Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 12 ஜனவரி, 2015

பகலில் வேலை – இரவில் தூக்கம்

பொதுவாக முற்பகலில் தொழில்கள் செய்து
பிற்பகலில் கலைநிகழ்ச்சி களியாட்டங்கள்,
புதுவிதமாய் குழந்தை வளர்ப்புக்கு அமைந்த
பூஞ்சோலை நிலையம், ஆராய்ச்சி மன்றம்,
எது எதனில் எவருக்குப் பிரியம் உண்டோ,
ஈடுபட்டு ரசித்திடவே முறை வகுத்து
இதுவிதமாய் அனுபவித்து, எவரென்றாலும்
இரவு மணி ஒன்பதுக்குள் உறங்க வேண்டும்.
மனிதர்கள் எல்லோரும் பொதுவாக காலை ஐந்து மணி முதல் ஐந்தரை மணி வரை காலைக்கடன், ஐந்தரை முதல் ஆறு வரை தியானம், ஆறிலிருந்து ஏழு மணி வரை ஆகாரம்; ஏழு மணி முதல் பதினொன்று மணி வரையில் தொழில் செய்வார்கள்.
பிற்பகலில் ஒவ்வொரு தொகுதியிலும் அமைந்திருக்கும் புத்தகச்சாலை, விளையாட்டு மைதானம், குழந்தைகள் வளர் தோட்டம், கலைமன்றம், ஆராய்ச்சி மன்றம், விஞ்ஞானக் கூடம், ரசாயனச்சாலை – இவைகளில் எங்கேனும் சென்று அவரவர்கள் விருப்பப்படி பொழுது போக்குவார்கள்.
இரவு ஒன்பது மணிக்குள் எல்லா வகையான நிகழ்ச்சிகளும் முடிவடையும். பின்னர் அனைவரும் உறக்கம் கொள்ள அவரவர்கள் விடுதிகளில் சேர்ந்து விடுவார்கள்.
உலக சமாதானம் ஏற்பட்டு விட்டால், மனிதரிடையே யுத்தம் ஏற்படாது. அதனால் வீணாகும் மனித சக்தி சேகரமாவதுடன், யுத்த தளவாட உற்பத்திகளுக்குச் செலவழியும் மனிதமுயற்சியும் மீதியாகும். பணமும் வியாபாரமும் ஒழிக்கப் படுவதால், இதன் மூலமும் பல லட்ச மக்களின் உழைப்புச் சக்தி மிகுதிப்படும்.
சமையலும், குழந்தை வளர்ப்பும் பொதுவாக்கப் படுவதால், எல்லாப் பெண்களும் ஆண்களுடன் சமமாக வேலை செய்வார்கள். இதனால் பெரும் அளவு மனித சக்தி மீதமாகும்.
தேவையற்ற பொருட்களின் உற்பத்தி – உபயோகம் தடுக்கப்படுவதால், இதன் மூலமும் எண்ணிறந்த மனிதர்கள் உழைப்பு மிகுதியாகும்.
மனிதர் வாழ்விற்கு அவசியமான பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தினால், உலகில் இருபது வயது முதல் ஐம்பது வயது வரையில் உள்ளவர்கள் – அதாவது மொத்த எண்ணிக்கையில் பாதி பேர்கள் – தினம் நாலு மணி நேரம் உழைத்தால் எல்லா வாழ்க்கைத் தேவைகளையும் முடித்துக் கொள்ளலாம்.
அவசியத்திற்கேற்ப கொஞ்சம் நேரத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்ளலாம். இங்குக் குறிப்பிட்ட மணிகள் சில நாட்டு சீதோஷ்ண் நிலைக்குப் பொருந்தாமலிருக்கலாம். அத்தகைய இடங்களின் நிலைகைகளுக் கேற்றவாறு தொழில் நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மனிதனுக்கு உணவு, உடை, இடம், பருவத்திற்கேற்ற வாழ்க்கைத் துணை எவ்வளவு அவசியமோ, அதுபோலவே நித்திரையும் அவசியம் ஆகும். தேவையான அளவு நித்திரை இல்லாவிடில் இரத்த ஓட்டத்திற்கும், உடல் நலத்திற்கும் பல இடையூறுகள் விளையக் கூடும். ஆகவே, இரவில் ஒன்பது மணிக்கு அனைவரும் தூங்குவதற்கு வசதி வேண்டும் என்று எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக