Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 14 மே, 2013

குண்டலினியோகம்


மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனம் உள் ஒடுங்கவும், பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனதின் புலன் இயக்க வேகத்தைஎல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்று படுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. எல்லைக்கு உட்படாத 'மனம்' ஒன்றில்தான...் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை, பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதே 'அகத்தவம்' (Meditation) எனும் "குண்டலினி யோகமாகும்". அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால், ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல, உலகின் உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. எனவே மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னத உளப்பயிற்சியே "குண்டலினியோகமாகும்".


 அறிவின் முழுமைப்பேறு:
---------------------------------

"தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்;
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்துகொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்
திருத்தமுடன் உரைப்போர் யார்வாரீர் சொல்வேன்".

.
சுய சரித்திரம் :
-----------------

"அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க;
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்,
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக