Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 30 ஜூன், 2015

கணவன், மனைவி உறவு


 .
"கணவன், மனைவி உறவில்தான் ஒருவருக்கொருவர் அதிகமாக சினம் கொள்கிறார்கள். திருமணத்தை ஓர் அனுமதியாகக் கொண்டு சினம் கொண்டு அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார்கள். திருமணம் என்பது துன்புறுத்துவதற்கு வழங்கப்பட்ட அத்தாட்சிப் பத்திரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..! (Everybody thinks Marriage is a License to get anger with the Life partner.)

அதை மாற்றி திருமணம் என்பது இறைவனால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட வரம். அதை நல்ல முறையில் அன்பாகவும், பண்பாகவும் பாதுகாக்க வேண்டும். கணவன், மனைவி உறவில் சரியான ஒரு பிடிப்பு ஓர் இணைப்பு இருந்தால் நீங்கள் எந்த வேலைக்குப் போனாலும், அங்கே ஓர் ஆள் கூடவே இருந்து வேலை செய்வது போலிருக்கும். அப்படியில்லாமல் கணவன், மனைவி உறவில் விரிசல் இருந்து, அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இரண்டு பேர்களுடைய வேலைகளும் சரியாக நடக்காது. எண்ணம் அலைந்து கொண்டிருக்கும். மனம் வருந்திக் கொண்டிருக்கும்.

 ஆகையால் சினத்தைக் தவிர்க்க வேண்டும் என்ற பயிற்சியை "உலக சமுதாய சேவா சங்கத்தில்"அளிக்கிறோம். பயிற்சியைச் செய்து பழகியவர்களையெல்லாம் கேட்டுப் பாருங்கள். சிலர் அதன் மேன்மை தெரியாமல், தொட்டுத் தொட்டு, விட்டு விடுவார்கள். பயிற்சியை முழுமையாகச் செய்தவர்களெல்லாம் எவ்வாறு அந்தக் குடும்பத்தில் அமைதியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

'திருமணம் ஆன நாளிலிருந்து இன்றைய நாள் வரைக்கும் எனக்கு அவ்வம்மையார் என்னென்ன நன்மைகள் செய்து இருக்கிறார்கள்! எம்மாதிரியான மகிழ்ச்சியை அளித்திருக்கிறார்கள்' என்று கணவனும்; 'திருமணத்திலிருந்து இன்றுவரை அவர் எனக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறாரே!" என்று மனைவியும்; ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால் அது இன்பப் புதையலாக இருக்கும்.

.
இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கைத் துணையை எனக்கு இறைவன் அளித்திருக்கிறான். அதை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் வரும். அந்த முறையில் ஒருவருக்கொருவர் செய்த நன்மைகளை விரித்து விரித்து, உள்ளம் பூராவும் பூர்த்தி செய்து கொண்டால், அவ்வப்போது செய்யக் கூடிய சிறு தவறுகள் ஒன்றுமே தவறாகத் தெரியாது, ஏதேனும் குறைவுபடுமேயானால் 'போனால் போகிறது, நான் ஒத்துழைக்கிறேன். நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?' என்று கேட்டு ஆதரவு தெரிவித்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

திருமணமும் ஆகிவிட்டது. இவ்வளவு காலம் எப்படியோ வாழ்ந்தாகிவிட்டது. இனி வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவித்தான் ஆக வேண்டும் என்ற அளவிலே வந்து விட வேண்டும். விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் ஒருவிதமான பிடியை பிடித்துக் கொண்டு என் கருத்து தான் உயர்ந்தது என்று வைத்துக் கொண்டால் பிணக்குத்தான் வரும். இதையெல்லாம் சரி செய்வதற்கு 'அகத்தவம்' (Simplified Kundalini Yoga) என்ற முறையிலே ஒரு தியான முறையை நல்ல முறையில் செய்து வந்தார்கள் என்றால் மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்து சரிசெய்து கொள்ளலாம்.

இனி, காலையில் எழுந்தவுடன் கணவன், மனைவியைப் பார்த்தும், மனைவி கணவனைப் பார்த்தும் "வாழ்க வளமுடன்" என்று ஒரே ஒரு வாக்கியத்தைச் சொல்லுங்கள். ஆனால் முதலில் அப்படிச் சொல்ல நாக்கு வராது. எங்கேயோ போய், எதையோ இழந்து விடுவது போல இருக்கும்., இதுவரை கட்டி வைத்த கோட்டைகளெல்லாம் தகர்ந்து போய் விடுவது போல இருக்கும். என்ன செய்ய வேண்டும்? "நான் வாழ்த்தப் போகிறேன்" என்று தைரியப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு "வாழ்க வளமுடன்" என்று சொல்லுங்கள். மறுநாளைக்குத் தெளிவாகச் சொல்ல வரும். இப்படிப் பத்து நாட்களுக்குச் சொல்லிப் பழகி விட்டால், அந்தச் சொல் ஒலி எழும்போதே உடலில் பூரிப்பு உண்டாகும். ஒருவரையொருவர் நினைக்கும் போதே பூரிப்புண்டாகும். இதைப் பார்க்கக் கூடிய குழந்தைகளுக்கும் இப்பண்பாடு உருவாகும்.

 ஒரு குடும்பம் நன்றாக இருந்தால் அதைச் சுற்றி உள்ளவர்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். உலகம் நன்றாக இருக்கும். உலகத்திற்கு நல்ல மக்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தன்னிலே அமைதி பெற்று, மகிழ்ச்சி பெற்று, சுகமாக, இனிமையாக வாழ்ந்தால், குடும்பம், நாடு, உலகம் எல்லோரும் நலமாக இருக்கலாம். இறைவன் அளித்த ஆயிரமாயிரம் இன்பங்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்துக் கொண்டே இருக்கலாம். அந்தப் பேரின்ப வெள்ளத்திலேயே மிதந்து திகழலாம்".

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"குடும்பத்தை நீங்கள் நிர்வாகம் பண்ணுகிறீர்கள் என்றால்
அங்கே உங்கள் 'அறிவு' தான் நிர்வாகியாக இருக்க வேண்டும்".

 "கணவன் மனைவி இருவரில் யார் அதிகம்
விட்டுக் கொடுக்கிறார்களோ அவர் தான் 'அறிவாளி."

 "மனைவியவள் தனைமதிக்க வில்லையென்று குறையால்
மனம்வருந்தும் கணவருக்கும் மணந்தவர் பொறுப்பாய்
எனைமதிக்க வில்லையென்று ஏங்கும் பெண்களுக்கும்
இன்பவாழ்வு மலர்வதற்கு ஏற்றவழி சொல்வேன்
நினைவு கூர்ந்துன் வாழ்க்கைத்துணை இதுவரை உங்கட்கு
நிறைமனத்தோடன்பு கொண்டு செய்தவெல்லாம் பாரீர்
உன்னைமதித்து ஆற்றியுள்ள இனியசெயல் அனைத்தும்
உள்நினைந்து நன்றிகூறி வாழ்த்த மனம் நிறையும்."

 "அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்
அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்
துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்
தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்
இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்தலோடு
இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்
தன்புகழ் விளக்கும் நல்ல தரமுடைய மக்கள்
தழைப்பார்கள் இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 29 ஜூன், 2015

அமைதி நிலைக்க

உயிரினங்கள் எல்லாவற்றிலும் மனிதன் சிறந்தவன். பிறர்படும் துன்பத்தைக் கூர்ந்துணரும் நுண்ணறிவு மனிதனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. வருந்துவோர்களிடம் இரக்கம் கொண்டு உதவி வாழும் தகைமை மனிதனுக்கே உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் பல. எனினும், அவற்றை விரைவாகவும், எளிதாகவும், பெருத்த அளவிலும் உற்பத்தி செய்து கொள்ள ஏற்ற இயந்திர விஞ்ஞான அறிவிலும் நாளுக்கு நாள் மனிதன் முன்னேறிக் கொண்டு வருகிறான். எனினும், மனித சமுதாயத்தில் ஏன் அமைதி இல்லை. மனிதரிடையே அச்சம், பிணக்கு, பகை, போர் இவை ஏன் அடிக்கடி ஆங்காங்கு எழுகின்றன. வாழ்வைச் சீர் குலையச் செய்கின்றன. மனித மன இயல்பையும், விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு சிந்தித்தே இதற்கு முடிவு காண வேண்டும்.

மனிதனுக்கு நான்கு வித தேவைகள் உண்டு.

1) உணவு, உடை, உறைவிடம், பருவத்தே பால் உறவு, இவை காலத்தோடும்,
தேவை நிறைவு பெறும் அளவிலும் கிடைக்க வேண்டும்.

2) பலவாறாக அமைந்த இயற்கை அழகுகளையும், காட்சிகளையும் கண்டுகளிக்கும்
வாய்ப்பு வேண்டும்.

3) இயற்கை இரகசியங்களை அறியவும், பிறர்க்கு உணர்த்தவும் வாய்ப்பும்
சூழ்நிலையும் வேண்டும்.

4) பிரபஞ்ச இயக்கத்திற்கும் தனக்கும் மூல ஆற்றலை அறிய வாய்ப்பும்
சூழ்நிலையும் வேண்டும்.

காலத்தோடும், முறையோடும் தேவைக்கேற்ப இந்நான்கு வகையும் கிட்டாத போது அவன் அறிவு, உடல் ஆற்றல்கள் திசை மாற்றம் பெறுகின்றன. போட்டியுணர்வும், பிறர் வளம் பறித்து வாழும் பழிச் செயல்களும், பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன. அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப் பெறுகின்றன. இத்தேவைக்குரிய பொருட்களையும் வசதிகளையும் ஈட்டவும், காக்கவும், துய்க்கவும், பிறர்க்கு உதவவும் உலகில் பிறந்த எல்லோருக்கும் உரிமையுண்டு. இதுவே பிறப்புரிமை எனப்படும்.

இந்த உரிமையை பிறர் தடுக்காமலும், பறிக்காமலும் காக்க அமையும் சமுதாயப் பாதுகாப்புச் சூழ்நிலையே சுதந்திரம் ஆகும். உலகில் வாழும் மக்கள் எல்லோருக்கும் இந்தத் தெய்வீகமான பிறப்புரிமையும், சுதந்திரமும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் தான், உறுதி செய்யப்பட்டால் தான் மனிதன் வாழ்வில் அமைதி கிட்டும். அது நிலைக்கவும் முடியும்.



*************************************************************************
 
  "விளைவறிந்த விழிப்போடு துன்பம் வராமல்
காக்கும் செயல் முறையே அறமாகும்".
.
"தவறு செய்தால் இன்றோ, நாளையோ அறிவிற்கோ
உடலுக்கோ துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை".
.
அமைதி இயல்பாகும்:
"அகத்தவமும் அறநெறியும் இணைந்து ஓங்க
ஆன்மாவின் வேண்டாத பதிவு நீங்கும்
இகத்துறவு அத்தனையும் இனிமைநல்கும்
எப்போதும் மன அமைதி இயல்பதாகும்;
மிகத்தெளிவு உண்மையுமாம்; இந்த உண்மை
மீறி எழும் பழவினையில் மறைந்துநிற்கும்
தொகுத்துணர்வாம் விரிந்த மனத் தொடர்முயற்சி
சுய நிலையாம் மெய்ப் பொருளாய்த் தன்னைத்தேரும்.
.
நிறை நிலையில் அமைதி :
"எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம் லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

ஞாயிறு, 28 ஜூன், 2015

புலன் வழி அறிவு

ஐம்புலன்கள் வழியாகத் தனக்கும் பிறதோற்றங்கட்கும் அல்லது இருவேறு தோற்றங்கட்கும் இடையே பருமன், விரைவு, காலம், தூரம் ஆகிய நான்கை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காணும் வேறுபாட்டை உணர்வதும் அவ்வாறு உணரும்போது உடலுக்கும், உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றலின் சிதைவானது, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையான பஞ்சதன்மாத்திரை இயக்க அளவு உணர்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவமாகக் கொள்வதும் புலன்வழி அறிவாகும்.

மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி அறுகுணங்களாகச் சூழ்நிலைகட்கொப்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும், பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.

இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்க நிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். இம்மன நிலையில் வாழ்பவர்கள் துன்பக் கருவூலமாக இருப்பதால் இவர்களை நடைப்பிணம் என்று சில ஞானிகள் மொழிந்தனர்.




  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே "பக்தி."
அறிவை அறிவால் அறியப் பழகுதல் "யோகம்."
அறிவை அறிவால் அறிந்த நிலையே "முக்தி."
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே "ஞானம்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
அமைதியின்மை எதனால்?
"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார் அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 
 
 

சனி, 27 ஜூன், 2015

அத்வைதம் த்வைதம்


நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம் பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதேபோல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

.
இதே நீரின் மூலம் என்ன? தேங்காய்க்குள் எப்படி தண்ணீர் வந்தது? நிலத்திலிருந்து தானே? அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நீரைப் பெற்றது. கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.

.
இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்? இதுதான் அத்வைதம்.

.
பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா! "

.
கடவுள் :

"உருவங்கள் கோடான கோடியாய், அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்,
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒருசக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்."

.
அத்வைதம், துவைதம் :
--------------------------------------

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
கற்கண்டு கரும்புரசம் வேறு வேறாய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெள்ளி, 26 ஜூன், 2015

அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு :

இறைவனிடம் ஏதோ பெறவேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் - அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக்கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்த துன்பத்தை நீக்கவேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது? சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன? காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும் போது அன்பாக மலர்ந்தது.
.
அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது - அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான். எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். அவனோடு உறவாக இருக்கலாம்; உறைந்து இருக்கலாம். உடலால் வேறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால், அறிவால், ஒன்றுபட்டு இருப்பதை உணரலாம். இந்த நிலைக்கு அறிவை உயர்த்தவல்லது அறத்தை உணர்த்தவல்லது தவமும் அகத்தாய்வும்; அந்த தவமும் அகத்தாய்வும் நீங்கள் பெற்றுவிட்டீர்கள், செய்து கொண்டு வருகிறீர்கள், அதனுடைய பலனை உணர்ந்துகொண்டும் இருக்கிறீர்கள். அதனை ஆழமாக மேலும் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்தி பயனடையுங்கள். நீங்களும் பயனடைந்து மற்றவர்களுக்கும் அந்தப் பயன் வீசட்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"உலகம், அண்டங்கள், உயிரினங்கள், பொருள்கள்,
பலதும் அணுவின் கூட்டுப் பக்குவப் பரிணாமம்,
பகுத்தறிந்தால், ஒன்றி, ஒன்றிப் பார்ப்பவனே, ஒலி முதலாய்
பஞ்சதத்துவம், ஈர்ப்பு, பரம், அணு இவையாவான்".
.
இறையுணர்வில் எழும் பேரின்பம்:
"இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே."
.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 25 ஜூன், 2015

Introspection


The process of analyzing and getting a total understanding of oneself.
Introspection is a practical methodology for sublimating the negative emotions of greed, anger, vengeance, etc., Between Thuriya and Thuriateetham the aspirant has to put himself though some important psychic practices under the process of Introspection in order to have his character reformed, to get enlightenment and to enjoy peaceful and happy life.
...
SYNOPSIS
Practical self-analysis tools designed to take stock of positive and negative characteristics in your personality.
Eliminate the unnecessary and incompatible aspects of your character.
Strengthen the habits of good thought, word, deed and discerning and rejecting the habits unwanted.
Five primary aspects of introspection
Analysis of Thoughts.
Moralization of Desires.
Neutralization of Anger.
Eradication of Worries.
Who am I - Realization of the Self?.
These practices will make a man to understand the value of his own existence. By constant research and by leading a virtuous way of life, he dissipates the imprints of sins day by day. As a result, the soul becomes pure and perfect and his mind is peaceful.
BENEFITS
By exposition and practical techniques of introspection, one is enabled to suitably modify his or her hereditary and past traits.
One is able to change one's personality and bring out the latent talent and innate strength resulting in cheerful and successful life.
The process of analyzing and getting a total understanding of oneself. A systematic practice to get this understanding and to lead a life without causing pain to self and others.
TWO FOLD MORAL PRINCIPLE
"In my lifetime, I will not cause harm to the mind or body of myself or others, in the present or in the future"
"I will try to remove the suffering of others to the maximum extent possible"
Introspection helps us to acheive the two fold moral principle framed by Shri Vethathiri Maharishi to lead a harmonious life.
While Introspection enables us to identify the necessary steps for bringing about a harmonious transformation, Simplified Kundalini Yoga strengthens and provides the necessary power, to our mind and thoughts emanating from it, to complete the transformation.

புதன், 24 ஜூன், 2015

சுவாமிஜி , 'ஈரேழுலகம்' என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

மகரிஷியின் பதில் :
---------------------------

"நாம் வசிக்கும பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

.
பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் ( பேச்சு வழக்கில் இன்று பாதாளம் ) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள். இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காண முடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேழு உலகங்கள் இல்லை."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 23 ஜூன், 2015

இயற்க்கை நெறி

"குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புவதற்காகவே, நம் விருப்பங்கள் செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. (Divine Treatment) "
 

"உலக வாழ்வில் - பொருள், மக்கள், புலனின்பம், புகழ், செல்வாக்கு,
என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும் அளவு முறை அறிந்தும் விழிப்போடும் இப்பற்றுக்களை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப்பயனை எய்த அவசியமானது. நீரில் குளிப்பது தேவைதான், அனால் நீரில் முழுகிவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்வுக்குப் பல வகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில் மனிதன் மேலே சொல்லப்பட்ட ஐவகைப் பற்றுதல்களால் அறிவு குறுகி மயங்கி தன் பிறவி நோக்கத்தையும் வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ, அந்த நேரத்தில், மனிதனிடம் அமைந்துள்ள அடித்தள ஆற்றலாகிய பேரறிவானது, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புவதற்காகவே, நம் விருப்பங்கள் செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து (Divine Treatment) வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன.

இத்துன்பத்திலிருந்தும் புற மனதை மீட்க, பேரறிவானது, மனிதர்கள் மூலமாகவும், விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும் உதவிக்கொண்டேதான் இருக்கும். இந்த நிலையிலேனும், மன இயக்கத்தில் குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்கக் களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும்".

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 22 ஜூன், 2015

செழிப்பான வாழ்க்கை பெற

நல்ல நட்பு கிட்டாவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால், அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.

.
*நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிக்கையை விட வாழ்வில் எமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.

.
*அறிவோடும் விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.

.
"செயல்ஒழுக்கம், சேவை, சிந்தனை, சீர்திருத்தம், சிக்கனம், இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்".

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 21 ஜூன், 2015

எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்


 'தீட்டா அலை'யிலும் 'ஆல்பா அலை'யிலும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்காது.
.
உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.
.
நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்; எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.
.
அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, "என்று எண்ணி அமைதி அடைந்தாள், எந்தக்காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.
.
"படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக் கூடிய ஒரு பயிற்சி தான் தவம். அதற்குக் கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். இதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்கு கொடுக்கும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
காலம் வீணாக்க வேண்டாம் :
------------------------------------------------
சிலை வணக்கத்தின் எல்லை :-
-----------------------------------------------
.
"இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.
.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்"
.
"அகத் தவம் தீவினை யகற்றும்
அருள் நெறியை இயல்பாக்கும் !
அகத் தவமே இறைவழிப்பாடனைத்திலும்
ஓர் சிறந்த முறை !
அகத் தவமே உயிர் வழிபாடதனை
விளக்கும் ஒளியாம் !
அகத் தவமே மதங்களெல்லாம்
அடைய விரும்பும் முடிவு ! "
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

சனி, 20 ஜூன், 2015

சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள



ஒவ்வொரு செயலிலும் ஒரு விளைவு வருகிறது என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்தச் செயலின் விளைவாக என்ன, என்ன பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இயற்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இயற்கையின் முழுமையான நான்கு பகுதிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின்

1) ஆதிநிலை
2) அசைவுநிலை என்ற அணு அல்லது சக்தி,
 3) அதனுடைய கூட்டு இயக்கங்களாலே தோன்றிய பிரபஞ்சம் - பேரியக்க மண்டலம்,
 4) அதன் வழியே தோன்றி வந்த உயிர்கள், 

இவற்றினுடைய தொடர்பை அறிந்துகொள்ள வேண்டும். 
அப்பொழுதுதான் இன்னது செய்தால் இன்னது விளையும், இவை எனக்கு வேண்டும்., அவற்றை இன்னது செய்து பெற முடியும் என்று தனக்குள்ளாகத் தேர்ந்து செயலாற்றலாம். இன்னது செய்தால் பிறருக்கு இந்த அளவுக்கு நன்மை உண்டாகும் என்ற தெளிவு பிறக்கும். சுகதுக்க இயல்பினை உள்ளத்தாலே கூர்ந்துணர்ந்து, அறிந்து அவ்வப்பொழுது தன் சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள, இயற்கையின் ரகசியங்களை, இயற்கையின் அமைப்புகளை, இயற்கையின் வளங்களை, இயற்கையின் நியதிகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனநிறைவு :

பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிர்சி கொடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம்...
நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே ! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாக கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும். இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக்கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும், அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு, இறை உணர்வை பெறுவதற்கு தவம் இருக்கிறது. அற உணர்வை பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்துவிடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்துவிட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.

நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்க போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை. 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"இன்பத்தை முறையுடன், அளவோடு அனுபவிக்கத்
துன்பமே பெரும்பாலும் தோன்றாது".
.
"எண்ணியவெல்லாம் எண்ணிய படியேயாகும்
எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் அமைந்திடில்".
.
"உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் நடப்பதும் நித்தியக் கடன்".
.
"ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சிபெற்று
அணுவென்ற உயிராகி அணுக்கள்கூடி
மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கேற்ப
மூலகங்கள் பலவாகி அவையிணைந்து
பேதித்த அண்டகோடிகளாய் மற்றும்
பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி
நீதிநெறி உணர்மாந்தராகி வாழும்
நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம்காண்போம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

வெள்ளி, 19 ஜூன், 2015

அறிவறிந்தோர் ஞாபகம்

ஒரு காலியான பாத்திரத்தை நிமிர்த்தித் தண்ணீருக்குள் அழுத்த அதில் நீர் நிறைந்துவிடும். பின்னர் அதை விட்டு விட்டால், அது நீரில் முழுகி மறைந்துபோகும். அதுபோலவே பார்த்தல், கேட்டல், முகர்தல், ஊறு உணர்தல், சுவைத்தல் ஆகிய ஐயுணர்வுகளில் செயலாற்றப் பழகிவிட்ட அறிவானது உணர்ச்சி நிலை எய்தி, உணர்ச்சி மயமாகி, தன் உண்மை நிலையினை இழந்து விடுகிறது.

.
அதே பாத்திரத்தைத் தலைகீழாய்த் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்தால், அதில் நிறைந்திருக்கும் காற்றானது வெளியே போகாமல் நிலைத்து நிற்பதால் அப் பாத்திரத்தினுள் நீர் நுழையாது. அப்பாத்திரம் தலைகீழான நிலையில், நீர் நுழைய இடம் தராமல், மிதந்து கொண்டே இருக்கும். அதேபோல் தன் ஆதி நிலையறிந்து அகண்டாகாரத்தில் விழிப்புடன் இருக்கும் அறிவு, புலன்களின் மூலம் செயலாற்றிய போதிலும் அகண்ட ஞாபக வேகத்துடன் இருப்பதல்லாமல் புலனியக்க வேலை முடிந்தவுடன் தன்னிலைக்கு, விரிந்த எல்லைக்கு, வந்து நிலைத்திருக்கும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

"அறிவு என்பது அறியப்படுவது.ஞானம் என்பது உணரப்படுவது".

.
"ஞாலத்தை அறிவது விஞ்ஞானம்.
மூலத்தை உணர்வது மெய்ஞானம்".

.
"முக்தியை அடைந்த அளவேநமது வாழ்க்கையின் வெற்றி". ."புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும்போது விளைவறியாமல் எண்ணுதலும் பேசுதலும்செயல் புரிதலும் இயல்பு".

.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வியாழன், 18 ஜூன், 2015

ஜீவகாந்த சக்தி


உடல் முழுவதிலும் இருக்கக்கூடிய உயிர்சக்தி சுழன்று வெளியிடக்கூடிய அலையினுடைய அழுத்தம், உடலிலே ஜீவகாந்த சக்தி என்று சொல்கின்றோம். அந்த அலை அழுத்தம் தான் ஜீவகாந்த சக்தி. உயிருக்கும் ஜீவகாந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம், இயங்கிக் கொண்டே இருப்பது. அதிலே இருந்து வெளிவந்து கொண்டே இருப்பது விரிவு அலை - அதுதான் ஜீவகாந்த சக்தி.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 17 ஜூன், 2015

விசித்திர லோகம்

நம்முடைய மனமே நாம் பெற்றுள்ள ஒரு அரும்பெரும் பொக்கிஷமாகும். அதை எப்படி நாம் பயிற்றுவிக்கிறோமோ அப்படியெல்லாம் அது விரிந்தும் சுருங்கியும் சிறப்போடும் செயல்படும். அணு அளவுக்கு சுருங்கவும் உலகளவுக்கு விரியவும் பேராற்றல் பெற்றது தான் நம் மனம். அதை நாம் எந்தெந்த நிலையில் வைத்து அனுபவிக்கிறோமோ அந்தந்த நிலைக்கேற்ப அமைதியும் மகிழ்வும் கிட்டும் அவ்வளவு தான். தவத்தால் இடம்தான் மாற்றம் அடைகிறதே ஒழிய செயல்படுவது ஒரே மனம் தான். நம் மனம் பேராற்றல் களத்தோடு ஒன்றுபடும்போது பேராற்றலோடு கூடி பேரின்பம் பெறுகிறது. விரிந்து புறமனமாக புலன்வழி செல்லும் போது அதற்குண்டான இன்ப துன்ப அனுபவங்களை பெறுகிறது. இதுதான் இந்த மனதின் விசித்திரமாகும். எனவே தான் இதை Wonderland - விசித்திர லோகம் என்கிறோம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 16 ஜூன், 2015

Q : If one does spiritual practices sincerely, can he be certain to attain self realization in this life?


A : In meditation you reach subtle points allowing you to think and understand deeper. Meditation itself is not realization. When you reach the subtle and infinite state, you realize who you are, and, this state and the Static State are both the same. That realization is revelation. The Static State makes you understand itself through your psychic functioning. The same truth in explanation is enlightenment. In meditation this is experience. If both enlightenment & experience are perfect, then realization is perfect. When you are framing God in the mind, with or without figure (personal or impersonal) and searching for the same God in a book or in meditation or in teachings, then you will never meet Him.

திங்கள், 15 ஜூன், 2015

எண்ணம்

 "எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு வித தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மௌன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள், உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும் போதெல்லாம் எஎண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால் அப்போது தான் அது தானே சிறுகச் சிறுக அமைதி பெறும்.

எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெரு நிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அது தான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்றுவிட்டால் நீ என்பது தனித்து ஏது? .

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிகாலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால் உடலுக்கும் அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்று பெருக ஆரம்பித்துவிடும். "


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 எண்ணம்:

"எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்.
எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்,
எண்ணமே அதைப் பார்ப்போர், ரசிப்போராம்.
எண்ணமே அதன் நிர்வாகி, உடையவன்."

 எண்ணம் நற்பயனாக :

"எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி
எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு
எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால்
எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்;
எண்ணமது எழும்போதே இது ஏன் என்று
எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலப மாக
எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்
எழும்எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்."

 எண்ணத்தின் சிறப்பு :

"எண்ணம்,சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது,
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு;
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை."

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 14 ஜூன், 2015

முற்றறிவு:

ஆதிநிலையில், இருப்புநிலையாக, சுத்தவெளியாக உள்ள முற்றறிவைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதே அறிவு தான் பரமாணுவாக மலர்ச்சி பெற்ற நிலையின் - தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்கிற இயக்க நியதியாக இருக்கிறது. பரமாணுக்களின் கூட்டு, இயக்க வேறுபாடுகள், அடர்வு நிலைக்கேற்ப தன்மை, துல்லியம், ஒழுங்கு என்ற மூன்றும் பருப்பொருள்களில் வேறுபடுகின்றது. இருப்புநிலையாக, சுத்தவெளியாக இருக்கும் வரையில் அறிவானது எல்லையற்ற தன்மையினாலும், புலன் கருவிகளின்மையாலும் உணர்வற்ற தன்மையாக அசைவற்று இருக்கிறது. எனினும், அது அணு முதல் அண்டம் ஈராக அனைத்துக்குள்ளும் ஊடுருவி இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களில் புலன் கருவிகளின் எண்ணிக்கைக்கேற்ப அறிவானது உணர்தல் என்ற தன்மைபெற்று இயங்குகிறது. உணர்தலில் கூட மூன்று இயக்கநிலை உண்டு. அவை: 1) உணர்தல் 2) அதனாலேயே (அனுபவம்) இன்ப துன்ப அனுபவமடைதல் 3) ஒன்றோடு ஒன்று, ஒரு இயக்கத்தோடு ஒன்று பிரித்துணர்தல், இவற்றை ஆங்கிலத்தில் Cognition, Experience, Discrimination என்று வழங்குகிறோம்.

இதே அறிவு மனிதனின் ஆறாவது நிலையான சிந்தனை அறிவாற்றலாக, இயற்கையின் முழுமையை உணர்ந்துகொள்ளத் தகுந்த பேராற்றலாக, தன்மூலமும் முடிவும் அறிந்து, தான் யார் என்ற தன்னிலை விளக்கமடையும் சிறப்பாற்றலாக உயர்வு பெறுகிறது. அப்படி உயர்வு பெற்ற நிலையில், அறிவை அறிந்த வழக்கத்தில், உடலாக, உயிராக, உணர்வாக அவற்றின் முடிவில் பரமாக இருப்பவன் எவனோ, அவனே நான், "நான்" எனப்படுபவனே "அவன்" எனப்படுகிறான்; தெய்வம் எனப்படுகிறான்; ஆதிஎனப்படுகிறான்; பிரம்மம் எனப்படுகிறான். அவனை விடுத்துத் தனியே ஒரு நிகழ்ச்சியும் இல்லை. 'அவனே நான்', 'நானே அவன்' என்ற தெளிவே, ஆன்மாவின் நிலையும் அதன் இயல்பும் அறிந்த தத்துவ விளக்கமே, அறிவையறிந்து அறவழி பிறழாது வாழும் உயர் நெறியே 'ஞானம்' என்றும் 'முழுமைப்பேறு' என்றும் வழங்கப்பெறுகின்றது. 


 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 "உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள்
அருட்பேராற்றலின் இயற்கை மெய்பொருள்".

 "உயிர் என்பது பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திற்கும்
அடிப்படையான இயக்க மூலக்கூறு ஆகும்".

 "மணியின் ஓசை போல, பூவின் மனம் போல,
நெருப்பிலே வெளிச்சம் போல, உயிரின்
ஆற்றலே அறிவாக விளங்குகிறது"


இணைந்துணர் இன்பம் :

"முற்றறிவு சுத்தவெளி மூல ஆற்றல்
முதற்பொருளாய் இருந்த சிவம் உயிர்களூடே
பற்றறிவாய்த் தேவை பழக்கம் சூழ்ந்த
பலநிலைகட் கேற்ப ஐந்து புலன்கள் மூலம்
கற்றறிவாய் விரைவு பருமன் தூரம்
காலம் என்ற கணக்குகளாய் எல்லைகட்டிச்
சிற்றறிவாய் இயங்கு திருவிளை யாட்டைத் தன்
சிந்தனையால் உணர் இன்பம் சிவயோகம் ஆம்".

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

சனி, 13 ஜூன், 2015

Q : When you speak of Enlightenment of Consciousness, are you talking about someone understanding an experience of shifting consciousness?


A : What is direct understanding? You think you can understand God through perceptual experience! In the perceptual experience, two things are clashing with one another, and thus, the feeling is perceptual. Note that the consciousness doesn't have form. Neither God does have form. When consciousness becomes one with the God, then where is the clash or perception?

வெள்ளி, 12 ஜூன், 2015

வேதாத்திரிய சிந்தனைகள் :


* ஒவ்வொரு செயலுக்கும் ஓர் விளைவுண்டு. அந்த விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமைதியும் இன்பமும் ஏற்படும்.

* பிறர்க்கு எவ்வகையிலும் தீமை ஏற்படாதபடி எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழ்வது தான் ஒழுக்க வாழ்வு ஆகும். மற்ற எல்லாம் இழுக்கான வாழ்வாகிய துன்பத்தையே தான் கொடுக்கும். இதனால் காரண காரிய விளைவு அறிந்து இன்பம் தரும் நற்செயல்களிலேயே ஒருவன் ஈடுபடவேண்டுவது அவசியமாகிறது.

வியாழன், 11 ஜூன், 2015

அறிவை அறிய

நான்யார்?" என்ற கேள்வி எழுந்துவிட்ட பின்னர் அதற்குச்
---------------------------------------------------------------------------------------------
சரியான விடை காணும் வரை அறிவிற்கு அமைதி கிட்டாது.
---------------------------------------------------------------------------------------------
...
.
"நான்யார்?" என்பதற்கு விடை கிடைத்தால் தெய்வ நிலை அறியலாம், 'மெய்ப்பொருள்' என்பதை பற்றி உணரலாம். 'அறிவு' என்ன என்பது உணரப்படும்.

.
ஆக 'அறிவை' அறிதல், 'தெய்வநிலை' அறிதல் பிரபஞ்சத்திற்கு மூலகாரணமாக 'உள்ளதை அறிதல்' எல்லாமே ஒன்றுதான்.

.
அறிவை அறியவேண்டும் என்ற ஆர்வம் தான் "நான் யார்?" என்ற கேள்வியாகும். சிந்திக்கும் ஆற்றல் ஒங்கப் பெற்ற அறிவாளிக்கு "நான் யார்?" என்ற கேள்வி எழுவது இயல்பு. இக்கேள்வி எழுந்துவிட்ட பின்னர் அதற்குச் சரியான விடை காணும் வரை அறிவிற்கு அமைதி கிட்டாது. "நான் யார்?" என்ற கேள்வி இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு வாக்கியந்தான் என்றாலும் அதற்குள் இந்தப் பிரபஞ்ச இரகசியங்கள் அனைத்துமே அடங்கியுள்ளன.

.
அறிவை அறிய :

.
(1) மெய்ப்பொருள் உணர்ந்தோர் தரும் உரை மூலம் விளக்கம்,

(2) அனுபவம் மூலமாக தெரிந்து கொள்ள முறையான "அகநோக்குப் பயிற்சி" (Simplified Kundalini Yoga)

.
ஆக இந்த இரண்டு வழிகளைப் பின்பற்ற வேண்டும். உணர்ந்து கொள்வோர் ஆற்றலுக்கேற்ப பயன் விரைவும், முழுமையும் உண்டாகும்".

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புதன், 10 ஜூன், 2015

நட்பு

"குடும்பத்தில், சமுதாயத்தில், நாட்டில், உலகில் எல்லா மக்களிடையேயும் நட்பு நலம் காக்க வேண்டியது மனித இனவாழ்வுக்கு மிகவும் அவசியம். நட்பு குலையக்கூடிய மனோ நிலைகளை மாற்றி ஒவ்வொருவரும் தன்னை உயர்த்திக் கொள்ள 'மனவளக்கலைப்' பயிற்சிளில் (Simplified Kundalini Yoga) 'அகத்தாய்வு' என்ற தலைப்பில் எண்ணம் ஆராய்தல், ஆசைசீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற பயிற்சிகள் முறையாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இப் பயிற்சிகளைக் கற்றுப் பழக்கமாக்கிக் கொண்டால் ஒவ்வொருவரும் உலக மக்கள் அனைவருக்கும் நண்பர்களாக வாழலாம். மேலும், எளிய வாழ்க்கை, இன்சொல், இன்முகம் காத்தல் மூன்றும் ஒருவரைச் சூழ்ந்துள்ளவர்கள் அனைவரையும் மனம் ஒத்த நண்பர்களாக்கும்".
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 9 ஜூன், 2015

தற்சோதனை

 "எண்ணம், சொல், செயல் என்ற மூன்று பிரிவுக்குள் மனிதன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் அடங்கும். புலன் கவர்ச்சியில் சிக்கி நிற்கும் போது விளைவறியாமல் எண்ணுதலும், பேசுதலும், செயல் புரிதலும் இயல்பு. இவை பழக்கத்தால் திரும்பத் திரும்ப எழுச்சி பெற்று இயங்கும். காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப தவறான எண்ணம், பேச்சு, செயல் இவற்றால் பல தீமைகள் எழுகின்றன, துன்பங்கள் விளைகின்றன.

தன்னிடமிருந்து அவ்வபோது எழும் எண்ணம், சொல், செயல் இவற்றை ஆராய்ந்து தவறானவற்றை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். பிறகு தவறுகளைத் திருத்தி நலம் தரும் முறையில் எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கான உளப்பயிற்சியே தற்சோதனையாகும்.

முதலில் எண்ணங்களைத் திருத்தி அமைக்க ஒருவாரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். காலை, மாலை அமைதியான ஒரு இடத்திலமர்ந்து உங்களிலிருந்து எழும் எண்ணங்களின் தன்மைகளை ஆராயுங்கள். தவறானவற்றை - துன்பம் விளைக்கும் எண்ணங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். "இந்த எண்ணம் எனக்கு இந்த வகையில் துன்பம் அளிக்கும். ஆகவே இது தவறு. இதற்கு நான் இடங்கொடுக்க மாட்டேன்" என்று பல தடவை அந்த எண்ணத்தோடு இணைப்பு எண்ணத்தைச் சேர்த்து விடுங்கள்.

 இதுபோன்றே அடுத்த வாரம் சொற்களைப் பற்றி ஆராயுங்கள். உங்களின் எந்தச் சொற்களால் உங்களுக்கோ பிறர்க்கோ வருத்தம் உண்டாகுமோ அவற்றைக் குறித்துக் கொண்டு மீண்டும் அத்தகைய சொற்களைப் பயன் படுத்தாதிருக்க மன உறுதி செய்து கொள்ளுங்கள. பிறரோடு பேசும்போது அத்தகைய சொற்கள் எழாமல் விழிப்போடு காத்துப் பழகுங்கள்.

.
மூன்றாவது வாரம் செயல்களைப் பற்றி ஆராயுங்கள். தவறான செயல்களைக் குறித்துக் கொண்டு அச்செயலை மீண்டும் அந்த முறையில் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். நாள்தோறும் அத்தகைய செயல்களுக்குத் தொடர்பான நபரோ, தேவையோ, சூழ்நிலையோ வரும்போது மிகவும் விழிப்பாக இருங்கள். தவறு புரியாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

 இவ்வாறு உங்களை நீங்களே தற்சோதனை என்ற புடத்திலிட்டு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் அழுக்குகளை நீக்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்று வாரத்திய தற்சோதனைப் பயிற்சி உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு விழிப்போடு இருக்கும் பழக்கத்தை அளிக்கும். வாழ்வைத் தூய்மை ஆக்கும். வெற்றியளிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் ஓங்கும்."

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 'தற்சோதனையின் பயன் குறித்த மகரிஷியின் கவி. '
---------------------------------------------------------------------------------

பண்புப் பயிற்சி:

"விழிப்பு நிலை என்ற ஒரு வெளிச்சம் கொண்டு
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலைமனத்தின்
அழுக்கைத் தற்சோதனையால் துடைத்து வந்தால்
அன்பூறும் கடமை யுணர்வாகும் வாழ்வு
பழுத்துவரும் அறிவு அந்தப் பக்குவத்தால்
பலப்பலவாய் வாழ்வில் வளர் சிக்கல் தீரும்
முழுக்கல்வி இது உண்மை அறிவிற்கு எட்டும்
முறையாகப் பயின்றிடுவீர் வெற்றி காண்பீர் !"

எண்ணம் சீர்பட தற்சோதனை :

"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 8 ஜூன், 2015

சினத்தைத் தவிர்ப்போம்


சினம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்று ஆராய்வோம். சினம் எழும்போது என்னென்ன மாறுதல்கள் உடலிலும், உள்ளத்திலும் உண்டாகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். சினத்தால் உடலிலே உள்ள உயிர்ச்சக்தி விரைவு கொள்கிறது. குருதி அழுத்தம் ஏற்பட்டு இரத்த வேகம் அதிகரிக்கிறது. கண்கள் சிவக்கின்றன. நரம்புகளில் படபடப்பு ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன. இவ்வாறு பலவிதமான குறிகளைப் பார்க்கின்றோம்.
.
இதன் விளைவாக உடலிலே பல தொடர் நோய்கள் உண்டாகின்றன. கண்நோய், நாக்குப்புண், வயிற்றுப்புண், மூலம், மலச்சிக்கல் போன்ற பலவாறான நோய்கள் உருவாகச் சினம் ஏதுவாகின்றது. ஏனெனில் சினம் எழும்போது நமது ஜீவகாந்த சக்தியானது அதிகமாக வெளியேற்றப்படுகிறது. .ஜீவகாந்த சக்தி அதிகமாக வெளியேற்றப்பட்டால் அது உடலையும் தாக்கும், மனதையும் கெடுக்கும்.
.
சினம் என்பது என்ன என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சினமானது எவ்வளவு கொடியது என்பதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்திலே அனுபவமாகக் கிடைத்திருக்கும். சினம் எழுந்தால் அது பிறர் உள்ளத்தையும் புண்படுத்துகிறது: தன்னையும் அதாவது தன் உடலையும், தன் மனத்தையும் கேடுறச் செய்கிறது. தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெடுத்து, தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கிப் பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட பகை உணர்வு சினமாகும்.
.
நெருங்கிய நண்பர்களிடத்திலே, சுற்றத்தார்களிடத்திலே, நம்மோடு அன்பு கொண்டு நமது நலத்துக்காகவே வாழ்த்து கொண்டிருப்பவர்களிடத்திலே தான் அதிகமாக அடிக்கடி சினம் வருவதைப் பார்க்கிறோம். தீமை செய்தார்க்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற பண்பாடு உடைய இந்த மனித சமுதாயத்தின் உயர்விலே நல்லது செய்பவர்களுக்கும் தீமை அளிக்கும் ஒரு எண்ண வேகம், உணர்ச்சி வேகம் சினம் என்றால் கட்டாயம் அதைத் தவிர்க்கத் தான் வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஒரு எண்ணத்தை, ஒரு தடவை எண்ணிவிட்டோம் என்றால்,
நாம் நினைக்காமலே மீண்டும் மீண்டும் அதே எண்ணம்
எழுந்து, எழுந்து அடங்கும். இவ்வாறு பல தடவை எழும்போது,
அந்த எண்ணமானது ஒவ்வொரு தடவையும் வலுப்பட்டுச்
செயலைச் செய்வதற்கு உடல் செல்களையும் தூண்டிவிடும்.
ஆகவே எண்ணத்திற்கும் அளவு வேண்டும்."

"தவம் தற்சோதனைக்கு உதவுகிறது. தற்சோதனையோ வாழ்க்கையில் விழிப்பு நிலையில் நின்று தவறில்லாமல் செயல்களாற்றி வாழ உதவுகிறது, சினம், கவலை
முதலியவற்றை விலக்கி வாழ்க்கையைச் சுவையாக்குகிறது."

"ஆன்மீக மேம்பாட்டில் வேகம் சிறிதாக இருந்தாலும்
ஒவ்வொரு நிமிடமும் முன்னேற்றந்தானே!
தீவிரமான ஈடுபாடும் பயிற்சிகளும் சீக்கிரமாக ஆன்மீக மேம்பாட்டைப் பெற்றுத்தரும்."

"சினம் கவலை எனுமிரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்துகொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதிநுட்பம் ஆராய்ச்சி குலைந்துபோகும்;
தினம் சிறிது நேரமிதற் கென்றொதுக்கிச்
சிந்தித்துச் சீர்திருத்த, இவ்விரண்டு
இனமும் இனி என்னிடத்தே எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

ஞாயிறு, 7 ஜூன், 2015

"நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம் ! எப்பொழுதாவது "நான் யார்?" என்றுகேட்டுக் கொள்கிறோமா ! ?. "...

 "இது நாள் வரையில் நமக்கெல்லாம் எப்போதுமே யாராகிலும் நம்மை நோக்கி சிறிது ஏதாவதுச் சொன்னால், "நீ யார்?" என்று கேட்டுத் தான் பழக்கம் ! எப்பொழுதாவது "நான் யார்?" என்று கேட்டுக் கொள்கிறோமோ என்றால் கிடையாது. எனவே முதல் முறையாக இன்று "நான் யர்ர்?" எனக் கேட்பது புதுமையாகத் தான் இருக்கும்.
.
அந்தப் புதுமைதான் மனிதனை மனிதனாக்க வல்லது. "நீ யார்?" என்று கேட்கையில் வெறுப்புணர்ச்சிதான் மேலோங்கி நிற்கும். அது மனம் விரைவாக (புறத்தே) இயங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிவயப்பட்ட நிலை.
.
"நான் யார்?" என்று கேட்கும்போது "என்னை இந்த உலகிற்கு அனுப்பியவர் யார்? உந்த உலகத்தை நிர்வகித்துக் கொண்டிருப்பது யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்குப் போகவேண்டும்? அது எப்பேர்ப்பட்ட இடம்?," என்றெல்லாம் எண்ணி அந்த எண்ணத்திலே, ஒரு எல்லைகாண, ஒரு எல்லை வகுத்துக் கொள்ளக்கூடிய கேள்விதான் "நான் யார்?" என்பது.
.
"நான் யார்?" என்பது இரண்டே வார்த்தைகள் கொண்ட கேள்விதான். இரண்டே இரண்டு சொற்கள் தான். இந்த இரண்டு சொற்கள் கொண்ட ஒரு கேள்வியிலே, அதற்கு அர்த்தம் மாத்திரம் புரிந்து கொண்டுவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியம் அத்தனையும் விளங்கிவிடும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

சனி, 6 ஜூன், 2015

"ஐயா, சூழ்நிலை காரணமாக நமக்குச் சினம் வரும்படி நண்பர்கள் தூண்டும் பொழுது, நாம் மனதை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?"

மகரிஷியின் பதில் :
---------------------------
 "நம் மனதில் முன்னதாகவே ஒரு ஒத்திகை (Rehersal) செய்து கொள்ள வேண்டும். "அவர்களோ அறியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும் நான் சினப்படாமல், எதிர்த்துக் கூறாமல்,
'என் வினைப் பதிவுதான் கழிகிறது'
என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்." என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக் கொண்டால், யார் என்ன கூறினாலும் அதைப்பற்றி மனம் வருந்த வேண்டிய அவசியமே வராது.
.
மனவளக்கலை மன்றங்களில் சினம் தவிர்ப்பதற்கென ஒரு தனிப்பயிற்சி முறை அளிக்கப்படுகிறது அப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்."

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஒரு எண்ணத்தை, ஒரு தடவை எண்ணிவிட்டோம் என்றால்,
நாம் நினைக்காமலே மீண்டும் மீண்டும் அதே எண்ணம்
எழுந்து, எழுந்து அடங்கும். இவ்வாறு பல தடவை எழும்போது,
அந்த எண்ணமானது ஒவ்வொரு தடவையும் வலுப்பட்டுச்
செயலைச் செய்வதற்கு உடல் செல்களையும் தூண்டிவிடும்.
ஆகவே எண்ணத்திற்கும் அளவு வேண்டும்."

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

வெள்ளி, 5 ஜூன், 2015

உடல் , மன நலன் காக்க

மனிதன் துன்பம் இல்லாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான் .
இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம்.
உடலானது முழுநலத்துடனும், ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்மேலும் இன்பம் தொடரும்.
உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வந்த இன்பம் குன்றி துன்பம் வந்து விடுகிறது.
துன்பத்தின் உக்கிரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படுகின்ற பாதிப்பு சில நேரங்களில் எதிர் கால இன்பத்தையும் வாழ்வையும கூட கொள்ளைகொண்டு விடுகிறது .
ஆகையால் உடல் நலமாக இருக்க உடற் பயிற்சியும் ,
மனம் நலமாக இருக்க அகத்தாய்வும் தினமும் தவறாது செய்தல் வேண்டும் ..

------வேதாத்திரி மகரிஷி
வாழ்க வளமுடன்
 

வியாழன், 4 ஜூன், 2015

நோயற்று வாழலாம்

"இன்று உள்ள சமுதாய சூழ்நிலையில் பலருக்கும் உடல் உழைப்பிற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் உடல் நலமாக இருக்க உடலின் எல்லா அவயங்களுக்கும் இயக்கம் தேவை. இல்லாவிட்டால் அங்கு கழிவுப் பொருட்களின் தேக்கத்தினால் இரத்தம், காற்று, வெப்ப, ஓட்டங்களில் தடை முதலியன ஏற்பட்டு நோய் ஏற்படலாம். எனவே, ஒவ்வொருவரும் உடல் அவயங்கள் அனைத்துக்கும் இயக்கம் அளிக்கின்ற மாதிரி எளிமையான சில உடற்பயிர்ச்சிகளைத் தினமும் செய்து வர வேண்டும்....

.
'உலக சமுதாய சேவா சங்கத்தில்' - கற்றுத் தரப்படும் 'எளிய முறை உடற்பயிற்சி'களைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நோயற்று வாழலாம். இந்த உடற்பயிற்சியின் நோக்கமானது உடலினை உறுதி செய்து கொள்வது மட்டுமல்ல; உடலமைப்பின் இயக்கத்தைச் சீர்படுத்தி, உள்ளத்தையும் வலுவாக்குவதன் மூலம், நம்மை பலவீனப்படுத்தி வந்த 'பழைய வினைப் பதிவுகளிலிருந்து விடுதலை பெறும் வழியையும் உள்ளடக்கியது'.

.
ஆர்வமுள்ளவர்கள், உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ உள்ள 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' பயிற்சி மையம் உள்ள இடத்தை விசாரித்து நேரில் சென்று பயிற்சிகளை கற்று நல்ல பலனடையலாம்.

.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
,

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

புதன், 3 ஜூன், 2015

True Realisation

How to identify them that have attained to God-Consciousness?

They would derive happiness from doing good to others and taking adversity in their stride;
And when harsh-tongued detractors seek to harass them,their response would be soft speech
seasoned in love and grace.

– Yogiraj Vethathiri Maharishi

செவ்வாய், 2 ஜூன், 2015

வாழ்க்கை நலன் :

மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை, என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம் தான் மிகவும் சிறந்த பாதையாகும்.

வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கம் ஆகும். மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பி என்றும் சொல்லலாம் ஒழுக்கத்தை.

இத்தகைய ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ உணர்ச்சிக்கோ கேடு உண்டாகும் எனில், அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு தான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், மனோதத்துவ, சுகாதாரத் துறைகளிலும், பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் கூர்ந்து ஆராய்ந்து ஞாபகத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை நலனுக்கு உகந்ததான இந்த ஒழுக்கத்தை உடலியக்கம் அறிவியக்கம் என்பதன் சிறப்பைவிட பெரும் சிறப்பாக மதிக்க வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
கற்பு ஒழுக்கம் :
-----------------------

"ஒழுக்கமே, மனிதஇனம் தனியாய்க் கூட்டாய்
உயிர்வாழ, உயர்வடைய, மிகவும்தேவை.
ஒழுக்கமது அனுபவத்தால் அறிஞர்கண்ட
உலக வாழ்க்கைச் சிற்பி, உற்றுப்பாரீர்.
ஒழுக்கங்களில் கற்பே சிகரம் போலாம்.
ஒவ்வொருவரும் அதனை உணரவேண்டும்.
ஒழுக்கத்தை உயிரைவிடப் பெரிதாய்க் கொள்வோம்.
உலக சமாதானப் பொது ஆட்சியின் கீழ்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

திங்கள், 1 ஜூன், 2015

கட்டாயம் கற்க வேண்டிய தொழில்கள் :


1) விவசாயம், 2) நெசவு, 3) சமையல், 4) வீடுகட்டல், 5) இயந்திரங்கள், விஞ்ஞானக் கருவிகள் இ...வற்றின் நுட்பங்கள் அறிந்து அவற்றை இயக்குதல், உற்பத்தி செய்தல் ஆகிய ஐந்து அடிப்படைத் தொழில்களையும், ஒவ்வொருவரும் இருபது வயதுக்குள்ளாகக் கற்றுக் கொள்ளவும், மேலும் யார் யாருக்கு எந்தெந்த தொழிலில், கலைகளில் விருப்பம் இருக்குமோ, அவைகளைக் கற்றுத் தேறவும், உலக மக்கள் வாழ்க்கைத் தேவைகளை அறிந்து அவரவர்களின் திறமை சக்திகளைப் பயன்படுத்தப் புதிய முறையில் மனித குல வாழ்க்கையை இன்பமயமாக்கவும் தகுந்த முறையில் நாம் தொழில் கல்வி முறையை வகுக்க வேண்டும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும், மனித வாழ்விற்கு இன்றியமையாத மேலே காட்டியுள்ள ஐந்து அடிப்படைத் தொழில்களையும் கட்டாயம் கற்கவும், அவரவர்களின் சிறப்புத் திறமை, ஆர்வம் இவைகளுக்கேற்ப குறிப்பான வேறு தொழில்கள் அல்லது கலைகளைக் கற்கவும் வசதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும், தொழில் கல்வி கற்கும் காலத்தில் மனோதத்துவம், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐவகை வாழ்க்கைத் தத்துவத்தையும் வயதுக் கேற்றபடி அறிந்து, உயர் நோக்கச் செயல் திறமைகளுடையவர்களாக வேண்டும்.

மனித இனத்திற்கு வாழ்க்கை - அறிவும், செயல் - திறமையும் தான் செல்வமாகும். அந்தச் செல்வம் குழந்தைகளிடத்திலே சிறுவயது முதலே வளர வேண்டும். இதுவரையில் மனிதன் அடைந்துள்ள முன்னேற்றங்களின் இறுதிப் பயனாக இருக்க வேண்டியது உயர்தர முறையில் குழந்தைகளை வளர்ப்பதேயாகும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்,
மூன்று வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது".

.
"குழந்தைகளை நாள்தோறும் இரண்டு முறை வாழ்த்திவர
நல்ல எதிர்காலம் குழந்தைகளுக்கு உண்டு".

.
"ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய
உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு
ஏற்றவாறு தான் அமையும்".

.
அரசியல்வாதிகள்:

"அரசியலும் வாணிபமும் மக்கள் தம்மை
அடக்கிடவும் உறிஞ்சிடவும் ஏற்றதாச்சு;
அரசியலே இவ்விரண்டில் முதன்மை என்ற
தறிந்திட்டார் சிலர், அதனால் திட்டமிட்டு
அரசியலைத் தந்திரத்தால் ஒழுங்கீனத்தால்
அடைய முயல்கின்றார்கள் போட்டியிட்டு;
அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும்
அவலநிலையை முதலில் மாற்ற வேண்டும்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.