Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 27 அக்டோபர், 2014

ஐயா ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்தை அளக்க கருவியோ, அல்லது வேறு ஏதாவது ஒரு வழியோ உண்டா?

ஒரு நதி ஓடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் குறுக்கே ஒரு அணை கட்டுகிறார்கள். நதியின் வெள்ளத்தை கட்டுப்படுத்தி வைக்கவேண்டுமானால் அது அணையின் கொள்ளளவைப்பொறுத்து தானே இருக்கும்?...
.
.
அது போல நமது ஆற்றல் எல்லையற்றது என்றாலும் நாம் ஆற்றக்கூடிய சாதனையோ... நமது முயற்சியையும், மேற்கொள்ளும் பயிற்சியையும் பொறுத்ததாகத்தான் அமைய முடியும்.
.
.
பயிற்சியாளர்களில் சிலர் இறைநிலையோடு பொருந்திய எண்ணத்தை பின்வாங்குவது இல்லை. சிலரோ விட்டு விட்டு தங்களுடைய எண்ணத்தை இறைநிலையோடு இணைத்து வைக்கிறார்கள்.
.
.
இந்நிலை கண்டு யாரும் அதைரியப்பட தேவையில்லை. ஆன்மீக சாதனையை இப்போதாவது மேற்கொண்டுவிட்டோமல்லவா ? இதுவே பெரிய காரியம்தான்.
.
ஆன்மீக மேம்பாட்டில் வேகம் சிறியதாக இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் முன்னேற்றம்தானே! இந்த மந்தவேகமும் ஆரம்பத்தில்தான் இருக்கும்.
.
.
தீவிரமான ஈடுபாடும் பயிற்சிகளும் சீக்கிரமாக ஆன்மீக மேம்பாட்டை பெற்றுத்தரும்.
.
.
எடுக்கும் நற்காரியங்களிலெல்லாம் வெற்றியும், வெற்றியே பெறாவிட்டாலும் சலனமின்றி அமைதியாக இருக்கும் மனமும், பிறருக்கு உதவிகொண்டே இருக்கும் ஆர்வமும், ஆற்றலும் எந்த அளவுக்கு நமக்கு அமைந்து உள்ளன என்பதைக்கொண்டு நமது ஆன்மீக மேம்பாட்டை ஒருவகையில், ஓரளவில் கணக்கிடலாம்.
.
.
வாழ்க வளமுடன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக