Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 19 டிசம்பர், 2014

வருங்காலம் உணர்தல்


மனித மனம் சீவகாந்த அலை இயக்கம். அதற்கு உட்பொருள் இறைநிலை. உலகத் தொடர்பு புறத்தே இருந்து வருகின்ற உந்து ஆற்றலால் அமைகிறது. சில சமயம் முறையாக உளப்பயிற்சி செய்து இறைநிலைக்கு நெருக்கமாக மன இயக்கத்தை கொண்டு வரும் பொழுது இறையாற்றலின் நுண்மான் நுழைபுலன் இயக்கத்தினால், அது ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நிகழ்ச்சிகள் அறிவுக்குப் புலனாகும்.
...
உறவினர்களோ, மற்றவர்களோ ஒரு மனிதனை நினைத்து, ஏதோ அவனுக்கு நன்மையோ தீமையோ செய்ய வேண்டுமென்று திட்டமிட்டால், அவர்களுடைய எண்ணங்கள் செயலுக்கு வருமுன்பே இவனிடத்தில் பிரதிபலித்து அகக்காட்சியாகும். பின்னர், அந்த எண்ணங்கள் செயலாக மாறி நிகழ்ச்சியாக நடைபெறும்போது, 'இது முன்னமே எனக்கு எப்படித் தெரிந்துள்ளது?' என்று அவனுக்கு வியப்பாகத் தோன்றும்.
மனத்திற்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்தால் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாத, உணர்ச்சி வயப்படாத விழிப்பு நிலையில் நின்று இறை உணர்வு பெரும் வகையில் உயரும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக