Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 29 நவம்பர், 2014

சுவாமிஜி! உடலைவிட்ட மனித உயிர்கள் மற்ற ஐந்தறிவு விலங்கினங்களிடம் இணைய முடியுமா?



மகரிஷி:
ஒவ்வொரு உயரினத்துக்கும் துல்லியமான பண்புகள் உண்டு. அந்தந்த உயிரினம் (Species) ஒரு தனிப்பட்ட இயக்கம் (Species Action) ஆகும். அவை தோன்றி வந்த பரி...ணாம வளர்ச்சியில் ஒவ்வொன்றும் தனித்தன்மையை அடைந்துள்ளன.

பரிணாம உயர்வில், மேம்பட்ட ஓர் உயிரினம் (Higher Species) தாழ்ந்த நிலைக்குப் (Lower Species) போகவே முடியாது. அதனால் உடலைவிட்ட மனித உயிர்கள் ஐந்தறிவு உள்ள உயிரினங்களுடன் இணைவது சாத்தியமில்லை. பரிணாம வளர்ச்சியில் ஒத்த நிலையிலுள்ள இரண்டு தனித்தன்மை வாய்ந்த உயிர்கள் கூட ஒன்றாக இனைய முடியாது.

இரண்டு கருவும் ஒன்று சேர்த்தாலும், ஒன்றுக்கொன்று ஏற்றுக்கொள்ளும் ஒத்த தன்மை இருந்தால்தான் அவ்விரு உயிரினமும் இணைந்து ஒரு புதிய இனமாக மாற்றம் பெற முடியும்.

மரம், செடி, கொடிகளில் சிறிது பேதம் இருந்தாலும் ஒத்துக்கொள்ளும். ஆனால் உயிர் சீவன்கள் என்று வரும்போது பரிணமாத் தொடர் இரண்டிற்கும் ஒத்து இருக்க வேண்டும். (Species) என்ற வார்த்தைக்குத் தனிப்பட்ட தன்மையுடையது (Specific Action) என்று பொருள்.
 

1 கருத்து:

  1. வெகு நாளாய் இந்த பதிலை பலருக்கு சொல்ல ஆசைப்படுவேன் .வாய்ப்பு உங்கள் மூலம் அமைந்தது .நன்றி .

    பதிலளிநீக்கு