Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 16 மே, 2013

தத்துவ ஆராய்ச்சி

கேள்வி:
ஐயா, நான் தத்துவ ஆராய்ச்சி செய்ய நினைக்கிறேன். எனக்கு அறிவுரை கூறுங்கள் ?.

மகரிஷியின் பதில்:
ஐந்து அடி உயரம் உள்ள தந்தை 'அவரை' பந்தலில் காய் பறிக்கிறார். அவருக்கு காய் எட்டவில்லை. அருகில் இருந்து அவரது ஐந்து வயது மகன், " அப்பா நான் காய் பறித்து தருகிறேன்", என்கிறான். " உன்னால் எப்படி முடியும்", என்கிறார் தந்தை.... அதற்கு அவன், "என்னைத் தூக்கி உங்கள் தோளில் அமர்த்திக் கொள்ளுங்கள்" என்கிறான். தந்தையும் அவ்வாறே செய்ய மகன் எளிதாகக் காய் பறித்து கொடுக்கின்றான். அன்பரே, என்னுடைய 89 ஆண்டு கால வாழ்க்கையில் இளமைப் பிராயமான 20 ஆண்டுகளைக் கழித்து விட்டால் 69 ஆண்டுகள் ஆன்மீக வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவத்தை, ஆராய்ச்சியை உங்களுக்கு கொடுத்துள்ளேன். தவ முறைகளும், தத்துவமும் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளேன். இதை நீங்கள் பயிற்சி செய்து வாழ்வின் நோக்கத்தை உணரலாம். இறைநிலையை உணரலாம். உடல் நலம், மன நலம் பெற்று சிறப்பாக வாழலாம். அதற்கு மேல் உங்கள் ஆராய்ச்சியை அமைத்துக் கொள்ளலாம்.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக