Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 3 ஜூன், 2014

மறைபொருள் நம் உள்ளே :


ஒரு பெரிய செல்வந்தர் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்வதற்குப் பதிவு செய்து இருந்தார். அவர் நிறையப் பணம் எடுத்துச் செல்வதை அறிந்த மற்றொருவர் (திருட வந்தவர்), அதே நாளில் அதே பெட்டிக்குப் பதிவு செய்து கொண்டார். அந்த நாளில் இருவரும் பயணம் செய்தார்கள். அப்பொழுது பணக்காரர் தன் பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தார். எதிரில் இருந்தவர், பணக்காரர் பணம் எண்ணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது, எல்லாப் பணத்தையும் வெளியில் எடுத்து எண்ணட்...டும் என்று பாத்ரூமுக்குள் போய் இருந்து கொண்டார். அதன்பிறகு வந்தார். சிறிது நேரம் கழித்து பணத்தை எண்ணிய பணக்காரர் பாத்ரூம் போனார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து பணக்காரர் பாத்ரூமிலிருந்து வந்தார். மீண்டும் மறுமுறை பணத்தை எடுத்து எண்ணினார். உடனே, மற்றவர் (திருட வந்தவர்) மீண்டும் உள்ளே போய் விட்டு பிறகு வந்தார். அதன் பின் மீண்டும் பணக்காரர் பாத்ரூம் போனார். உடனே, அந்த சமயம் பார்த்து வெளியில் இருந்தவர் (திருட வந்தவர்) பணக்காரருடைய பணத்தை, அவரது பெட்டி, அவரது தலையணை மற்றும் அவர் உடைமைகள் அனைத்திலும் தேடினார். எங்குமே கிடைக்கவேயில்லை. அப்போது பாத்ரூம் உள்ளே போயிருந்த பணக்காரர் மீண்டும் வெளியே வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். பொழுது விடிகின்ற நேரம், இருவரும் புறப்படும் சமயம், மறுபடியும் பணக்காரர் பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தார்.
அதற்கு மற்றவர் (திருட வந்தவர்), "நீங்கள் பணத்தை எங்கு வைத்து இருந்தீர்கள்?" என்றார். ஏன் கேட்கிறீர்கள்? என்று கேட்டார் பணக்காரர். நீங்கள் பலமுறை பணத்தை எண்ணியதை பார்த்தேன். உண்மையில் நான் ஒரு திருடன். அதை எடுக்கத்தான் வந்தேன். நீங்கள் பாத்ரூம் உள்ளே போய் இருந்த பொழுது பணத்தைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவே இல்லை" என்றார்.
அதற்கு அந்த பணக்காரர், உன்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், நீ திருடன் என்று. அதனால் "என் தலையணைக்கு அடியில் வைத்தால் ஆபத்து என்று, பணத்தை உன் தலையணைக்குக் கீழே தான் வைத்திருந்தேன்" என்றார் பணக்காரர். அதே போல எல்லாமவல்ல "இறைநிலை" இரகசியமான பொருட்களை நமக்குள்ளேயே தான் வைத்திருக்கிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக