Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 29 டிசம்பர், 2014

சுத்தவெளி ஒரு பேராற்றல்


நாம் எங்கே வாழ்கிறோம்? பூமி, உருண்டை என்ற உலகின் மீது. இந்த பூவுலகின் எடை என்ன இரு...க்கும்? பல கோடி டன்கள் இருக்கலாம் அல்லவா? இதே உலகம் ஆண்டுக்கு ஒரு முறை சூரியனை வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனின் எடை எவ்வளவு இருக்கும்? பூமியைவிட சூரியன் 3.33 லட்சம் தடவை எடை அதிகமாக உள்ளது. இப்பொழுது யூகிப்போம். சூரியனும், பூமியும் சேர்ந்தால் மொத்த எடை எவ்வளவு இருக்கும்? நம்மால் சாதாரணமாக கணக்கிடவே முடியாது. எனினும், நமது யூகத்தால் ஓரளவு அனுமானம் கொள்ளலாம். சூரியனும், பூமியும் சேர்ந்து கணக்கிலடங்காத கோடி கோடி டன்கள் எடை இருக்கும் என்று நம்பலாம்.
அடுத்தபடியாக, சூரியனும், பூமியும் எங்கே இருக்கின்றன? இரண்டு கோள்களுமே சுத்தவெளியில்தான் லேசாக மிதந்து, உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது சிந்திப்போம். ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் மிதக்கிறது என்று சொன்னால் எந்தப் பொருள் வலிதாக இருக்கும்? மிதக்கும் பொருளைவிட தாங்கும் பொருள்தான் வல்லமை உடையாதாக இருக்க வேண்டும்.
இந்த கருத்தை மனதால் கணித்துப் பார்த்தோமானால் சூரியன், பூமி இரண்டைவிட சுத்தவெளி அதிக வல்லமை உடையதுதான் என்று ஐயமின்றி விளங்கிக் கொள்வோம். இதனால், சுத்தவெளி எந்த ஆற்றலும் இல்லாத ஒரு வெற்றிடம். அல்லது சூன்யம் என்ற கருத்து மாறிவிடுகிறது. நமக்குத் தெரிந்த சூரியக் குடும்பத்தையும் மேலும் ஆகாய வெளியில் உலவும் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்களையும் லேசாகத் தாங்கிக் கொண்டிருக்கும் சுத்தவெளியின் பேராற்றலும் அதன் வல்லமையும் இணையற்றது என்று விளங்கிக்கொள்கிறோம்.
---அருட் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக