Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 12 ஏப்ரல், 2014

உலகை வாழ்த்துவோம்



 சாதாரணமாக இருக்கக் கூடியவர்களை வாழ்த்தும் போது நன்றி உணர்வு தான்! நமக்கு நன்மை செய்தவர்களை வாழ்த்தும் போதும் நன்றி உணர்வு தான். ஆனால் தீமை செய்யும் ஒருவனை வாழ்த்தும்போதோ அவன் நல்லவனாக மாறுகின்றான். கெடுதல் செய்பவன் ஒருவன் இந்த உலகத்தில் வளர வளர அவனிடமிருந்து வரக்கூடிய அலைகளினால் அவன் குடும்பம் அவனைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு பேரும் பாதிக்கப் படுகிறார்கள்....

அவனை நல்லவனாக மாற்றிவிட்டால், அவனைச் சூழ்ந்த அத்தனை பேருக்கும் அது பலன் தானே கொடுக்கும்? உங்கள் வாழ்த்தின் பலன் எந்த அளவு விரிந்து கொண்டே போகிறது பாருங்கள்! அப்படி இந்த உலக சமாதானம் வரவேண்டும் என்று சொன்னால், வாழ்த்தின் மூலமாகவே இந்த உலகம் முழுவதும் சேர்ந்து பலனை உணர்ந்து ஒருவருக் கொருவர் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு தலைவர்களை வாழ்த்துவது அல்லது இன்னும் மற்ற எதிரிகளை வாழ்த்துவது என்று ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே உலக சமாதானம் வந்து விடும். அந்த அளவு ஒற்றுமை ஏற்பட்டு விடும். இதை மனம் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
உலக நல வாழ்த்து :

"உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்".

.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக