Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 4 நவம்பர், 2014

அறிவுச்சோதனை...!

சீடர்கள் நான்கு பேர் உள்ள ஆசிரமத்தில் அவர்களின் அறிவுக்கூர்மையைச் சோதிப்பதற்காக குரு ஒரு பரீட்சை வைத்தார்....

சிறிது தூரத்தில் ஒரு பானையை கவிழ்த்து வைத்து விட்டார்.
.
.
முதலாமவனிடம் “ இந்த பானையில் என்ன இருக்கிறது..?” என்று கேட்டார்.,

பானை கவிழ்த்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்த அவன் “பானையில் ஒன்றும் இல்லை” என்றான்

அடுத்தவனிடம் அதே கேள்வியை கேட்டார்.

.
அந்த பானையில் ஏதோ இருக்கவேண்டும். அதனால் தான் முதலாமவன் கூற்றை குரு ஒத்துக்கொள்ளவில்லை, என்று எண்ணிய இரண்டாவது ஆள் பானையை நிமிர்த்திப் பார்த்து விட்டு “பானையில் ஒன்றுமில்லை” என்றான்.
.

மூன்றாவது சீடனிடம்.,”அந்த பானையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவனோ கையை விட்டு துழாவி பார்த்துவிட்டு “பானையில் ஒன்றுமில்லை” என்றான்..

.
.

நீங்கள் மூவர் சொல்வதும் தவறு. என்று கூறிவிட்டு,
.

நான்காவது ஆளைப்பார்த்து, “நீ என்ன சொல்கிறாய்?” பானைக்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டார். அவன் அதற்கு “பானை நிறைய காற்று இருக்கிறது என்றான்.
.
.
பிறகு குருவானவர் முதலாமவனைப்பார்த்து, “ அந்த பானையிலுள்ள காற்றை எடுத்துவிட வேண்டும் உன்னால் முடியுமா? ” என்று கேட்டார்

”அவன் முடியாது” என்றான்.

மற்ற இருவரும் அதே பதிலையே கூறினார்கள்.
.
.

நான்காமவன், “பானையிலுள்ள காற்றை எடுக்க முடியும்” என்றான்.

”எப்படி? எடுத்துக்காட்டு” என்றார், குரு.

பானையில் நிறைய நீரை ஊற்றினான். பிறகு குருவை பார்த்து “பானையிலுள்ள காற்றை எடுத்துவிட்டேன்” என்று கூறி பணிந்து நின்றான்.
.
.
அதுபோல் தீமையை அல்லது வேண்டாத ஒன்றை எடுத்துவிட முடியாது. ஆனால் நல்லதை நிரப்பினால் அது தன்னாலே மறைந்து விடும்.
.
.
இந்த தத்துவத்தை சீடர்களுக்கு உணர்த்தவே குரு மகான் அவ்வாறு செய்தார்...!!

அதேபோல் நாமெல்லாம் அது கெட்டது, இது கெட்டது என்று நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கிறோம்.

சமுதாய மக்கள் உறவிலே,...

கணவன் , மனைவி உறவிலே,

நண்பர்கள் உறவிலே எந்த தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, பத்து தடவை கெட்டது, கெட்டது என்று நினைத்தால், உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலை கெடுத்து விடும்.
.
.
அதை விட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்பட்ட பிறகு அவர் எனக்கு எத்தனை நன்மைகளை செய்தார் என்று எண்ணி எண்ணி அதையே பல தடவை நினைந்து நினைந்து உள்ளத்தில் நிரப்பிக்கொண்டு வந்தால், ஒரு சிறு தவறை அல்லது எங்கேயோ ஒரு மாற்றம் இருந்தால் கூடத் தெரியாது.
.

கணவன் மனைவி உறவிலே கூட திருமணத்தில் இருந்து இன்றுவரை அந்த அம்மா செய்த நன்மைகள் என்ன? என்று கணவன் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதேபோல அவள் கணவன் அவளுக்கு செய்த நன்மைகள் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
.
.
ஒருவர் மற்றவரைப்பார்த்து எண்ணிப்பார்த்தால் ஒவ்வொருநாளும் நன்மையை தான் பெற்றிருப்போம். நன்மைகளின் எண்னமே அழுத்த நினைவுகளாகும்.அப்படி நன்மையையே இனிமையான அனுபவங்களையே பெருக்கிக்கொண்டால், வெறுப்பு என்னும் தீமை நுழைய இடமே இல்லை.
.
.
.
ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால், பழிச்செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்து விடும். அதனை தூய்மையாக வைத்துக்கொள்வோம்.
.

நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம்.
.

மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால், வினைப்பதிவிலான அவன் தன்மைகள் தான்..
உருவ அமைப்பு, குணம், அறிவிலுயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம்- இந்த ஏழில் தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்போம்.
.
.
இந்த வேறுபாடு, 16 செயல்முறைகள் கூடி ஏற்படுகின்றன.அது உங்களுக்கு ஒரு அற்புதமான கணிப்பாக தெரியும்
.
.
“கருவமைப்பு, உணவுவகை, காலம், தேசம்
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,

பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப

உருவ அமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,
உடல் வலிவு, சுகம், செல்வம் மனிதர்க்குண்டாம்

தரும் இவற்றின் தன்மைகளின் அளவுக்கேற்ப
தனித்தினே அவ்வவற்றில் வேறுபாடு”.
.
.

கருவமைப்பு முதலான பதினாறு செயல்களுக்கேற்ப, சீவ காந்தம் ஒரு தன்மையைப் பெறுகிறது. உருவமைப்பு முதலாக ஏழு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால தான்.,

“வினைப்பதிவே தேகம் கண்டாய்” என்று முன்னோர்கள் மொழிந்துள்ளனர்
.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக