Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 16 ஏப்ரல், 2014

பகைவனுக்கருள்வாய்


நமக்கு தீங்கு செய்பவர்களிடம் சினம் கொள்ளாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால் உண்மையிலே அவர்மீது இரக்கம் கொண்டு அவரை நாம் வாழ்த்த வேண்டும். அவருக்கு எந்த முறையிலே நலம் செய்ய வேண்டுமோ அந்த வகையிலே நலம் செய்யத் தான் வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனிடத்தும் செயல் பதிவுகள் உள்ளடங்கியுள்ளன. என்றோ ஒரு காரியம் தவறாகச் செய்தாலும் அந்தத் தவறு பாவப் பதிவாகப் பதிந்து காலத்தால் அதற்குரிய துன்பத்தை ஒவ்வொ...ருவரும் அடையத்தான் வேண்டும். இது இயற்கை நியதி. அவ்வாறு காலம் வரும் போது ஒரு சிறு துன்பமோ, பெரும் துன்பமோ விளைந்தே அந்தப் பதிவு வெளியேறி விட வேண்டும். அதற்கு இயற்கை வேரொருவரையும், நம்மையும் இணைத்து நமக்கு அவர் மூலமாக வருத்தத்தை தருவதற்கு ஏற்ற செயல் விளையலாம். எனக்கு அந்த வருத்தமும் வந்தது என்றால் அது அவருடைய தவறன்று. ஏற்கனவே என்னிடம் உள்ள பாவப்பதிவு வெளியாகும் சந்தர்ப்பம், வெளியாக வேண்டிய காலம் வந்தது; அந்தக் காலத்திற்கு அவரை இயற்கை கருவியாகக் கொண்டது.
அது மாத்திரமின்றி, ஒன்றுமேயறியாத அவரை எனக்கு வருத்தம் ஏற்படச் செய்து நான் வருந்த அவர் பழியை ஏற்றுக் கொள்ளலாமா? இவ்வாறு இயற்கை ஒரு அப்பாவியை அதற்கு உபயோகிக்க முடியுமா என்றால் இயற்கையிலே எந்தத் தவறும் இருக்க முடியாது. ஏற்கனவே, அவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டு வர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும் - அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அதற்குரிய காலத்தில் அந்தத் தீமை செய்தே ஆக வேண்டும். எண்ணத்தை அழிக்கவில்லையென்றால், அவரது எண்ணம் செயலாக வேண்டும். இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலம் நமக்கு ஒரு வருத்தத்தை தந்தது. இதை உணரும் போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக