Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் படித்த பல்கலைக்கழகம் ???:


தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமெரிக்காவில் ரக்கட்ஸ் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில...் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல்துறை விஞ்ஞானிகளும் கூடியிருந்தனர்.
மகரிஷியைப் பற்றி அனைவரும் அறிந்தவர்களாதலால் , அவரவர் துறையில் எழும் வினாக்களைக் கேட்கத் தயாராகயிருந்தனர் .

விஞ்ஞானிகளின் சிந்தனைக்கு விருந்தளிக்கும் வகையிலும், அவர்கள் முழு மனநிறைவடையும் வகையிலும் கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்து வந்தார் .
"Swamiji have you read World History?" (சுவாமிஜி தாங்கள் உலக சரித்திரம் படித்திருக்கிறீர்களா?) என்று ஒரு சரித்திர பேராசிரியர் கேட்கிறார். புத்தகக் கல்வி பயிலாத மகரிஷி அதற்கும் பதில் அளிக்கிறார்.
I have not read the World History . But I know what it is. (தான் உலகச் சரித்திரம் படிக்கவில்லை. ஆனால் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிவேன்.)
" அது என்ன என்று சொல்லுங்கள்" என கேள்வி கேட்டவர் கேட்டார் .
நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு இதுவரை மூன்று துறைத் தலைவர்கள்தான் உலகத்தை ஆண்டு கொண்டுள்ளார்கள். அவர்கள் அரசியல் தலைவர்கள், பொருட்துறை தலைவர்கள், மதத் தலைவர்கள் . இவர்கள் மூவரம் எழுதப்படாத சட்டத்தில் இணைந்த உலகை ஆட்சி செய்கின்றனர். இதில் நல்லவர்களும் உண்டு.
ஆனால் சந்தர்ப்பவசமாக மனித குலத்தினுடைய சாபக்கேடாக
மதத்தினுடைய தன்மையை தெரியாத மூட நம்பிக்கையில் மூழ்கிய தலைவர்கள், பொருளாசையே மையமாக வைத்துப்
போட்டியிட்டு ஆயுதங்களைச் செய்து குவிக்கும் பேராசி பிடித்த பொருள்துறை தலைவர்கள் , எவ்வளவு வந்தாலும் அழித்தே இன்பம் காணும் அதிகார வெறி கொண்ட அரசியல் தலைவர்கள்.
இவர்கள் இதுவரை உலகில் மனித குலத்துக்கும் , பொருளுக்கும் என்ன அழிவைச் செய்தார்களோ அவற்றின் ஒரு தொகுப்புதான் இன்றைய உலக சரித்திரமாக இருக்கிறது .
மகரிஷியின் விளக்கத்தைக் கேட்ட அவையினர் கைத்தட்டி மகிழ்ச்சி தெரிவித்து "உண்மை , உண்மை " என்று ஆமோதித்தார்கள்.
மேலும் "உலக சசித்திரம் என்பது ஆதி முதல் இன்று வரை உலகம் எவ்வாறு தோன்றி வந்தது ? இன்றைய மனித குலத்தின் நிலை என்ன ? எதிர்காலத்தில் மனிதன் சிறப்பாக வாழ என்னென்ன தேவை என்பதை விளக்குவதாகவும் அமைய வேண்டும் " என்று விளக்கினார்கள் .
மகரிஷியின் பதில்களில் நிறைவு பெற்றனர் விஞ்ஞானிகள் இறுதியாக ஒரு விஞ்ஞானி "Swamiji which University you have studied ? (தங்கள் எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தீர்கள்?)
என்று கேட்டார் .
"I have studied in the city of Universe " (நான் பிரபஞ்சத்திலிருந்து அனைத்தையும் படித்துக் கொள்கிறேன்.)
இந்தப் பிரபஞ்சத்தை எடுத்துக்கொண்டு அதில் உள்ள ஒவ்வொரு பொருளாக ஆராய்ந்து படித்தேன் . பல்கலைக் கழகப் படிப்பைவிட உலகில் உயர்வான படிப்புக் கிடையாது என்ற அவர்களது அறியாமையும் அன்றோடு விலகியது.
பல கலைகளையும் கற்றுப் பல்கலைக் கழகமாக விளங்கியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக