

பூரணப் பொருள்கள் :

பிரபஞ்சத்தில் காணும் எப்பொருளும் அனுக்களின் கூட்டமே, சக்தி என்றாலும் வேகம் என்றாலும் ஒன்றே. வேகம் என்பது பிறக்குமிடம் அணுவேயாகும்....


அணுவில் ஒரு வேகம் இருக்கிறதென்றால் அது ஒரு குறை நிலையாக இருந்து, நிறைவான ஒன்றை நாடி எழுகிறது என்பது தான் பொருள்.

குறை என்பது நிறைவான ஒன்றை இணையவைத்தும் ஆதாரமாகவும் கொண்டு இருக்கும் மாறுபட்ட நிலை.

ஆகவே அணு என்ற ஒரு குறை நிலைக்கு மூலமும் முடிவுமாக இருப்பது ஒரே பூரணப் பொருள் தான் என்று விளங்குகிறது.

அணுவைக்கடந்து ஒரு பொருளோ, அணு நிலையைக் கடந்து ஒரு தனி நிலையோ உண்டு எனில், அது வெட்ட வெளியைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆகவே வெட்டவெளி என்ற தத்துவமே அனைத்திற்கும் ஆதாரமாகவும் மூல சக்தியாகவும் உள்ள சர்வ வல்லமையும் உடைய ஒரு உறுதிப் பொருள் என்றும் அதுவே ஆதியாகவும் அனாதியாகவும் உள்ள பூரணப் பொருள் எனவும் திடமாகக் கூறுகிறேன்.

இயற்கையின் ஆதி நிலை என்றும், சிவம் என்றும், தெய்வம் என்றும் பேசப்படுகிறதும் இதுவே.

ஒரு மனிதனின் விந்து நாதத் தொடர்பை பின் நோக்கி ஆராய்ந்து கொண்டே போனால் அது பல்லாயிரம் ஜீவராசிகளைக் கடந்து கடைசியாக அணுவிலே தான் போய் முடிவுபெறும். அணுவின் மூலமோ, மேலே விளக்கிய வெட்ட வெளிதான் என்றும் தெரிந்து விடும். அங்கிருந்து முன் நோக்கிப் பார்த்தால் பிரபஞ்சமாக விரிந்துள்ள அனைத்துமே ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கும் உண்மை அறிவுக்கு அகக்காட்சியாகும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"எல்லையற்றதை எல்லையுடையதாகப்
பார்ப்பது அறிவின் குறைபாடு".
.
முற்றறிவில் நிறைந்திடுவோம் :
"என்னுடைய அறிவிற்கு ஆதிமூலம்'
இறைவனே எனும் உணர்வென் தவத்தால் பெற்றேன் ;
என்ன சொல்வேன் இவ்வுணர்வு உடலைக் கொண்டு
இயங்கிப் பெற்ற பதிவுகளை விழுங்குமாபோல்
மின்னொளியாய் அறிவு, உயிர், உடல், பாரண்டம்
மிக விரிந்த பேரண்டம் ஒன்றில் ஒன்றாய்ப்
பின்னிப்பின்னி நியதியோடு இயங்கி அந்தப்
பெருவெளியில் அனைத்துமாய் அறிவுமானேன்".
.
அறிவின் முழுமைப்பேறு:
"தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 13 மே, 2014

அறிவின் பருவங்கள் :



மனிதனாகப் பிறந்தும், தான் மனித இனம் என்று அறிந்து கொள்ள முடியாத பருவம் ஒன்று....

மனிதன் என்று அறிந்தும் மனிதனாக நடந்து கொள்ளத் தெரியாத பருவம் ஒன்று.

மனிதனாக வாழத் தெரிந்தும் அதுவரையில் அறியாமையால் கொண்ட பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தெரியாததால் உணர்ச்சி, ஆராய்ச்சி என்ற இருவகை போட்டிகளுக்கிடையே வாழும் பருவம் ஒன்று.

அறிவும் செயல்களும் ஒன்றுபட்டு மனிதன் மனிதனாகவே வாழும் பருவம் ஒன்று.

தான் நெறியோடு வாழ்ந்தும் தெளிவற்றவர்களால் தனக்கும் சமுதாயத்திற்கும் விளையும் கேடுகளை நீக்கி தன்னைப் போல் உலக மக்கள் அனைவரும் நெறியறிந்து வாழும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று முனைந்து செயலாற்றும் பருவம் ஒன்று.

ஆக ஐவகைப் பருவங்களில் மக்கள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் பல நிலைகளில் உள்ளார்கள்.

இவ்வளவு பேதை நிலைகளில் வாழும் மக்கள் அனைவரின் கூட்டுறவின் இணைப்பாலே ஒவ்வொருவரும் தினசரி வாழ்வை நடத்தி வருகிறோம்.


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனிதன் மனிதனுக்குச் செய்யக்கூடிய துன்பம் தவிர,
இயற்கையில் வேறு எந்தத் துன்பமும் இல்லை.
அப்படி ஏதேனும் இயற்கையில் துன்பம் வந்தால்,
அதைச் சரிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு
மக்களிடம் ஆற்றல் மலர்ந்து விடுகிறது .
அந்தத் துன்பம் நிலைப்பதும் இல்லை".
.

முக்கால உணர்வு:

"முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,
இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,
பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்.
முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே."
.

நிறைநிலை:

"இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்க விட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க,
நிறைநிலையே தானாக உணர்வதாகும்
நித்தம் நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்;
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்,
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்."



வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 12 மே, 2014

Genetic Centre :


 Human being is a complex phenomenon comprising three different aspects or bodies. the physical, the astral and the casual(i.e. magnetic) bodies. All three are interlinked with one another. They physical body is a structure made of millions of cells. the astral body is the spiritual body. it is comprised of countless life force particles(free energy particles with selfrotative spinning motion. the casual body is the total net bio-magnetic wave constantly emanating from the life force particles by their spinning motion. As the spinning force of Vethons produces the bio-magnetic wave, the magnetic wave also is speedily circulating throughout the physical body. By such speedy circulation the bio-magnetism intensifies in the centre at the sex gland. By the centripetal force thereby created, the centre of the life force(astral body) is established to coincide with the bio-magnetic centre.
The metabolic routines of the physical body transform food into seven organic substances: juice, blood, flesh, fat, bone, marrow and sexual vital fluid This sexual vital fluid is the essential compound of the physical body. By the centripetal force of the magnetic and spiritual(life force) centre, the major portion of the sexual vital fluid also is deposited at the same centre. These three phenomena jointly comprise the "Genetic Centre" which is the seat of all mental, physical and spiritual(life force) functions in the human being.
Force is the cause of all functions and changes of the universe; only force moves everything. Movement of force results in clash, reflection, refraction, penetration and interaction, effecting changes in everything constantly. All such changes are perceived as the characteristics of inanimate masses and animate beings.
If any force is reduced, ultimately it will come to stillness - that is Stock force State. So the origin of force is Stock force State. It is all-pervasive throughout the universe. The compressive force on the mass is intensified at its centre and acts as centripetal force. This is the same principle as in the individual energy particle. The nucleus of a mass is its centre of gravity and it is Genetic Centre. In the Genetic Centre the three essential principles of the living beings are joined. These three are 1. Sexual vital fluid, which is the essential compound of the physical body, 2. the life force particles which are the essential constituents of the astral body and 3. the intensified bio-magnetism, which is the core of the casual body. These three principles are interlinked in the Genetic Centre.
-Thathuvagnani Vethathiri Maharishi

ஞாயிறு, 11 மே, 2014

Thoughts :


There are six sources from which thoughts arise. They are
1. Need
2. Habit...
3.Environmental conditions
4.Imposition of another perosn's thought
5.Hereditary imprints and
6. Divinity

As action follows though, all the thoughts that arise in the mind are to be analysed and introspected for a better pattern of thinking and a pattern of living. When a thought arises, you have to catch the thought and identify its root.
Thought of taking food arises in you-You put the thought into introspection,. Hunger could have given rise to the thought. Here, need is the source of the thought.
If you find that you are not actually hungry and yet the thought of lunch has come, examine whether habit could have generated it. It is one 'o' clock - the usual time for your lunch. This is thought emerged out of habit.
In another situation, you are neither hungry not it is your usual lunch time. and yet the thought of taking food has come while you are driving past an open-air cafeteria. Here thought has come merely at the sight of other playing their fork and spoon. this is an example of environmental conditoins generating a thought.
You are taking a stroll when you pass by a fruitstall. You have no intention to make any purchase. Yet you buy grapes from a stall and return home. You are not even fond of grapes. Then you wonder what made you to purchase the grapes. Well the reason for needless purchase is imposition of thought by vendor.
You may suddenly get a thought that you should build a school or a hospital in your native village but you do not have the resources to do so. this thought come into being becaue of hereditary imprints.
When development reaches a stage, one may come to think of realising the self or understand the Truth. Such thoughts are the outcome of evolutionary force of Nature, which means they are thoughts from Divinity.
You have to decide whether a particular thought is to be translated into action or to be eliminated in the beginning itself. If you assess the thought is not worthy or could be pain resulting, you have to give an autosuggestion that the thought is improper for such and such a reason and that you should not go in action with the thought. whenever the same thought comes again, you will be able to remember your introspection and decision and you will be protected by being on guard against unnecessary involvement.
If this method of analysis is practised, then you will be able to filter every thought as through a sieve and bring out only the best thoughts in actions. This introspection on thought will also assist you in gaining success in the introspection of other aspects starting with Desire.
- Thathuvagnani Vethathiri Maharishi

சனி, 10 மே, 2014

Death

Every living being is a bio-magnetic unit. The human existence is due to the combined activities of
1) Physical body;
2) the astral body(life force)
3) bio-magnetism ...
4) Genetic Centre and
5) the transformation process of bio-magnetism into pressure, sound, light/heat, taste, smell and the special process of mind.
For all the physical and psychic functions the bio-magnetism is the fuel. The charging capacity of bio-magnetism and its capacity to hold reserve in stock are limited. Therefore, both physical and psychic functions cannot continuously and concurrently run without break.
The involuntary physical functions such as digestion, breath, and blood circulation are carried out by theautomatic nervous system; the psychic and sensory functions, which are voluntary actions, are carried by the somatic system. Both are regulated and controlled by central nervous system, for which the blueprint and directing power is the Genetic Centre.
The Genetic centre will control the production, flow and consumption of bio-magnetism to the body and mind. It will shut off the consumption when the minimum critical level is reached. We cannot measure or account the production and consumption of bio-magnetism by our limited capacity of mind.
A certain minimum stock of bio-magnetic force is required for both the autonomic and somatic functions. such minimum critical level of stock is programmed and provided in the body of every living being. of bio-magnetic force charged is not enough to carry out both the somatic and autonomic functions continuously and concurrently. After about 16 hours of conscious activity the pressure force of bio-magnetism is reduced; that indicates that stock is less than the minimum required. At this stage, the balance of pressure of bio-magnetic force in stock, plus the hourly chargeable quantity is only enough to maintain autonomic functions for the next several hours.
So the central nervous system switches off the somatic functions automatically. Conscious sensory functions and movements of limbs stop and man goes to sleep. As one sleeps for several hours the charged biomagnetic force which is surplus after meeting the requirements for the autonomic functions is added to the stock. When the stock is replenished and comes back to the minimum critical level, sufficient pressure comes to the bio-magnetic force that causes the central nervous system to again switch on the somatic functions.
- Thathuvagnaani Vethathiri Maharishi

வெள்ளி, 9 மே, 2014

இறைவன் கொடுத்த இடம் :


அந்தக் காலத்தில் நமது உலக சமுதாய சேவா சங்கத்தில் உறுப்பினர் சந்தாவை அன்பர்கள் புதுப்பித்துக் கொள்வது சரியாக இல்லை. எனவே வருட முடிவில் நானே அவர்களுக்கான சந்தா தொகையை செலுத்தி ரசீது கொடுத்து வந்தேன். சந்தா தொகை ரூபாய் 2. அம்மாதிரி வளர்ந்தது கூடுவாஞ்சேரி உலக சமுதாய சேவா சங்கம். அப்போது கூரைக் கொட்டகை. அந்தக் கொட்டகையும் என் செலவில் தான் கட்டப்பட்டது. அந்தக் கிராமம் மிகவும் பின்தங்கி இருந்தது என்று அதை முனேற்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பள...்ளிக்கூடமாவது வைக்க வேண்டும் என்று நினைத்தேன். மாதிரி கிராமம் போட்டு ஒரு அமைச்சரைக் கூப்பிட்டு திறப்பு விழா செய்தோம்.
பிறகு கலெக்டரிடம் போய் இடத்திற்குக் கேட்டோம். அவர் முனிசிப்பைக் கேட்டார். எவ்வளவு நிலம் இருக்கிறது என்று. 1.36செண்ட் இருக்கு என்றார். சரி என்று கலெக்டர் அது வரைக்கும் உரிமைப் பட்டா கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அதன்படி பட்டா கிடைத்தது. அவ்வளவுக்கும் வேலி போட்டேன். இந்த இடத்தை பிளாட் போட்டு விற்றால் ஒரு பிளாட்டுக்கு ரூ.25,000 கிடைக்குமே என்று அந்த ஊர் ஆட்கள் எல்லாம் காலை வேலையில் தவம் செய்து கொண்டிருந்த நேரம் வந்து அங்கிருந்த கல்லை உடைத்து கம்பி வேலியை அறுத்துப் போட்டு விட்டார்கள். அப்போது ஒரு ஆள், "உள்ளே தான் இருக்கிறார்" என்றான். அதற்கு இன்னொரு ஆள், "வெளியே வரட்டும் அவன் காலை உடைத்து விடுகிறேன்" என்றான். அந்த ஊர் ஆட்கள் எல்லாம் நம் வீட்டில் தறி வேலை செய்தவர்கள்தான். அதற்குள் அம்மா வந்து பார்த்துவிட்டு, என்ன இப்படி செய்கிறார்களே?" என்றாள். நான் சொன்னேன் : " நீ கொஞ்சம் கூட வருத்தப்படக்கூடாது. இறைவன் ஒரு ஆர்டர் கொடுக்கிறான், இந்த ஊர் தகுதியில்லை, உன்னுடைய எதிர்காலத்திற்கு. உனக்கு வேண்டிய இடம் நான் தயாராக வைத்திருக்கிறேன்" என்று சொல்கிறான்" என்று கூறினேன்.

சிந்தனையாற்றல் மிக்க
பகுத்தறிவாளர்களே சேர வாரீர்.."
========================
.
..மரணத்திற்கு அஞ்சாத கடமை ...
-------------------------------------------------------------------
..சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்..
------------------------------------------------------------------
..அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்..
----------------------------------------------------------------------------------------------
.
ஆதி நிலை - அறிவு நிலை :-
"வானவெளி வீடென்ற பேராதார
வலிமைமிக்க வாழ்வடைந்தேன்; அது வரைக்கும்
மோனவெளியை மறந்தே மூச்சு ஓடும்,
மனிதஉடல் வரை அறிவை எல்லை கட்டி
யானடைந்த துன்பத்திற்கு அளவு இல்லை,
இனி என்ன? இரண்டிடமும் ஒன்றே. அங்கே
போனபின்னர் நிலைத்தபின்னர் உணர்ந்து கொண்டேன்
பூர்வீக நிலையன்றிப் புதிது அல்ல."
.
வள்ளலார் அருள் :
"என்று எனை இராமலிங்க வள்ளல் பெருமானார்
எதிர் நின்று காட்சி தந்து அருளைப் பொழிந்தாரோ
அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன் என் வினைத் தூய்மையாச்சு
இன்று எந்தன் மனநிலையோ வள்ளற் பெருமானார்
எந்தச் செயல் செய்யென்று உணர்த்து வாரோ அதுவே
நன்று எனக் கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்."
.
மரணத்திற்கு அஞ்சாத கடமை :-
"மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்."
.
"உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்
உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்."
.
"பங்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்லத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 8 மே, 2014

வினா: சுவாமிஜி, மனிதகுலம் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஒருவர் நினைக்கிறார். உலக அமைதி வேண்டி சமுதாயப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்து... அதே எண்ணத்துடன் உயிரை விடுகிறார். அவருடைய உயிரின் நிலை என்ன ஆகும்?


வேதாத்திரி மகரிஷியின் விடை: இதுபோன்ற சமையங்களில் இந்த எண்ணமானது அவர்களுடைய ஜீவகாந்ததில் பதிந்திருக்கும். ஆனால் அது ஓர் உயர்ந்த ஆன்மாவாக இருப்பதால், உலகத்தில் இதே போன்ற ஒத்த கருத்துடைய மனிதருடன் இணைந்து, தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய செயல்களை ஆற்றும்.

புதன், 7 மே, 2014

ஆஸ்தீகமும் நாஸ்தீகமும்


இயற்கையமைப்பை அதன் ஆதிநிலையிலிருந்து அறிவின் எல்லை வரை அறிந்து கொள்வதே தத்துவ விளக்கம் எனப்படும். தத்துவ விளக்கம் பெற்றவன் இயற்கையே எல்லாமாகவும் தானுமாகவும் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்கின்றான். அவன் வேறு இயற்கை வேறு என்றில்லாத பேதமற்ற நிலையை உணர்ந்து கொண்டால் அவனுக்கு அப்பாலும் அவனுக்கு அந்நியமாகவும் ஏதுமில்லை என்று தெளிவடைகின்றான். இந்தத் தெளிவே 'நாஸ்தீகம்' எனப்படும்.
இந்த நிலையை ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வயது வந்தோர் எல்லோரும் அறிந்தால் அல்லாது மனித இன வாழ்வின் அமைதியும் இன்பமும் நிலைப்பதற்கில்லை. எனவே பல்வேறு அறிவு நிலைகளில் வாழும் உலக மக்கள் இயற்கையின் பூரணநிலையை அறிய வேண்டிய அவசியத்தையும் வழிகளையும் சொல்லுகிறான். அறிந்து கொள்ள முடியாத அறிவின் நிலையில் உள்ளவர்களுக்கு ஆசையும் அச்சமும் ஊட்டும் பல கற்பனைகளின் மூலம் அந்நிலையை நாட வழி செய்கின்றான். இவ்விதம் மக்கள் நம்பிக்கை மீது நல்வாழ்வு காண வகுக்கும் முறைகளே பக்திமார்க்கம் அல்லது ஆஸ்திகம் ஆகும்.
ஆகவே பூரண விளக்கம் பெற்றவனே நாஸ்தீகன். அவன் பரப்புவதே ஆஸ்திகம் ஆகும். நாஸ்திகம் என்பது உண்மையை உணர்ந்த நிலை. ஆஸ்திகம் என்பது உண்மையை உணர மனிதனை நம்பிக்கை மூலம் பக்குவப்படுத்தும் வழி. நாஸ்திகம் பரப்பக் கூடிதல்ல. உணரக்கூடியது. ஆசஸ்தீகமே பரப்பக் கூடியது. அதன் முடிவில் காயே பழமாவது போல் அதுவே நாஸ்தீகமாக மாறிவிடும். அறிவின் மயக்கத்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பேசப்படும் ஆஸ்தீகமும் நாஸ்தீகமும் பயனற்றது மட்டுமல்ல, பலவிதமான தீமைகளை விளைவிப்பனவாகும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா!"
.

ஞானம் தேடும் பக்தர்கள்:

"தேடுகின்ற பொருள் என்ன, ஏன் நமக்கு,
தெரிந்தவர் யார், கிடைக்குமிடம்எது, ஈதெல்லாம்
நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்
ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து
ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;
ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்
வாடுகின்றார்; உளம்நொந்து இருளைத்தேட
விளக்கெடுத்து போவதைப்போல முரண்பாடன்றோ".
.

உண்மை நிலை:

"எல்லையற்ற பரவெளியாய்
எண்ணத்தை விரித்தகன்று
இந்நிலையில் நிற்க நிற்க
இல்லையென்று புலன் உணரும்
இருப்பு நிலையறி வெய்தும்
இது உண்மை உண்மை."
.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 6 மே, 2014

அமைதி

மனித இனம் தோன்றிய காலந்தொட்டு அறியாமை, உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் குற்றங்கள் இருந்து வருகின்றன. இயற்கை அமைப்பை அறியாமை, அவ்வாறு அறியாத்தனத்தினால் எழுந்த தன்முனைப்பு காரணமாக உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் மனிதன் துன்பத்தைத் தனக்கும், பிறருக்கும் விளைவித்துக் கொண்டே இருக்கிறான். எனவே, உண்மை அறிவு மிக வேண்டும்; பிறந்த நோக்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; அதன்படி வாழும் நெ...றியை வகுத்துக் கொண்டு வாழ வேண்டும். அப்போது தான் அமைதியாக இருக்க முடியும். அமைதி என்ற வார்த்தை மிக ஆழமுடையது. இன்பம், துன்பம் என்ற இருவிதமான உணர்ச்சிகள் தான் பெரும்பாலோருக்குத் தெரியும். இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே உள்ள மனோநிலைதான் "அமைதி".

அந்த அமைதியை நாம் எவ்வளவுக்கெவ்வளவு பெருக்கிக் கொள்கிறோமோ, அங்கேதான் அறிவு உயர்வதற்கு இடம் உள்ளது. இல்லையென்றால் துன்பத்திலும், இன்பத்திலும் அறிவு செயல்படும்போது, அறிவு அனுபவம் பெறலாமேயன்றி அறிவு உயர்வதற்கு முடியாது. இன்ப துன்ப அனுபவங்களை ஆராய்ந்து, அதிலிருந்து அறிவைப் பெருக்கிக் கொண்டே, இவன் வந்த நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக இருப்பது 'அமைதி' தான். அந்த அமைதியை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றால், அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அமைதியைக் குலைக்கக்கூடிய சூழ்நிலைகள், செயல்கள் இவைகளையெல்லாம் கண்டு அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும். அத்தகைய முறைகளையெல்லாம் ஒருங்கே உடையதுதான் யோகம் (Meditation). யோகம் என்றாலும் தவம் என்றாலும் ஒன்று தான். இயற்கையை ஒட்டிய வாழ்வு. சமுதாயம், தான், இயற்கை என்ற முக்கூட்டு இயக்கங்களையும் உணர்ந்த வாழ்வு.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 5 மே, 2014

மனவளக்கலைஞன்:



மனம் உருவான விதத்திற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ அவை அனைத்தும் நம்மில் பதிவாகி இருக்கின்றன. இதை மேலடுக்குப் பதிவு என்று...ம் "பிராரப்த கர்மம்' என்றும் சொல்லலாம். அதற்கு முன்னதாக இந்த மனதுக்கு இன்னொரு பதிவு இருக்கிறது. அதுதான் கருவமைப்புப் பதிவு. முதன் முதலில் தோன்றிய மனிதன் முதற்கொண்டு நமது பெற்றோர் வரையிலே எங்கேயும் இடைவிடாமல் கருவமைப்பு ஒரு தொடராக வருகிறது.

அத்தனைப் பிறவிகளிலும் எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள், அனைத்தும் பதிவாக இருக்கின்றன. இந்தப் பதிவைத் தான் 'சஞ்சித கர்மம்' என்றும் 'பழவினை' என்று கூறுகிறார்கள். இப்பதிவுகளை வைத்துக் கொண்டு வாழுகின்ற போது, மனதிற்கு இதே வகையான வினைகளைச் செய்ய தூண்டுதல் வருகிறது. அதனால் மீண்டும் துன்பம் வருகிறது. நோய், மூப்பு, வறுமை, மரணம், என்ற வலைகளில் சிக்கி மனிதன் வாடுகிறான்.

ஆனால் மனிதன் வேண்டுவது நிம்மதி, மன அமைதி. இதற்கு என்ன வேண்டும்? பழைய பதிவுகளினால் ஏற்படுகின்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அறிவின் விழிப்பு நிலையோடு செயலாற்ற வேண்டுமெனில் மனதிற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான ஆர்வத்துடன் கூடிய முயற்சிதான், அந்த ஆற்றலை தருகின்ற ஒரு பயிற்சி தான் "தவம்" (Meditation) என்றும், "தியானம்" என்றும் "யோகம்" என்றும் கூறி சித்தர்கள், மகான்கள் நம்மை வழி நடத்தினார்கள். அதைத்தான் "மனவளக்கலை" என்ற பெயரில் இப்போது நாம் பயில்கிறோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 4 மே, 2014

ஐவகைக் கடமைகள் :



மனிதனுக்கு ஐந்து வகையிலே கடைமைகளுண்டு. அவை 1) தான், 2) குடும்பம், 3) சுற்றம், 4) ஊரார், 5) உலகம் ஆகிய இவைகளாகும். இந்த ஐவகையும் அவரவர்கள் ஆற்றலுக்கும், வயதிற்கும், அறிவிற்கும் தக்கவாறு உயர்த்திக் கொண்டே போகலாம். ஆனால், முதல் முக்கியத்துவம் உடலில் இருக்க வேண்டும். இரண்டாவதாகக் குடும்பம், பிறகு சுற்றம், ஊரார், உலகம் என்று இவ்வாறு விரிய வேண்டும். இந்த ஐந்திலே ஒன்றினால் மற்றொன்று பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் சமுதாயத்திற்காக உழைக்கின்றேன் என்றுக் கூறித் தன் குடும்பத்தைப் பராமரியாது விட்டாலோ, உடல் நலத்தைச் சிதைத்துக் கொண்டாலோ, சமுதாய நலனிற்கு ஒருவர் தொண்டு செய்ய முடியமா ? குடும்ப நலனும், உடல் நலமும் வீணாகிப் போய் விடும், ஒரு மனிதன் நல்ல முறையிலே வாழ்ந்தானேயானால் சமுதாயத்திற்கு லாபமாக, நன்மையாக அமையும். அவ்வாறின்றி அவன் உடல் நலம் குன்றி நோயுற்றால் சமுதாயந்தானே அதற்கு ஈடு செய்ய வேண்டும்? அப்பொழுது சமுதாயத்திற்கு இருவிதத்திலும் நஷ்டமாக வந்தடையும்; முதலாவதாக அவனால் கிடைக்கக்கூடிய லாபம் போய்விட்டது, இரண்டாவதாக அவனால் செலவும் இழப்பும் உண்டாகின்றன.

தனி மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது என்பது சுயநலமல்ல. தன்னைச் சரியாக வைத்துக் கொள்வது, ஆற்றல் உள்ளவனாக மாற்றிக்கொள்வது, கல்வியிலே தேர்ந்தவனாக மாற்றிக்கொள்வது ஆகிய இவையெல்லாம் சுயநலமாகாது. நான் வாழக் கூடிய இந்த சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாக, நல்ல தொண்டனாக வரவேண்டுமென்ற ஒரு அடிப்படையிலேதான் ஒரு மனிதனுடைய நலம். அவனை அறியாமலேயே அவன் செய்யக்கூடிய நல்ல காரியங்களெல்லாம் கூட சமுதாயத்திற்கு நன்மையாகவே முடியும். பிறர்க்குத் தொண்டாற்ற வேண்டும், பிறர்படும் துன்பத்தை நீக்கித் துணை புரிய வேண்டும் என்ற வகையிலே தனி ம
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்திய கடன்".
.

"கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்".
.

பொருள் மதிப்பு:

"வாழ்க்கைச் செலவிற் கேற்ற
வரவிலையேல் பண்பாட்டை
வளர்க்கவோ காக்கவோ
வழியில்லை இதையுணர்வீர்"
.

கருதவமே போதும் :

"கல்லும் மரமும் மௌன நிலையில் நின்று
கடமை தவறாது பயனாகும்போது
சொல்லும் கருத்தும் உடைய மனிதன் ஏனோ
சுகங்கெட்டுச் சமூகத்தை மறக்க வேண்டும்;
அல்லும் பகலும் ஆசை ஒழிக்க வென்றே
ஆசைதனை பேராசையாக்கிக் கொண்டு
தொல்லை படும் அன்பர்களே சுருங்கச் சொல்வேன்
சுய நிலையை அறிய கருதவமே போதும்."
னிதனுடைய தயாரிப்பு நிலை சமுதாய வளத்தையே பெருக்கச் செய்யும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 3 மே, 2014

புலன் வழி தொடர்பு :

காயின்றிப் பழம் இருக்க முடியாது. காயாக இருக்கும் போது சுவை வேறுதான். ஆனால் காய் வேறு, பழம் வேறு அல்ல. காயினுடைய முதிர்ச்சிதான் பழம். எந்த ஞானியாக இருந்தாலும் உடலை எடுத்தவுடனே... ஐந்து புலன்கள் தான் இயங்க ஆரம்பிக்கும், மூளை வளர்ச்சி வளரும் வரையிலே அன்னை வயிற்றிலே ஒரு air-conditioned நிலை, சமமான உணர்வு; குழந்தைக்கு உணர்ச்சி இல்லை. வெளிச்சம் இல்லை, சுவையில்லை, மனம் இல்லை, ஐந்து புலன்களும் இயங்கவில்லை. வெளியே வந்து விழுந்தவுடனே அந்தச் சூழ்நிலைக்கும் இந்தச் சூழ்நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உடல் முழுவதும் பற்றி எறிவது போன்ற உணர்ச்சி, நாம் air-conditioned அறையிலிருந்து வெளியே வந்தொமேயானால் சில இடங்களில் பளிச்சென்று அடிப்பது போன்ற உணர்வு எற்படுகின்றதல்லவா, இது போன்றே பிறந்த குழந்தை உணர்வைப் பெறுகின்றது; வீர், வீரென்று கத்துகின்றது. அதன்பிறகு சிறிது நேரத்திலே சுவைக்குச் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கின்றார்கள். ஏதோ வெளிச்சம் தெரிகின்றது, பார்க்கின்றது; ஏதோ பேசுகின்றார்கள் கேட்கின்றது. இப்படி ஒவ்வொன்றாகப் புலன்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது முதலில் ஞானியாக இருந்தாலும் அவர்களுக்கும் புலன் வழிதான் உலகத் தொடர்பு ஏற்படுகின்றது. அதன் பிறகு தான் உள்ளொளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைகின்றது.
 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"உள்ளொளியாக உள்ள அறிவு பிரகாசம் அடைய ஏற்ற வழி
குழந்தைகளை பண்படுத்தல்".
-------------------------------------------------------------------------------
.

"குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும்;
இது உலக சமுதாய சங்க நோக்கம்" - மகரிஷி.
--------------------------------------------------------------------------------------
.

"வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ
வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;
பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து
பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்
ஒழுக்க உணர்வொடு நீதி இன்பம் நேர்மை
உயர்வு எனும் சொற்களுக்கு அருத்தம் காணும்
இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண
ஏற்றவழி குழந்தைகளை பண்படுத்தல்".
.

"குழந்தைகளைக் கொண்டுலகைச் சீர்திருத்தக்
கொடுமையின்றி கருத்து செயல் இரண்டும் வாழ்வில்
இழைந்துயரும். படிப்படியாய் உலகம் உய்யும்.
இது உலக சமுதாய சங்க நோக்கம்"
.

பெற்றோர்தவம் பிள்ளைகள் நலம்:

"பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து
பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்ஆகும்
பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்
பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்றவேண்டும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 2 மே, 2014

ஐவகை அறிவுத்திறன்:


பொதுவான அறிவுத் திறனை ஐவகையாகப் பிரிக்கலாம்: அவை (1) இயற்கை அறிவு (Instinct) (2). நுண்மாண் நுழைபுலனறிவு (Perspicacity ). (3). உள்ளுணர்வு அறிவு (Intuition). (4). ...தேர்ந்த அறிவு (Knowledge). (5) மெய்யறிவு (Wisdom) என்பனவாகும்.

இவற்றில் இயற்கை அறிவு எல்லா உயிர்களுக்கும் பொது. இயற்கையின் வளமான இருப்புகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தனது தேவைகளை முறைப்படுத்திக் கொள்ளும் சிறப்பாற்றலே இயற்கை அறிவாகும். விளைவைக் கணித்த விழிப்பில் முயற்சியோடும் சிந்தனையோடும் செயல்புரியும் பண்பாய் வருவதே நுண்மாண் நுழைபுலனறிவாகும். நுணுகிய சிறப்புள்ள, ஊடுருவிக் கூர்ந்துணரும் அறிவாற்றலே அது. இந்த அறிவின் வளர்ச்சிப் போக்கில் இயற்கை யறிவு மறைந்து நிற்கும். வளர்ச்சி பெற்று விழிப்பும் சிந்தனையும் கூடும்போது அறிவு பெறும் உயர் திறனே உள்ளுணர்வு ஆகும். தனது அனுபவத்தாலும் பிறர் சொல் மூலமும் நூல் வாயிலாகவும் வளர்த்துக் கொள்ளும் அறிவே தேர்ந்த அறிவாகும். இது அவரவர்களுக்கு அவ்வப்போது அமையும் சூழ்நிலைகளுக்கேற்ப வேறுபாடுகளையும் சிறப்பினையும் அடையும். அணு முதல் அண்டங்கள் வரையில், மெய்ப்பொருள் முதல் உயிர்கள் வரையில், இயற்கை முதல் எண்ணம் வரையில் ஒன்று கூட்டித் தொகுத்துணரும் பேரறிவே மெய்யறிவாகும். இதுவே அறிவின் முழுமைப்பேறாகும். முன்னர் விளக்கப்பட்ட நான்கு வகை அறிவும் இங்கு இணைந்து செயல்படும். முற்றும் உணர்ந்து தெளிந்த அறிவு உறுதி, அயரா விழிப்பு, விளங்கிய வழியில் பிறழாது செயல்புரியும் பண்பு, அனைத்துயிர்களின் வாழ்க்கை நல விழைவு, இவையெல்லாம் அடக்கமாகக் கொண்டதே மெய்யறிவாகும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

"தெய்வீகப் பேராற்றல் ஒவ்வொரு ஜீவனிலும் -
அதன் அறிவாக உள்ளது".
.

ஓர்மை நிலைப்பயிற்சி :

"நினைப்பும் மறப்பும் அற்று இருக்க
நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம்
அமைதி கிட்டிடும் ஆங்கே;
ஒன்றையும் நினையாது
உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது,
நீயறி நினைவை நிறுத்தி."
.

"இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்றால்
அது தான் அமைதி".




- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

அகம் பிரம்மாஷ்மி

கடலிலிருந்து நீர் ஆவியாக மாறி , மேகமாகி, மழையாகி, வெள்ளமாகி , பூமியில் ஓடும்நீர் முடிவில் கடலையே நாடி ஓடுகிறது . கடலை அடைந்த பின்னர் தான் அதன் வேகம் தணிந்து அமைதி நிலை பெறுகிறது . அதே போன்று இறைநிலையில் இருந்து தோன்றி பற்பல நிகழ்ச்சிகளாகி , அறிவாகி இயங்கும் ஆற்றலானது அதன் மூல நிலையை நாடுகிறது. அதையறிந்து அதனை அடைந்த பின்னரே அமைதி பெறுகிறது .


அறிவை அறிய அறிவு திருப்பம் பெரும் போது தான் , தனது இயக்கக் களமான உயிரை உணர்ந்து தனது மூலநிலையை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது... தான் "நான் யார்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.இறைநிலையே நானாக என்னுள்ளே அறிவாக இயங்கிக் கொண்டிருப்பதை உணர முடியும் . இதுவே "அகம் பிரம்மாஷ்மி " .


இறைநிலை என்னிடத்தில் அறிவாக இருப்பது போல எல்லா உயிர்களிடத்திலும் இறைநிலையே உள்ளது என்று உணரும் போது எந்த உயிருக்கு துன்பம் கொடுக்கமலும் துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்வோம் .

தனக்கும் , மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுப்பது அந்த இறைவனுக்கே கொடுக்கும் துன்பமாக நினைப்போம் . அவ்வாறு இறைநிலையே எல்லாமாக உள்ளது என்று உணர்ந்து கொள்ளும் போது "எல்லா உயிர்களிடத்தும் அன்பும் , கருணையும் தோன்றும்.

--அருள் தந்தை

வாழ்க வளமுடன்