Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

இன்ப ஊற்று

என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன் என்னைப் படைத்திருக்கிறான் . பக்திமானாக இருந்தாலும், ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதியாகவே , அவனுடைய பகுதியாகவே தான் இருக்கிறேன் . பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது . இதைக் கொண்டு என்னென்ன நலம் செய்து கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன் என்று எண்ணிப் பாருங்கள் .

பிறருக்கு உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உத...வி செய்து கடமை உணர்வோடு நின்று பாருங்கள் பெரிய சக்தி வாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகி விடும். தினந்தோறும் அதைப் பயன் படுத்துங்கள் .

உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும். நீங்கள் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால் , அவர்களின் தேவைகள் உங்களுக்கு தெரிய தொடங்கிவிடும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால் செய்யச்செய்ய இன்ப ஊற்றுத் தான் மனதிலே வளரும். உங்களை அவர்கள் தெய்வத்தோடு தெய்வமாகவே நினைக்கும் ஒரு நல்ல காட்சி மனதில் ஏற்படும் .
உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்".
.

"நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம், இந்த உடல்
சமுதாயத்தின் சொத்து, அதனைக் கெடுப்பதற்கு
நமக்கு அதிகாரம் இல்லை".
.

இறையுணர்வில் எழும் பேரின்பம்:

"இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்;
நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்;
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்;
தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே".


-அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக