Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 2 அக்டோபர், 2014

ஆன்மீக ஒளி :


நாம் உலகில் வாழ்ந்து வருகின்ற போது எத்தனையோ இடையூறுகள் வருகின்றன. அப்போது நாம் தேக்கமடைகின்றோம். சோர்வடைகின்றோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமானால் இவையாவும் மனிதன் தானாகவே ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமே ஒழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது. பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வசதிகள் யாவும் இயற்கை ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டே இருக்கின்றன. பற்றாக்குறை என்பது மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்வதுதான். மனிதன் மனிதனை ...உணர்ந்து கொள்ளாமை தான் பெருத்த குறைபாடாக இருந்து வருகிறது. ஆன்மீக அறிவு பரவினால் தான் மனிதன் இக்குழப்பங்களிலிருந்து விடுபட முடியும். ஆன்மீக அறிவு ஏற்படும் போதுதான் அன்பு மலரும். அன்பு மலர்ந்தால் தான் பிற ஜீவனிடமிருந்து கருணை பிறக்கும். அப்போதுதான் மனிதன் ஒத்தும், உதவியும் ஒழுக்கத்தோடு வாழ்ந்து இன்பம் காண முடியும்.
இயற்கை பரிணாமத்தில் ஐயறிவு உயிரின் தொடர்பாகவே மனிதன் தோன்றியிருப்பதால் அவன் இன்னும் ஐம்புலன் அறிவிலேயே சிக்கிக் கொண்டு அல்லல் படுகிறான். ஆறாவது அறிவின் நோக்கமாகிய தன் உணர்வு என்ற கட்டத்திற்கு இன்னும் அவன் முனையவில்லை. ஆகவேதான் மறதியில் இருந்து வேதனையும் சிக்கலும் அனுபவிக்கிறான். எனவே சிந்தனை ஆற்றல் மிக்க எல்லோரும் ஆன்மீக ஒளி பரவ வேண்டும் என்ற நன்நோக்கத்தை சதா நினைவில் இறுத்தி வரவேண்டும்.
நாம் எல்லோரும் சமுதாயத்தின் மத்தியில் இருந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே சமுதாய அமைப்பு நல்ல முறையில் இருந்தால் தான் நாமும் நல்லமுறையில் வாழ முடியும். எனவே நாம் சமுதாய நன்மையிலே நாட்டம் கொண்டு கடமையைச் செய்து வருவோமானால் நிச்சயம் நம்வாழ்வு மேம்பாட்டடையும். நம் குடும்பத்தில் முதலில் இனிமையை வளர்க்க வேண்டும். ஆன்மீக மணம் கமழும்படி நினைவோடு செயலாற்ற வேண்டும். அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருக்கும்படி பழக்கி வர வேண்டும். உணர்ச்சி வயப்பட்டு செலாற்றுவது தவிர்க்கப்பட வேண்டும். மனோதிடம் வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை நன்கு உணர்ந்து கொண்டு எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். அப்போதுதான் துன்பம் இன்றி வாழ முடியும்.
நமக்கு வேண்டுவது என்ன? அதை அடையும் முறையில் ஏதும் தவறில்லாமல் இருக்குமா? இதனால் பிறர்க்கு ஏதும் கேடுண்டாகாமல் இருக்கமா? என்றெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும். இதற்குத் தவமும் தற்சோதனையும் பெரிதும் பயன் அளிக்கும். இவை இரண்டும் நம் இரு கண்களுக்கு ஒப்பாகும். இவை வாழ்வை ஒளிமயமாக்கி இன்பத்தை கூட்டித் தரும்.
–தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக