Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 23 ஏப்ரல், 2014

மனிதனுடைய வேறுபாடு

இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எங்கேயாகிலும் இரண்டு பேர் ஒரே மாதிரியாக இருக்கின்றார்களா என்று பார்த்தோமேயானால் இல்லை, இருக்க முடியாது என்றுதான் முடிவுக்கு வருவோம். என்னென்ன வகையிலே அந்த வேறுபாடுகள் மனிதர்களுக்குள்ளாக இருக்கின்றன என்று பார்த்தோமேயானால், அவற்றை ஏழு சம்பத்துகள் (Seven Values) என்று சொல்லலாம். அவை 1] உருவமைப்பும் 2] குணம், 3] அறிவின் உயர்வு, 4] கீர்த்தி, 5] உடல் வலிவு, 6] செல்வம், 7] சுகம் இந்த ஏழு சம்பத்துக்களில் தான் ஒருவருக்கொருவர் வேறுபட்டு இருப்பதை நாம் காணலாம். அப்படி ஏதேனும் இருப்பதாகத் தென்பட்டாலும் அது இந்த ஏழுக்குள் அடங்குவதாகவே இருக்கும். இந்த வேறுபாடுகள் எவ்வாறு உண்டாயின என்பதை தெரிந்து கொண்டோமானால் அந்தச் சிந்தனையிலே ஒரு அமைதி கிடைக்கும்.

ஒரு மனிதனுடைய தன்மை 16 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றது. அந்த 16 காரணங்களில் எந்தெந்த அளவிலே கூடுதல் குறைதல் இருக்கின்றதோ, அதற்கு ஏற்றவாறு மேற்சொன்ன 'ஏழு விதமான' சம்பத்துக்களும் ஏற்படுகின்றன. 1] கருவமைப்பு, 2] உணவு வகை, 3] காலம், 4] தேசம், 5] கல்வி, 6] தொழில், 7] அரசாங்கம், 8] கலை, 9] முயற்சி, 10] பருவம், 11] நட்பு, 12] சந்தர்ப்பம், 13] பல ஆராய்ச்சி, 14] பழக்கம், 15] வழக்கம், 16] ஒழுக்கம். இந்தப் பதினாறு காரணங்களால் ஒவ்வொரு மனிதனும் பாதிக்கப்பட்டுள்ளான். ஒவ்வொருவருக்கும் இதில் பாதிப்புகள் சில காரணங்களினால் அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ இருக்கும். மனிதர்களுக்குள் இந்த பதினாறு அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அதனால் மனிதர்கள் மேற்சொன்ன ஏழு சம்பத்துகளில் வேறுபடுகிறார்கள். எந்த வேறுபாட்டைப் போக்க வேண்டும், எதைப் போக்க இயலாது, எப்படி நாம் மேன்மை அடையலாம் என்பதைத் தெரிந்து கொண்டு, நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக