Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சுவாமிஜி, இறைவனுக்கு படையல் படைப்பது எதற்காக?

மகரிஷியின் பதில் : மனித மனமானது இறைநிலையின் முடிவான பொருள். பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. அதுவே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் திணிவு பெற்று மடிப்புற்று விண் தோன்றி அது இணைந்து பஞ்சபூதங்களாகி அதன் பதம் அடைந்த கூட்டால் ஓரறிவு உயிர்கள் தோன்றி அதிலிருந்து பரிணமித்து ஆறறிவு மனிதன் வரை அவனே தான் வந்துள்ளான்.
இறைநிலையிலிருந்து எழுந்து வந்த நிலையில் இயங்குகின்ற உயிர்களுக்குத்தான் பசி, தாகம், இன்பம், துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஆசைகள் தோன்றும். ஏன் எனில், உயிர்களுக்கு உடலும், குடலும் வந்துவிட்டது! ஆனால் அரூபியான இறைவனுக்கு உடலும், குடலும் உண்டா? அவனுக்கு பசிக்குமா? இந்த ஒரு கேள்வியை எழுப்பி மனிதன் சிந்தனையால் விரிந்து விடையைப் பெற்று விட்டால் தேங்காய், பழம் மற்றும் பட்டு நகை இன்னும் மற்ற மற்ற பொருட்கள் எல்லாம், அணு முதற் கொண்டு அண்டம் ஈராக இப்பிரபஞ்சத்தை தன்னகத்தே வைத்தும், காத்தும், இயக்கியும் வருகின்ற இறைவனுக்குத்(Almighty) தேவைதானா என்பது விளங்கிவிடும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக