Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

முழுமைப்பெறு

மனிதன் இறைநிலையை உணர்ந்து கொள்கிற போது தான் அறிவு முழுமை பெறுகிறது. என்றாலும் அந்த இறைநிலையே அறிவாக விளங்குகிறது என்பதை உணரும் போது தான் அறிவு முழுமையான முழுமைபெறு அடைகிறது.


இறைநிலையில் இருந்து தன்மாற்றம் பெற்று , இறைநிலை நொறுங்கி இறைதுகளாகி கூட்டு சேர்ந்து விண்ணாகி காற்று ,நெருப்பு , நீர் , நிலம் என்ற பெளதீகப் பிரிவுகளாகி , பின்னர் உயிரினங்களாகி தாவரம், புழு,எறும்பு, பாம்பு, சிங்கம் என்ற விலங்கினம் வரை ஐந்தறிவு உயிரினங்களாக வந்து, பின்னர் முதல் மனிதனாக வந்தான்.
...
முதல் மனிதனிலிருந்து கருத்தொடராக அனைத்து மனிதர்களும் வந்துள்ளனர் .எனவே இறைநிலையே தன்மாற்றமாகி எல்லா உயிர்களாகவும் வந்து எல்லா மனிதர்களாகவும் உள்ளது என்பதை உணரும் போது ஒருவருக்கொருவர் துன்பம் கொடுக்காமல் இருக்க முடியும். அப்படி துன்பம் கொடுத்தால் அது இறைநிலைக்கு துன்பம் கொடுத்ததாகும்.

எல்லா பொருட்களிலும் , உயிரினங்களிலும் இறைநிலையே உயிராகவும் , அறிவாகவும் இருக்கிறது என்பதை உணரும் போது தான் அறிந்தது சிவம் , மலர்ந்தது அன்பு அந்நிலையில் தான் கருணை பிறக்கும்.


--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக