Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மனநிறைவுக்கு இறையுணர்வும் ,அறநெறியும் துணை

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும் , பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கான வழிகளாகும். பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப்பார்ப்பதை விடுத்து, நிறைவையே காணக் கூடிய பயிற்சியைக் கொள்ள வேண்டும்.

எல்லாம்வல்ல இறைவன் அருளால் அமைத்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள் . இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! "ஏதேனும் ஒரு குறைபாட்டைக் கற்பித்துக் கொண்டு,... துன்பப்படுவதை விட்டு விட வேண்டும்."

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும் குறைகளைக் களைந்து மனநிறைவு கொண்டு வாழலாம். இதற்கு இறையுணர்வும் , அறநெறியும் துணை நிற்கின்றன.

ஆன்மீக வாழ்வே தன்னையும் தூய்மை செய்து கொண்டு, பிறர்க்கும் தூய்மை அளிக்கவல்லது. இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றயும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத் தன்மை, நியதி வழுவாத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் . சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவுக்கு எட்டும்.

எப்போது யார்யாரிடம் குறை காண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும். வானறிந்து உயிர் விளங்கி வரைகடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் ,பிறரையும் வாழவைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து மன அமைதி கிடைத்து விடும்.

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக