Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஞானாசிரியர்கள் பணி

எனது அன்னையார் ஊருக்காகவே வாழ்ந்தவர்கள். ஊருக்காகவே உழைத்தவர்கள். உடல் தளர்ந்த முதிய வயதிலும் கூட ஊருக்கு உழைப்பதிலே அவர்கள் ஓய்ந்ததில்லை. இரவு பகலாக உழைப்பார்க...ள். அவர்களால் நன்மை அடைந்தவர்கள் நேரிலே வந்து அவர்களைப் புகழ்வதையும் அனுதாபப்படுவதையும் நான் கேட்டிருக்கிறேன்.
"இந்த வயதிலே கூட, இரவு பகலாகக் கண்விழித்துக் கொண்டு 'இந்த வீட்டிலே உடல் நலமில்லாம்மல் இருக்கிறார்கள்... அந்த வீட்டிலே பிரசவமாக வேண்டும்...' என்றெல்லாம் ஓடுகிறீர்களே! படும்பாட்டுக்குக் காலணாக் காசும் வாங்குவதில்லை. என்ன பிரயோஜனம்? இப்படி ஓடாக இளைத்து வேறு போகிறீர்களே! இப்படி ஊருக்காகவே ஓடி ஓடி உழைப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளக்கூடாதா?" என்று வருவோரெல்லாம் கேட்கும்போது பதிலாக அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா?
"கண்ணு! எமன் இந்த உடம்பை எடுத்துக்கொண்டு போக வரும்போது எடை போட்டுப் பார்த்து 'குறைகிறதே! ஏன்?' என்றா கேட்கப் போகிறான்? உழைப்பினாலே அது ஓடாகிப் போனதால் அவனே ஒன்றும் வருத்தப்படப் போவதில்லை. நாம் ஏன் நம் உடம்பைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?"
இந்த சொற்களில் எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று ஞானாசிரியர்கள் சிந்துப் பார்க்க வேண்டும். இதுதான் ஞானம். இந்த அளவேலே தியாகம் செய்வதற்கு ஞானாசிரியர்கள்(SKY Masters) தயாராக இருக்க வேண்டும்.

- வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக