Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 1 டிசம்பர், 2014

ஓர் அன்பரின் கேள்வி ; மகாத்மா காந்தி தீயவைகளை பார்க்காதீர்கள் ;தீயவைகளை கேட்காதீர்கள்; தீயவைகளை பேசாதீர்கள் என்றார். ஆனால் தீயவைகளை பார்த்தால்தானே தீயவைகளை கடைபிடிக்காமல் விட முடியும்..?

ஒரு கதை சொல்வார்கள்...
ஓர் அரசன் காக்கா சண்டைப் போடுவதை பார்க்க வேண்டும், அதுவும் காலையில் எழுந்திருக்கும்போதே காக்க சண்டைப் போடுவதைப் பார்க்க வேண்டுமாம்.
அவனுக்கு எப்படித்தான் அப்படியொரு எண்ணம் வந்ததோ தெரியவில்லை. தன் விருப்பத்தை வேலையாளிடம் சொல்லிவைத்தான்,
ஒருநாள், இரண்டு காக்கா சண்டை போடுகின்றன. ஓடி வந்து மன்னனை எழுப்பினான். மன்னன் எழுந்து வந்தான். அவன் வருவதற்கும் சண்டை முடிந்து போயிருந்தது.
“என்னடா பொய் சொல்றே?? என் தூக்கத்தை வேற கலைச்சிருக்க.”
“ஐயோ சாமி, காக்கா சண்டை போட்டதை நான் கண்ணாலே பார்த்தேன்”
”பொய். இவனுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்”
மறுநாள்,
தண்டனை நிறைவேற்றும் முன் வழக்கப்படி அவனிடம், உன் கடைசி விருப்பம்..என்ன? என்று கேட்டார்கள்.
”மன்னனிடம் ஒரு செய்தியைச்சொல்ல வேண்டும்... அதுதான் என் கடைசி விருப்பம்.!”
மன்னன் வந்தான்.
இவன் சொன்னான் ; “மகாராஜா ! இனிமேல் நீங்கள் எப்பவும் இரண்டு காக்கா சண்டைப் போடுவதை பார்த்துவிடாதீர்கள்”
“ஏன் அப்படி சொல்கிறாய் ?”
“காக்கா சண்டை போடுவதை பார்த்த எனக்கு என்ன ஆச்சு பார்த்தீங்களா?? மரண தண்டனை !!”
அப்படி பார்த்து விளைவை கண்டவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் கேட்டால் கேளுங்கள் , கேட்கா விட்டால் விடுங்கள்.
ஏற்கனவே அந்த அனுபவம் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.
நீங்களும் பார்த்து அந்த அனுபவம் பெற வெண்டுமானால் பெறுங்கள்.
அப்படி இல்லையானால் அவர்கள் சொல்வதை கெட்டுக்கொண்டு பயன் பெறலாம்
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக