Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கேள்வி: சுவாமிஜி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தவ முறைகள் எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால், தவமுடிவில் சொல்லும் 'ஓம் சாந்தி' என்பதை இந்து மதம் அல்லாதவர்கள் ஏன் கூற வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்குத் தங்கள் விளக்கம் என்ன

 
வேதாத்திரி மகரிஷியின் விடை: 'ஓம்' என்பது இறைநிலையைக் குறிக்கும் ஒரு சங்கோத நாமகரணம். இது எந்த மதத்தையும் சார்ந்ததோ அல்லது சடங்கு முறையோ அன்று.

இறைநிலை என்பது குணம் கடந்த ஒன்று, அது குணாதீதம். அதன் ஒரு குணம் மௌனம். இறைநிலையைக் குறிக்க... மௌனமென்ற குணத்தை வைத்து, மாத்திரைக் குறைவான 'ம்' என்ற மகர மெய்யைத் தேர்தெடுத்தார்கள்.

மகர ஒற்றைத் தனித்து உச்சரிக்கக் கூடாது என்பது தமிழ் இலக்கணம்! அதனுடன்('ம்'-முடன்) சேர்க்க ஒவ்வொரு உயிர் எழுத்தாகச் சோதித்துப் பார்த்தார்கள். மூலதாரதில் எழுந்து துரியத்தில் முடியும் முழு உயிர் எழுத்தாக வருவது 'ஓ' என்ற சப்தம் தான். 'ஓ' என்ற சப்தத்துடன் 'ம்' என்ற மகர ஒற்றை இணைத்து 'ஓம்' என்று இறைநிலைக்கு புனிதப் பெயர் வழங்கினார்கள்.

இது(ஓம்) ஒரு நல்ல கருத்துடைய சொல்லாகத் தற்செயலாக அமைந்து விட்டது! இறைநிலை எல்லா மதத்திற்கும் பொதுவானது. எனவே இதுவும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றே!

சாந்தி என்றால் அமைதி என்பதாகும். 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்று தவ முடிவில் கூறுவது, நாம் எல்லோரும் இறையருளால் அமைதி பொருவோம் என்பதேயாகும்.

விருபப்படாதவர்கள் வேண்டுமானால் இந்த வார்த்தையைக் கூறாமல் விட்டு விடட்டுமே! அப்படி விட்டு விட்டால் அதில் ஒரு குறிகிய கண்ணோட்டம் ஏற்பட்டு 'உலக சமுதாயம்' என்ற விரிந்த மனப்பான்மை போய்விடும். கூடவே நமது(WCSC - SKY) தவமுரையில் ஒரே சீரான முறையும்(uniformity) போய்விடும்.
.
.
.
.
.
குறிப்பு: அருள்தந்தை அவர்களின் விருப்பப்படி அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மனவளக்கலையை அளித்து வருகிறோம். தவ முடிவில் 'ஓம் சாந்தி சாந்தி சாந்தி' என்று கூறுவதால் சில பள்ளி, கல்லூரிளில் நமது பயிற்சிக்கு அனுமைதி மறுக்கப்பட்டது. ஒரே சீரான தவமுறை(uniformity) பின்பற்ற வேண்டும், குறிப்பாக மாணவர்களுக்கும் மனவளக்கலை சென்றடைய வேண்டும் என்ற குருவின் உயரிய நோக்கம் நிறைவேற....

தவமுடிவல் ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்பதற்குப் பதிலாக,

என் மனதில் அமைதி நிலவட்டும்
என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி, அமைதி, அமைதி

என்ற சிறு..... மாற்றத்தின் உட்பொருள் உணர்ந்து, குருவின் வழியில் பயணிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக