Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 2 ஜூன், 2015

வாழ்க்கை நலன் :

மனித இனமானது வாழ்விலே, தனிமனிதன் கடமை, கூட்டு வாழ்வின் கடமை, என்ற இரண்டையும் சரிவர நிறைவேற்றி வருவதற்கு, ஒழுக்கம் தான் மிகவும் சிறந்த பாதையாகும்.

வெகுகால அனுபவத்தால், ஆராய்ச்சியால், அறிவின் உயர்வில் கண்ட விளக்கமே ஒழுக்கம் ஆகும். மனித வாழ்க்கையைச் சீர்படுத்தும், செம்மைப்படுத்தும், ஒரு சிற்பி என்றும் சொல்லலாம் ஒழுக்கத்தை.

இத்தகைய ஒழுக்கங்களில், கற்பு ஒழுக்கமே தலையாயது. எண்ணம், சொல், செயல்களின் விளைவால் தனக்கோ உணர்ச்சிக்கோ கேடு உண்டாகும் எனில், அதைச் செய்யக் கூடாது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு தான் பலவிதமான ஒழுக்கங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கற்பொழுக்கம் தவறினால் ஏற்படும் விளைவு, தனி மனிதன் வாழ்விலும், சமுதாய வாழ்விலும், எதிர்கால மக்கள் வாழ்விலும், மனோதத்துவ, சுகாதாரத் துறைகளிலும், பல கேடுகளைப் பயப்பதை ஒவ்வொருவரும் கூர்ந்து ஆராய்ந்து ஞாபகத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை நலனுக்கு உகந்ததான இந்த ஒழுக்கத்தை உடலியக்கம் அறிவியக்கம் என்பதன் சிறப்பைவிட பெரும் சிறப்பாக மதிக்க வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
கற்பு ஒழுக்கம் :
-----------------------

"ஒழுக்கமே, மனிதஇனம் தனியாய்க் கூட்டாய்
உயிர்வாழ, உயர்வடைய, மிகவும்தேவை.
ஒழுக்கமது அனுபவத்தால் அறிஞர்கண்ட
உலக வாழ்க்கைச் சிற்பி, உற்றுப்பாரீர்.
ஒழுக்கங்களில் கற்பே சிகரம் போலாம்.
ஒவ்வொருவரும் அதனை உணரவேண்டும்.
ஒழுக்கத்தை உயிரைவிடப் பெரிதாய்க் கொள்வோம்.
உலக சமாதானப் பொது ஆட்சியின் கீழ்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக