Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 31 ஜனவரி, 2015

கருமையம் தூய்மையாக இருக்கட்டும்

உடலுக்கு மூலப் பொருள் வித்து உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்
மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்.இவை மூன்றும் மையம்
கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.
கருமையம் தான் மனிதனின் பெருநிதி;
செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன்; தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.
இத்தகைய பெருமை வாய்ந்த கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்.
1) பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.
2) ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.
3) அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.
4) இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.
5) பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.
6)இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.
7) மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.
8) நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக
விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும்
வாழ்ந்து வருதல்.
9) உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும்
அன்போடும் பழகுதல்.
10) தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.

நாம் செய்யக் கூடிய செயல்களான உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் என்ற இவை ஐந்தில் அலட்சியம் செய்யாமலும், மிதமிஞ்சி அனுபவிக்காமலும்,முரண்பாடாக அனுபவிக்காலும், இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொருவருடைய உடலும் மனமும் இயங்கிக் கொண்டிருப்பதனால், மற்றவர்களுடன் முரண்படாது இருக்க வேண்டும். பிறருடைய உடலுக்குத் துன்பமோ, மனதுக்கு வருத்தமோ - நம்மால் ஏற்படாது இருக்க வேண்டும். இந்த விழிப்பு நிலை தான் இறைவழிபாடு".
.

"திறந்து கொள் தான் தனது என்று சொல்லும்
சிற்றறையை. வெளியேவா. அகன்று நோக்கி
பறந்துலவு உலக சமுதாயத்தின் பரப்பகத்தில்.
பற்று அறும் கடமையினால் பழுக்கும் ஞானம்".
.

கருமையத் தூய்மை கவி :

"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம் உடலுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஓர் உலக ஆட்சி

அரசியல் தலைவர்களாலோ, மதத் தலைவர்களாலோ, பொருள் துறைத்தலைவர்களாலோ உலகில் அமைதி ஏற்படுத்திட முடியாது. ஏனெனில் இவர்கள் தனித்தன்மையில் எவ்வளவு தான் உயர்நோக்கம் உடையவர்களாக இருந்த போதிலும், ஒரு குறிப்பிட்ட வகையில் வாழ்க்கை நலத்தில் எல்லை கட்டி குழுவினர்கள் அளித்துள்ள பதவி, பணம், இவற்றிற்குக் கட்டுப்பட்டவர்கள். ஆகவே ஆன்மீகத் துறையில் உலக மக்கள் அனைவரையும் பொறுப்புடன் இணைத்து நலம் காக்க ஆன்மீக நோக்குடைய ஒரு இயக்கம் தான் நேர்-நிறை உணர்வோடு உலக அமைதிக்கு வழிகாட்ட முடியும்.
.
நான் கொடுக்கும் திட்டமோ, மிகவும் எளிது; புரிந்து கொள்ளவும் செயல்படுத்தவும் இயல்பானது. ஐக்கிய நாடுகள் சபைக்குப் போதிய அதிகாரமளித்து உலக நாடுகள் ஒன்றிணைந்து உலகிலுள்ள எல்லா ஆட்சி எல்லைகளையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போதுள்ள எல்லைத் தகராறுகளை ஐ.நா. சபை ஏற்படுத்தும் நீதிமன்றத்தின் மூலம் எல்லா நாடுகளும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டமும் செயலும் நாம் கொடுக்கும் திட்டத்தின் சாரமாகும். எல்லைகளின் பாதுகாப்பு ஐ.நா.சபை மூலம் உலகம் ஏற்றுக் கொண்டால் தனித்தனியே எந்நாட்டுக்கும் ராணுவம் தேவைப்படாது.
.
இன்றுள்ள ராணுவ அமைப்புச் செலவையும், போர் வீரர்களின் சேவையையும், பின்தங்கிய நாடு, பின்தங்கிய மக்கள் இவர்கள் முன்னுக்கு வரவேண்டிய சேவைகளில் ஐ.நா. சபை மூலம் ஈடுபடுத்தி விடலாம். ராணுவத்தின் செலவும் ஆற்றலும் மக்கள் நல சேவைக்குத் திருப்பப்பட்டு விட்டால் 15 ஆண்டுக் காலத்திற்குள்ளாக உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் சமமான பொருளாதார வசதியோடும், அன்பு வளம் பெற்ற உள்ளங்களோடும் அமைதியாக வாழ முடியும்.
.
உலகெங்கும் ஊர் வாரியாக நகர் வாரியாக, நாடுகள் வாரியாக இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிந்திக்கவும். எந்த பிரிவினருக்கும் இழப்பில்லாத வகையில் உலக அமைதி எற்படத்தக்கவாறு முடிவெடுத்துப் பின்பற்றலாம். இந்த பெருநோக்கச் சேவையாற்ற வாக்கு, பொருள், ஆற்றல் என்ற எவ்வகையாலும் உலகுக்குத் தொண்டு செய்ய வாருங்கள். கூடுங்கள். நலம் செய்து நலம் கண்டு மகிழுங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உலக சமாதானம் வேண்டுமானால் முதலில்
மனிதன் மனதில் அமைதி வந்தாக வேண்டும்".
.
உலக நல வேட்பு :
"உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்,
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்;
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்."
.
"அறியாமை அழிவுக்குத் துணை போகும்,
ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்".
.
"அறிவறிந்தோர் எண்ணிக்கை பெருகவேண்டும்
அன்பு கடமை ஆட்சி அறம் தொண்டெல்லாம்
அறிவறிந்தோர் விளக்கும் வாறுணர்ந்து போற்றி
அருள் நெறியில் மக்களெல்லாம் வாழவேண்டும்
அறிவறிந்தோர் விளக்கத்தால் பழக்கம் சீராம்
அறக் கல்வி குழந்தைகட்குக் கிட்டவேண்டும்
அறிவறிந்தோர் அகன்ற கருத்தில் உதிக்கும்
ஆட்சிமுறை மலர்ந்துலகம் உய்யவேண்டும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 29 ஜனவரி, 2015

வருமுன் காப்போம்


உடலில் ஏற்கனவே இருக்கக்கூடிய நோய்களைப் போக்கிக்கொள்வது என்பது ஒரு முறை. அதைச் சிகிச்சை (Cure) என்று சொல்வார்கள். நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒருமுறை என்னவென்றால், நோய்வராமலே தடுத்துக் கொள்வது (Prevention) என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு விழிப்பு, அதற்குறிய செயல், ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக்கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத் தடுத்துக் கொள்வது சுலபமானது எனத் தெரியவரும்.
...
மருத்துவத்துறை விஞ்ஞானிகள் முயற்சிகூடப் பெரும்பாலும் வந்த நோயைத் தீர்த்துக் கொள்வதோடு நிற்கிறது. அதுவே என்ன ஆகும் என்று பார்ப்போமானால், ஒரு நோய் குறிப்பிட்ட இடத்தில் வந்ததென்றால் அந்த நோய் அந்த இடத்தை மட்டும் சேர்ந்ததாக இராது. வேறு ஏதோ ஒரு இடத்திலே, உறுப்பிலே அது ஆரம்பித்திருக்கலாம். உதாரணமாக, அஜீரணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனாலே தலைவலி இருக்கும். அந்தத் தலைவலிக்குத் தைலம் போட்டு விட்டால் அஜீரணம் போகுமா? போகாது. அதுபோல நோய் ஒரு இடத்தில் இருக்கும் அதனுடைய அறிகுறி அல்லது வெளித்தோற்றம் (symptom) வேறு இடத்தில் இருக்கும். சிகிச்சை முறையிலே என்ன செய்கிறோம் என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், அந்த வால்வு இயக்கங்கள் ஊக்கிவிடப்படுகின்றன. ஆனால், உடல் முழுவதும் அந்தப் பாகம் நீங்கலாக மற்ற பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் அந்த மருந்தாலே ஊக்கப்படுத்தப் பெறுகின்றன. சரியாக, திட்டமாக, அளவோடு, நன்றாக ஓடக்கூடிய குதிரைக்கு ஒரு சவுக்கடி கொடுத்தால் என்ன ஆகும். அந்த மாதிரி அந்த பாகங்களிலுள்ள இயக்கம் Accelerate ஆகும், Aggravate ஆகும். விளைவு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகலாம். அந்த ஒரு இடத்தில் ஏற்பட்ட நோய் போகும்; மற்ற இடத்தில் நோய் வரும். எனவே தான் சொன்னேன் – சிகிச்சை (cure) என்பதைவிட நோய் வராமல் காப்பதுதான் நல்லது என்று.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

புதன், 28 ஜனவரி, 2015

மனிதனின் சிறப்பு


 உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறை நிலையை முழுமையாக எடுத்துக்காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.
உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள் அருட் பேராற்றலின் இயற்கை (மெய்ப்பொருள்) இவ்வாறு ஒன்றில் ஒன்றாக நிலைகொண்டு மனித உரு சிறப்பாக, வியத்தகு முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் குறிப்பிட்ட அளவு பருமனால் எல்லை உடையது. உயிரானது நுண்ணியக்க மூலக்கூ...றான விண் எனும் நுண் துகள்கள் கோடிக்கணக்கில் ஒன்றிணைந்து ஒரு தொகுப்பாக இயங்கும் ஆற்றல். இந்த உயிரானது உடலுக்குள் சுருங்கவும், உடலுக்குப் புறத்தே தக்க அளவு விரியவும் கூடியது.
அறிவு என்பது உயிரை மையமாகக் கொண்ட மெய்ப்பொருள். உடல் மூலம் ஆற்றிய வினைகளினால் பெற்ற அனுபவம், சிந்தனை, கற்பனை இவற்றிற்கேற்ப விரிந்தும், சுருங்கியும் செயல்புரியும் ஆற்றலு டையது. அறிவில் அடங்கியுள்ள இரகசியங்கள் எண்ணி அறிய முடியா தவை. எல்லாம் வல்ல முழுமுதற் பொருளான மெய்ப்பொருள் உயிராற் றலை மையமாகக் கொண்டு தனது அசைவினாலும், உணர்வாலும் ஆற்றிய வினைப்பதிவுகள் அனைத்தும் அடக்கம் பெற்ற கருவூலம் அறிவு ஆகும். இது உயிர்த்துகளின் மையத்தில் தொடங்கி உயிர்த்துகள் தற்சுழற்சியால் விளையும் ஜீவகாந்த சக்தி மூலம் உடல் வரையிலும் மேலும் உடலுக்கு வெளியே புலன்கள் மூலம் உணரும் பொருட்கள் வரையிலும் யூகத்தால் பேரியக்க மண்டலம், அதற்கப்பால் நிலைத்த சுத்தவெளி எனக் கருதப்படும் மெய்ப்பொருள் வரையிலும் விரிந்து சுருங்கும் இயல்புடையது.

எல்லாம் வல்ல மெய்ப்பொருளே சுத்தவெளியாகவும், மெய்ப் பொரு ளாகவும் விண் முதல் மண் வரையிலான பஞ்ச பூதங்களின் இணைப்பால் ஆகிய பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் இயக்க ஒழுங்கா கவும், உயிர்களிடத்தில் புலனுணர்வாகவும், மனிதனிடத்தில் எல்லாமாக இருக்கும், தன் முழுமையை உணரும் பேரறிவாகவும் இருக்கிறது. இந்த நான்கு தத்துவங்களும் ஒன்றிணைந்த மாபெரும் வல்லமையுடைய அறிவிலும், செயலிலும் சிறந்ததோர் உருவம் மனிதன்.
- அருள் தந்தை

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சாந்தம்

நாம் உடலால் வேறுபட்டு இருக்கின்ற போதிலும் உள்ளம் என்ற நிலையால் நமக்கும் தெரியாமலே உலக மக்கள் அனைவரோடும் ஒன்றுபட்டே இருக்கின்றோம். ஆகவே நாம் சிந்தனை செய்யும் போது நமது அறிவின் கூர்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப, பல அறிஞர்களோடு ஒன்றுபடுகிறோம். நமது அனுபவத்திற்கு எட்டாத விஷயங்கள் பலவற்றை நாம் அறிந்து கொள்வதே இதற்குச் சான்று.
.
இதே போன்று நாம் கோபம் அடையும் போது பல முரடர்களோடும் முட்டாள்களோடும் ஒன்றுபடுகிறோம். நாம் விரும்பாத, நாமே வெட்கப்படத்தக்க, நாமே வருந்தத்தக்க சில செயல்களை நாம் கோபத்தின் போது செய்து விடுவதே இதற்குச் சான்று ஆகும்.
.
நமது கோபத்தை அடக்கிக் கொள்ள நம்மால் முடியவில்லை. எனில் பிறர் மீது எப்படி, ஏன் கோபம் கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டும்.
.
நாம் சாந்தமாக இருக்கும் போதெல்லாம் நான் கோபத்தை ஒழித்து விடுவேன் என்ற திட சங்கற்பத்தை பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால் முதலில் சில சமயங்களில் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
.
வருமானம் கிடைக்கும் போது சேமித்து வைக்கும் பணம் தேவையான போது உதவியாவதைப் போல், சாந்தமாக இருக்கும் போது கொள்ளும் உறுதி, கோபம் எழும்போது வாழ்வில் ஒரு புதிய திருப்பம் உண்டாக முன் வந்து நிற்கும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சரணாகதியெனும் சாந்தநெறி :
"தனையடக்கித் தலைவனையே
முன்வைத்து ஒழுகும் நெறி
சரணாகதியெனும்
சாந்தநெறி; இந்நெறியில்
தனைத் தலைவனாய் காணும்
தன்மை இயல்பாய் வளரும்
தருக்கொழியும்; ஆசிரியன்
தவக்காப்பில் உயிர் உய்யும்."
.
"சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறிய செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தபெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷ செய்தி இதுவே."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 26 ஜனவரி, 2015

மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.. மகரிஷியின் வேண்டுகோள்.


வரலாற்றுப்படி பார்த்தால், ஒரு சிலரே தெய்வம் பற்றிய உண்மை உணர்வைப் பெற்றிருக்கிறார்கள். பலரால் அ...து முடியவில்லை. எனவே மனிதப் பண்பாடு, கடவுள் அவதாரம் பற்றிய கதைகளையே நன்றாக மனதில் பதியச் செய்து கொண்ட காரணத்தால் கடவுளை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுகிற நிலை இருந்தது. பெருவாரியான மக்களுக்கு சுத்தவெளிதான் தெய்வம் என்பதையும் அதுவேதான் உடல், மனம், பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் நடத்துகின்றது என்பதையும் நம்புவது சிரமமாக இருக்கிறது. அவதாரம் என்று கொள்வதோ அல்லது சிலைவடிவில் எல்லை கட்டி வைத்திருப்பதோ வேகம், பருமன், காலம், தூரம் என்ற அளவைகளுக்கு உட்பட்டும் இன்பதுன்ப உணர்வுகளுக்கு உட்பட்டும் ஒரு குறுகிய மனநிலையையே விளைவித்து இருக்கிறது. மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகள் கடவுள் நிலை என்பதை எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது, எல்லாப் பொருட்களூடும் நின்று இயங்குவது என்றும் அதுதான் பிரபஞ்ச தோற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆதிநிலை என்றும் விளக்கினார்கள்.
கடவுளை அவதாரங்களாகச் சிலை வடிவத்திலே வழிபட்டவர்களுக்கும் மெய்யுணர்வு பெற்ற தத்துவ ஞானிகளின் கூற்று ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சிலை வழிபாடு என்பது குழந்தைகளுக்கும், அறிவு வளர்ச்சி பெறாதவர்களுக்கும் ஒரு வடிவத்தையும், குணத்தையும் மனதிலே உருவகப்படுத்திக் கொண்டு அறிவை விரித்து வழிபடுவதற்காக ஏற்பட்ட முறை ஆகும். இத்தகைய வழிபாட்டு முறையில் வழிபடுபவர் தன்னுடைய அறிவையே விரித்து வழிபடுகிற பொருள் மீது பரவ விடுவதால் அவருடைய அறிவு எந்தத் தன்மையாக இருக்கிறதோ அந்தத் தன்மையிலேயேதான் வழிபடுகிற பொருளையும் காண்கிறார். இத்தகைய வழிபாடானது ஏதாவது ஒரு தொழில் வெற்றியையோ அல்லது பொருள் வளத்தையோ மையமாகக் கொண்டே அமைகின்றது. இந்த வழிபாட்டு முறை பழக்கமானது, ஒருவரை அவர் உணர்வாகப் பெறவேண்டிய இறைநிலை உணர்விலிருந்து பிரித்தே வைத்திருக்கிறது. மெய்யறிவை நாடி ஆன்மீக வளம் பெறாதவரை, வாழ்க்கை எப்படி பயனுள்ளதாக அமைய முடியும்?
வழிபாட்டு முறையிலே இருக்கிற பழக்கங்களும், வழக்கங்களும் மனதை ஒரு எல்லை கட்டிய நிலையிலேயே குறுகி இருக்கச் செய்து, தெய்வம் பற்றிய உண்மை நிலையை அறியவொட்டாமல் தடுக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்திற்கு இந்த நிலையானது பெரிய தடையாகும். மனிதனுக்கு உரிய ஆறாவது அறிவை சிறப்பித்துக் கொள்ளவோ, முழுமை பெறவோ, பயிற்சியும் பழக்கமும் மேற்கொள்ளவில்லை என்றால் அம்மனிதன் ஐயறிவு வரையிலே எல்லை கட்டிக் கொள்வான். விலங்கினச் செயல்களிலிருந்தும், குணங்களிலிருந்தும் விடுபட முடியாது. இந்த நிலைமை நீடிக்கவிட்டால், தனி மனிதன் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் வாழ்வில் பிணக்கு, போர், குற்றங்கள், சிக்கல்கள் துன்பங்கள் பெருகிக் கொண்டேயிருக்கும்.
ஆன்மீகத் தாகம் நிரம்பியுள்ள எனதன்புக்குரிய சகோதர சகோதரிகளே! தயவுசெய்து மனிதனாகத் தனக்குத் தானே அறியாமையினால் போட்டுக் கொண்ட இத்தகைய கற்பனை வலையிலிருந்து விடுபட்டு, மனதை விரித்து, எல்லாம் வல்ல மெய்ப் பொருளை உணரப் பழகிக் கொள்ளுங்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
கட- உள் என்ற இரு சொல்...
கட- உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்,
கருத்தறியான் ஊன்றி இதைக் காணவில்லை,
கட- உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி
கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்;
கட- உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்க் கூட்டி
கடவுள் என்றே சொல்லிச் சொல்லி வழக்கமாச்சு;
கட- உள் என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்
கடவுள் எங்கே? என்று பலர் தேடுகின்றார்.!
பேரறிவுக்குப் பத்து படிகள் :
பேரியக்க மண்டலத்தை, தத்துவங்கள்
பத்தாக விளங்கிக் கொள்வோம்
பெரியசுமை மனதிலிருந்திறங்கி விடும்
மனம் அறிவாம் சிவமுமாகும்;
ஓரியக்கமற்றநிலை வெட்டவெளி
இருப்பு அதுவே ஆதியாகும்,
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
விண்ணாகும், அதிலெழுந்த
நேரியக்க விரிவு அலை நெடுவெளியில்
கலப்புற வான் காந்தமாச்சு;
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலிஒளி
சுவையாம் மணம், மனம் ஆம்,
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
உள்ளுணர்ந்தால் அது மெய்ஞ்ஞானம்.
சிந்திப்போம் உணர்ந்திடுவோம் சேர்ந்திருப்போம்
இறைநிலையோ டென்றும் எங்கும்".
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

நிதானமாக செயல்புரிவோம்

நாம் ஒரு பொருளை அவசரத்தில் தேடும் போது கிடைப்பதில்லை, அது நாம் வைத்த இடத்தில் தான் இருக்கும் ஆனால் அவசரத்தில் நாம் தேடும்போது புலப்படாது.!
இதற்கு எடுத்துக்காட்டாக பழமொழி கூறுவார்கள்..
.
“அவசரத்தில் கையை விட்டால் அண்டாகுள்ள கூட கை நுழையாது”...
.
எதனால் என்று யாரும் யொசிப்பதில்லை..

இதற்கு மகரிஷி அவர்களின் விளக்கம்..
.
நாம் ஒரு பொருளை மன அலைச்சுழல் வேகம் குறைவாக இருக்கும் சமயம் ஒரு இடத்தில் வைக்கின்றோம்
அதே பொருளை வேறொரு அலைச்சுழல் வேகத்தில் மனம் செயல்படும்போது தேடுகின்றோம். இந்த வித்தியாசத்தினால் நாம் தேடும் பொருள் நமக்கு கிடைப்பதில்லை.//
.
.
அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் மற்றொரு நபர் எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார். ஏனெனில் அவரின் மன அலைச்சுழல் வெகம் அந்த நேரத்தில் குறைவாக இருப்பதால்.
.
.
எனவே தவம் செய்து மன அலைச்சுழல் வேகத்தை குறைத்து நிதானமாக செயல்புரிவோம்

சனி, 24 ஜனவரி, 2015

Suffering

You must understand the simple fact that no-one can harm another according to his whims fancies. Sufferings come to you under the law of cause-and-effect; and the person who causes the suffering is only agent of this Law.
Everyone carries within him the imprints of his Karma. When a person does something wrong, something sinful, he has to bear the consequences of such actions. Nature has to bring out and erase the imprints of sins and thus purify him. This process of purification may sometimes be achieved by the individual's own action that may result in pain or suffering to him. At other times the pain or suffering may come to him through the action of others.
Whatever be the agency through which pain comes, you must not forget that the cause was in your own deeds and that the suffering that falls to your lot is meant to purify you.
The individual who causes pain to you is only an instrument in the hands of Nature. His own Karma has made him do harm to you. He will have to bear the consequences of his actions sooner or later, but that is not your concern.
What you must constantly remember is that nothing in the Universe can bring you suffering unless your actions warrant it.
- Shri Vethathiri Maharishi

வியாழன், 22 ஜனவரி, 2015

மந்திரமும், அதை உச்சரிப்பதற்கான காரணமும்..


 .
.
பக்தியோகத்தில் கடவுளை வணங்கும்போது மனம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை எடுக்க வேண்டும்.
...
மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதை நிறைவு செய்ய அதற்கு தகுந்தாற்போல் கடவுளுக்கு உருவம், குணம் அமைத்துள்ளார்கள்.
.
.
மனம் அந்த வடிவத்தை எடுக்கும்பொழுது என்ன பலனை அடையவேண்டுமோ அந்த நுணுகிய நிலைக்குச்செல்ல வேண்டும்.
.
புறமனதிலிருந்து நடுமனதிற்கும், பிறகு அடிமனதிற்கும்(super conscious mind) செல்ல வேண்டும்.
.
மனம் அந்த நிலைக்குச்செல்ல அதற்கேற்றவாறு 51 அட்சரங்களிலிருந்து ஒலி வடிவத்தை சித்தர்கள் அமைத்துள்ளார்கள்.
.
அந்த ஒலி வடிவங்களை தொடர்ந்து ஒலிட்துக்கொண்டே இருந்தால் நாடி நரம்புகளிலெல்லாம் ஜீவகாந்த ஆற்றல், இயக்கத்தை ஏற்படுத்தி நுணுகிய நிலைக்கு மனதை கொண்டுவருகிறது என்பதை நீண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு கண்டுபிடித்துள்ளார்கள்
.
வாழ்வில் மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம் என்று பெயர். அவ்வாறு அமைந்த சொல்லை உச்சரிக்கும்போது..முதலுக்கும், முடிவுக்கும் இடைப்பட்ட ஒலியே (cubic inches of air)மந்திரம் எனப்படும்.
.
.
மந்திரங்களை உச்சரிக்கும்பொழுது புறமனம் , அடிமனதிற்கு செல்கிறது. அடிமனம் இறைநிலையோடு தொடர்புடையது.
.
“முழுமையின் பின்னம் முறையிட்டுக்கேட்டால் முழுமை அதைக்கொடுக்கும்” (if fraction demands the totaly will supply) அதற்கு உடலும் மனமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
.
அதற்காகவே வழிபாட்டில் மந்திரங்களை இணைத்து வைத்துள்ளார்கள்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

philosophy of Nature

The energy particle started only from Space; from this you can imagine the mightiness of Space itself is potential energy. A fraction of it became the energy particle. The philosophical mind can visualize this pressure force and order of function. This is not science. Science observes and calculates. Beyond these, what we understand is the philosophy of Nature.
- Vethathiri Maharishi

செவ்வாய், 20 ஜனவரி, 2015

குறை காணா மனம் :


 " மனிதப்பிறவியின் நோக்கமும் ,கடமையும் உயர்ந்தவை. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் .

குறைகூறுவோரையும் வாழ்த்தி வர வர அவர் தானே உணர்ந்து திருந்த வழி காணலாம். ...

இதற்குப் பொறுமையும் தன்னம்பிக்கையும் தாம் வேண்டும்.

பிறரை குறை கூறி தான் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களது உள்ளத்தில் இது வரை அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த நிலையிலிருந்து கீழே தள்ளப்படுகிறார்கள் .

பிறரிடம் குறை காணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும்.மனிதனுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது.

இக்குறுகிய கால வாழ்வில், பிறந்தோர் எல்லாம் வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும்" .

"குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே

பெறபயன், சினம்வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால்

முற்றும் இழந்தார் வாழ்வின் இன்பமும்; பிறவிப் பயன்

நற்றவத்தோர் வழிநின்று நல்லனவெலாம் ரசிப்போம் ".

---வேதாத்திரி மகரிஷி

மனம், உயிர், தெய்வநிலை :



மனம், உயிர்,தெய்வநிலை ஆகியவை மறைபொருள்கள், அவற்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது. புலன்களைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். புலன்களுக்கு உபகருவிகள் துணையைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். அறிவைக் கொண்டு ஆராய்வது மெய்ஞானம்.
...
உடலைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறோம். மனதைப் பற்றியும் அறிய வேண்டும். இந்த ஆராய்ச்சி உயிரைப் பற்றி அறிவதில் கொண்டுபோய் விடும். உயிரைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு தன்னிலை விளக்கத்தில் முடியும். இந்த இடமே எல்லா ஆராய்ச்சிகளின் முடிவு. அருள்துறைக்கு உயிர் என்ற சொல்லை மையமாக வைத்து ஆன்மிகம் [ஆங்கிலத்தில் கூட ...... Spirit ....... Spiritualism] என பெயர் வைத்திருக்கிறார்கள்.

தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில் இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப் பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும். ஆனால் தன் மூலத்தை தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் என்னும் மனவளக்கலை.

இதனை மாணவர்கள் பயில்வதால், அறிவுத் தெளிவும், கடமையுணர்வும் பெறலாம். படிப்புக்கும் நன்மை தரும். பிற்கால வாழ்க்கையின் உயர்வுக்கு இப்போதே அஸ்திவாரம் அமைத்ததாகும். படிப்புக்கோ, வேறு அன்றாட காரியங்களுக்கோ சிறிதும் இடையூறின்றி மனவளக்கலை பயிலலாம். இதற்கு ஒதுக்கிய சிறிது நேரம், படிக்க ஒதுக்கும் பெரிய நேரத்தையும் குறைக்க உதவும். மனம் செம்மையும், பிரகாசமும் பெறும்.
                                                                                                               

                                                                                                                  -வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

God

God is not separate from anything in the world. God is all-penetrating, in everything in the world, every living being in the world. This truth must be understood. If God is understood, God’s potential and manifestations will be clearly understood by everybody, whether he is a scientist or a layman.
- Vethathiri Maharishi

சனி, 17 ஜனவரி, 2015

இறையின் அரசாட்சி


எந்தப் பொருளிலும் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிறைந்துள்ளது சர்வ வல்லமையுடைய இறைவெளியே. விண் துகள் சுழற்சி விரைவில் சூழ்ந்துள்ள இருப்பு நிலையாகிய இறைவெளியில் உரசும்போது எழும் அலையே காந்தம். இந்தக் காந்தம் விண் களம், காற்று, அழுத்தக்காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களில் முறையே அழுத்தமாக, ஒலியாக, ஒளியாக, சுவையாக, மணமாகத் தன்மாற்றம் பெறுகிறது. அதே காந்தமானது சீவ இனங்களில் மனமாக இயங்குகிறது. இறைநிலையிலிருந்து விண்துகளின் உரசலால் எழுந்த காந்த அலை அதே விண்துகள் கூட்டு இயக்கங்களான பஞ்ச பூதங்களில் பஞ்ச தன்மாத்திரைகளாகவும், உயிரினங்களில் மனமாகவும் இயல்பூக்கம் பெற்று இயங்குகிறது. அதே காந்த ஆற்றல்தான் ஒரு சீவன் உண்ணும் உணவை இரசம், இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் ஆகிய ஏழு தாதுக்களாக மாற்றி உடலைச் சீராக நடத்துகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 16 ஜனவரி, 2015

இறை உணர்வும் - அற உணர்வும்

 

"நாம் செய்கிற செயல் மூலமாகப் பிறருக்கு நன்மை தான் வரவேண்டும், தீமை வரக்கூடாது". "இந்தச் சமுதாயம் நமக்கு ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொருட்களைக் கொடுத்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் யாருக்கும் நான் செய்வது துன்பமாக இருக்கக் கூடாது". இந்த இரண்டு நோக்கத்தோடு செயலைச் செய்து வந்தால் தொடக்கத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிமையாகச் செய்ய இயலும் என்ற அளவிலே வரும். அப்படி வந்துவிட்டதானால் இறை உணர்வும் வந்து விடும், அற உணர்வும் வந்து விடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வியாழன், 15 ஜனவரி, 2015

சூட்சுமப் பொங்கல்

வெட்ட வெளி என்ற பெரும் பானைக்குள்ளே
வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி,
அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்...
ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்,
கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்
கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்
தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது
சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சுமப் பொங்கல்."
.

"பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு;
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு,
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
.
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Vethathiri Maharishi Pongal Wishes :-


 .
https://www.youtube.com/watch?v=UsWJut20ltU&feature=youtu.be
பொங்கல் வாழ்த்து:
...
"நிலம் திருத்தி விதைத் துழைத்து
நெல்லறுத்து வீடு சேர்த்து
பலன் பிறர்க்குப் பகிர்ந்தளிக்கும்
பண்ட ஈகை பொங்கல் நன்னாள்
நலம் விளங்க நாடு பொங்க
நல்ல வாழ்வை நீங்கள் எய்த
புலன் ஒடுங்கி போதை பொங்கும்
பூரிப்போடு வாழ்த்துகின்றேன்

 

திங்கள், 12 ஜனவரி, 2015

பகலில் வேலை – இரவில் தூக்கம்

பொதுவாக முற்பகலில் தொழில்கள் செய்து
பிற்பகலில் கலைநிகழ்ச்சி களியாட்டங்கள்,
புதுவிதமாய் குழந்தை வளர்ப்புக்கு அமைந்த
பூஞ்சோலை நிலையம், ஆராய்ச்சி மன்றம்,
எது எதனில் எவருக்குப் பிரியம் உண்டோ,
ஈடுபட்டு ரசித்திடவே முறை வகுத்து
இதுவிதமாய் அனுபவித்து, எவரென்றாலும்
இரவு மணி ஒன்பதுக்குள் உறங்க வேண்டும்.
மனிதர்கள் எல்லோரும் பொதுவாக காலை ஐந்து மணி முதல் ஐந்தரை மணி வரை காலைக்கடன், ஐந்தரை முதல் ஆறு வரை தியானம், ஆறிலிருந்து ஏழு மணி வரை ஆகாரம்; ஏழு மணி முதல் பதினொன்று மணி வரையில் தொழில் செய்வார்கள்.
பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் அமைந்திருக்கும் புத்தகச்சாலை, விளையாட்டு மைதானம், குழந்தைகள் வளர் தோட்டம், கலைமன்றம், ஆராய்ச்சி மன்றம், விஞ்ஞானக் கூடம், ரசாயனச்சாலை – இவைகளில் எங்கேனும் சென்று அவரவர்கள் விருப்பப்படி பொழுது போக்குவார்கள்.
இரவு ஒன்பது மணிக்குள் எல்லா வகையான நிகழ்ச்சிகளும் முடிவடையும். பின்னர் அனைவரும் உறக்கம் கொள்ள அவரவர்கள் விடுதிகளில் சேர்ந்து விடுவார்கள்.
உலக சமாதானம் ஏற்பட்டு விட்டால், மனிதரிடையே யுத்தம் ஏற்படாது. அதனால் வீணாகும் மனித சக்தி சேகரமாவதுடன், யுத்த தளவாட உற்பத்திகளுக்குச் செலவழியும் மனிதமுயற்சியும் மீதியாகும். பணமும் வியாபாரமும் ஒழிக்கப் படுவதால், இதன் மூலமும் பல லட்ச மக்களின் உழைப்புச் சக்தி மிகுதிப்படும்.
சமையலும், குழந்தை வளர்ப்பும் பொதுவாக்கப் படுவதால், எல்லாப் பெண்களும் ஆண்களுடன் சமமாக வேலை செய்வார்கள். இதனால் பெரும் அளவு மனித சக்தி மீதமாகும்.
தேவையற்ற பொருட்களின் உற்பத்தி – உபயோகம் தடுக்கப்படுவதால், இதன் மூலமும் எண்ணிறந்த மனிதர்கள் உழைப்பு மிகுதியாகும்.
மனிதர் வாழ்விற்கு அவசியமான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தினால், உலகில் இருபது வயது முதல் ஐம்பது வயது வரையில் உள்ளவர்கள் – அதாவது மொத்த எண்ணிக்கையில் பாதி பேர்கள் – தினம் நாலு மணி நேரம் உழைத்தால் எல்லா வாழ்க்கைத் தேவைகளையும் முடித்துக் கொள்ளலாம்.
அவசியத்திற்கேற்ப கொஞ்சம் நேரத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்ளலாம். இங்குக் குறிப்பிட்ட மணிகள் சில நாட்டு சீதோஷ்ண் நிலைக்குப் பொருந்தாமலிருக்கலாம். அத்தகைய இடங்களின் நிலைகைகளுக் கேற்றவாறு தொழில் நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மனிதனுக்கு உணவு, உடை, இடம், பருவத்திற்கேற்ற வாழ்க்கைத் துணை எவ்வளவு அவசியமோ, அதுபோலவே நித்திரையும் அவசியம் ஆகும். தேவையான அளவு நித்திரை இல்லாவிடில் இரத்த ஓட்டத்திற்கும், உடல் நலத்திற்கும் பல இடையூறுகள் விளையக் கூடும். ஆகவே, இரவில் ஒன்பது மணிக்கு அனைவரும் தூங்குவதற்கு வசதி வேண்டும் என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

Swamiji, even when we follow a spiritual path, we often are overwhelmed by the problems in our lives. Why is this? Can it be changed?


  Swamiji's Answer : Sanchitha Karma, Prarabdha Karma and Akamya Karma are the reasons for the problems and miseries in human life. Sanchitha Karma is what is inherited by us, the imprints passed on through the generations, from the times of our forebears. They often are the reason for many of our suffering, even though we may not have performed any evil deeds during our own lifetimes. Imprints of Sanchitha Karma can be eradicated through expiation, superimposition and dissolution, through the practice of meditation

சனி, 10 ஜனவரி, 2015

சினம் அடக்குதல்

சினத்தை ஒழிப்பதாக நினைத்துச் சிலர் அதை அடக்குவார்கள். அதாவது, சினத்தை எழவிட்டு அதனை வெளிப்படுத்தாமல் தம் மனதிலேயே அடக்கிவிடுவார்கள். அது குளிப்பதாக நினைத்து சேறு பூசிக்கொள்வதற்கு ஒப்பாகும். எழுந்த சினம் வெளிப்படுமானால் எழுந்த இடத்திலும்-செல்லும் இடத்திலும் ஆக இரண்டு இடங்களிலும் தீமையைச் செய்யும்.
எழுந்த பிறகு அடக்கப்படும் சினமோ, அவ்விரண்டு பங்குத் தீமைகளையும் எழுந்த இடத்திலேயே, சினம் கொண்டவருக்கே ஏற்படுத்திவிடும். அது மட்டுமன்று, சினத்தை அடக்குவதனால் அடிக்கடி... சினம் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். நரம்புத்தளர்ச்சி, இதய பலவீனம், இரத்த அழுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேறுசில நோய்களெல்லாம் சினத்தை வெளிப்படுத்துவரைவிட, சினத்தை அடக்குபவருக்கே அதிக அளவிலும் அடிக்கடியும் வரும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 8 ஜனவரி, 2015

அருட்காப்பு:


”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”
வெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.
...
நாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.
அதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப் பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.
அந்தப் பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியே ‘அருட்காப்பு’ என்னும் AIR CONDITION ஐ மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.
நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பது தான் எம் இலட்சியம்.
----அருள்தந்தை
வாழ்க வளமுடன்

செவ்வாய், 6 ஜனவரி, 2015

could you please clarify the difference between the genetic centre, mind, Atman and the soul?


 Swamiji's Answer : The sexual vital fluid forms the basis of the physical body, the life energy particles, that of the astral body, and bio-magnetism the basis of the causal body. The genetic centre is comprised of these three, viz. the sexual vital fluid, life energy particles and bio-magnetism. The greatness and quality of a living creature lies in the genetic centre....
The self rotatory movement of the life energy particle produces spreading waves called bio-magnetism. This bio-magnetism comes into contact with the material world outside, through the medium of the sense organs. This is perceived by the consciousness present in the centre of the life energy particle resulting in the mind.
The words Atman, soul and genetic centre all refer to the same thing. The genetic centre is the place where the records of all the physical and mental activities of a person are maintained.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

Question : Swamiji, if the imprints of the parents are being carried forward to the offspring, how is that “good” children are born to “bad” parents and vice versa?

   Swamiji's Answer : Every man carries within him innumerable imprints acquired through the generations. They can be classified into deep seated (latent) ones and superficial (patent) ones. In a particular case the evil imprints may ...remain buried deep inside the individual and the good ones may be functional, whereupon he behaves like a good man.
It may be due to lack of the proper circumstances or opportu-nities that the evil imprints do not come to the fore. They may remain latent in his genetic centre but turn out to be dominant in the children born to him, who may do all evil deeds not done by their parents.
In the same way, the good imprints in a person may remain dormant during his lifetime. A person may be running a butcher shop due to circumstances, but his thoughts may be of a sublime nature. His children may have acquired the imprints of these thoughts as a result of which their own thoughts and deeds will be noble.
Similarly a person used to performing oblations before God every day may still harbour thoughts of cheating the others. His children will naturally be inclined to carry such thoughts in their minds also.
To rid oneself of all bad imprints it is imperative that meditation be practiced regularly and a state of awareness maintained at all times. Care should be taken to avoid evil thoughts and every action performed with full awareness of its consequences.

சனி, 3 ஜனவரி, 2015

உண்மை விளக்கம்


மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவு நிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வள...ர்ச்சி பெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான். தனது நோக்கம் குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது, தனது மூலம் நோக்கி ஆராயும் போது, சிறிது சிறிதாக மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை உண்டாகிறது. முழு விழிப்பு நிலை பெற்று விட்டால், அந்த அறிவுநிலையை ஞானம் என்றும் மெய் விளக்கம் என்றும் கூறுகின்றோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 2 ஜனவரி, 2015

உலக சமாதானம் :


ஒவ்வொரு மனிதனும் உடலுக்கும் அறிவிற்கும் அவ்வப்போதைய தேவைக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப அனுபோகங்களை நாடுகின்றார்கள், தேடுகின்றார்கள், அனுபோகிக்கின்றார்கள். இன்ப துன்பங்களை அடைகின்றார்கள். ஆராய்கின்றார்கள். அனுபவ ஞானம் பெறுகின்றார்கள்.
...
எனினும் எங்கேனும் எப்போதேனும் மேலே சொன்னவைகளில் மனிதனால் மனிதனுக்குத் தடையோ, செயல் போட்டியோ ஏற்படின் பன்னெடுங்காலம் ஐயுணர்வின் நிலையில் செயல்பட்டு அடங்கியுள்ள உணர்ச்சி வேகம் மீறி காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற அறுகுண எழுச்சிகளாகி அவ்வக்காலச் சூழ்நிலை பலத்திற்கு ஒருவரையொருவர் துன்புறுத்தும் கொடுஞ் செயல்கள் நிகழ்கின்றன.
அறிவிலும் பண்பிலும் உயர்ந்து வரும் மனித இனம் உலக மக்கள் அனைவருக்கும் உடலியக்கத் தேவைகளான தொழில், உணவு, உடை, இடம், வாழ்க்கைத் துணை இவைகளையும், அறிவியக்கத் தேவைகளான கல்வி, ஒழுக்கம், சிந்தனை சூழ்நிலை இவைகளையும் சமுதாயக் கூட்டு முறையில் குறைவுபடாமல் பெற்று அனுபவித்து வாழ வழி கண்டுவிட்டால் அன்றே மனித இனத்தில் தனிமனிதன் வாழ்வில் சமாதானமும் அதை அடிப்படையாகக் கொண்டு உலக சமாதானமும் ஏற்படும்.

–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 1 ஜனவரி, 2015

சிறப்புணர்ந்த பெண் மதிப்பு

பெண்ணினத்தின் தெய்வீக மதிப்பை உணரலாம். பெண்களுக்கு, "தையலர்" என்ற ஒரு மதிப்புச் சொல்லும் இருக்கிறது. தையல் என்றால் இணைப்பு என்று பொருள். குடும்பங்கள் பலவற்றையும் ஒன்றோடு மற்றதை இணைத்து, உலகம் முழுவதையும் ஒரே கோர்வையாகச் செய்திருக்கும் அருளாற்றல் பெண்ணினத்திற்கே உரியதாகும். இத்தகைய தெய்வீக இணைப்பை வாழ்வில் இயல்பாகக் கொண்டுள்ள பெண்ணினத்தைத் தையலர் என்று கூறுவது எவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுடைமையாகும் என்று கவ...னியுங்கள்.
மேலும் திருப்பாவை என்று ஒரு நூலில் பெண்களைப் பற்றி ஓர் உவமைக் கூறப்பட்டுள்ளது. அது "நேரிழையாள்" என்பதாகும். ஒரு துணியை நேய்ய வேண்டுமானால் நேரிழைகள் என்னும் பாவு முதலாவதாக வேண்டும். அந்த நேரிழைகளின் குறுக்கே செலுத்தப்படும் நூலிழைக்கு,'ஊடு இழை' என்று பெயர். நேரிழை இல்லாமல் ஊடு இழைக்கு என்ன பெருமையுண்டு? நேரிழையை வைத்துத்தான் ஊடு இழையைச் செலுத்தி, எந்த ஆடையையும் உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே ஆடையில் முதற் பொருளாக இருப்பது நேரிழை.
அதேபோன்று உலகம் முழுவதும் மக்கள் குலத்தில் நேரிழைகளாக இருப்பவர்கள் பெண்மணிகள். அவர்களை முன்வைத்து ஊடு இழைகளாக விளங்குபவர்கள் தான் ஆண் மக்கள். எவ்வளவு ஆராய்ச்சியோடு திருப்பாவை என்ற பாசுரத்தில் இந்த உண்மை விளக்கப்பட்டிருக்கிறது என்று அறியும்போது பெண்களைப் பற்றி, நமது அன்னைகளாகவும், சகோதரிகளாவும், குடும்பத்தைக் காப்பவர்களாகவும் பெண் மக்கள் ஆற்றும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்று விளங்கும்.
-----------அருள் தந்தை------

Vethathiri Maharishi New Year Wishes