Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 20 மே, 2013

"வாழ்க வையகம்" :


 நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல்கட்டிலோ போதிய வலிவு இல்ல...ாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ சோர்வுறவோ வேண்டாம். உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோவலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றளிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மாகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும். உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் " வாழ்க வையகம்" என்ற மந்திரத்தை பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள். அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது. 

  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"மனதின் உயர்வு எதுவோ அதுவே மனிதனின் உயர்வு". . " தான் உயரவும் பிறரை உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும் தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன".

.
"வாழ்க வளமுடன்" என்ற வாழ்த்து எல்லா மந்திரங்களையும் விட உயர்ந்த திருமந்திரமாகும்" .

.
"மனத்தூய்மை பெற்றால்தான் வினைத்தூய்மை பெற முடியும்.
-----------------------------------------------------------------------------------------------
அதற்கு அகத்தவ பயிற்சி (Simplified Kundalini Meditation) அவசியம்
-----------------------------------------------------------------------------------------------
வேண்டும்."
----------------

.
"வினைத் தூய்மை பெறவேண்டின் மனத்தின் தூய்மை
வேண்டுவது இன்றியமையாத தாகும்;
வினைத்தூய்மை ஒழுக்கமுடன் கடமை, ஈகை,
விளங்கும் அறநெறி நிற்க விரைந்து ஓங்கும்
வினைத்தூய்மை வித்தான மனத்தின் தூய்மை
விண்ணுணரும் அகத்தவத்தால் ஓங்கும் உய்ய
வினைத்தூய்மை மனத்தூய்மை ஒன்றை ஒன்று
உயர்த்தி மனிதன் தெய்வமறியச் செய்யும்."

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக