Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 மே, 2013

விளைவு



எதை வேண்டினாலும் அதற்கு உரியது செய்தால் தான் வரும். எல்லாம் வல்ல இறைவன் ஏதோ ஒன்றும் தெரியாதவன் என்று நினைத்துக் கொண்டு, 'கடவுளே, உனக்குப் பத்து தேங்காய் கொடுத்து விடுகிறேன். நீ எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு', என்று பிரார்த்தனை செய்து கொள்கிறான். இவனுடைய தேங்காய்க்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று எண்ணுவது எவ்வளவு அறியாமை!

எந்தச் செயல் யார் செய்தாலும் அந்தச் செயலிலே விளைவாக வரு...கிறான் அந்த இறைவன். நல்ல நோக்கத்தோடு, திறமையோடு ஒருவர் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இன்பம் என்பது ஊற்றெடுத்து வருவதைப் பார்க்கலாம். அதேபோல பேராசையையோ மற்ற தவறான வழியிலேயோ மனதை வைத்துக் கொண்டு திறமையற்ற முறையிலே செயலைச் செய்யும் பொழுது, இந்தச் செயல் தவறு என்று உணர்ந்து இவன் திருத்திக் கொள்வதற்காக இறைவன் அந்தச் செயலிலே துன்பத்தை வைத்திருக்கிறான். இதுவே 'செயலிலே விளைவு' எனும் எல்லா மதங்களுக்கும் உட்பொருளான கருத்து ஆகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக