Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 23 மார்ச், 2014

'அகத்தவம்' எனும் "குண்டலினி யோகம்".

தெய்வம், இறைநிலை, கடவுள், பரம்பொருள், பிரம்மம் எனும் சொற்கள் யாவும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான (The Source of all the Forces) ஒரே தத்துவத்தைக் குறிப்பான ஆகும். நுண்ணணு முதலாக அவற்றின் கூட்டுத் தோற்றங்கள் அனைத்தையும், ஒரு சேரக் குறிக்கும் வார்த்தை தான் பேரியக்க மண்டலம். இந்தப் பெருமண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும். 'மரம்' என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்று பல பெயர்களால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம். இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் பரிணாமத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும். எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றில...ும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை அறிவால் அறிந்து, வாழ்வில் அமைதி பெறுவதே, அறிவில் தெளிவு பெறுவதே, "முக்தி" எனப்படும்.

பூரணம், பேராற்றல், பேரறிவு எனும் மூன்றையும் இருப்பு நிலையாகக் கொண்ட இறைநிலையின் பேராற்றல் பரிணாமச் சிறப்பால் இறுதியாக முழுமைத்தகுதி பெற்றவன் தான் 'மனிதன்'. மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனம் உள் ஒடுங்கவும், பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்று படுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. எல்லைக்கு உட்படாத 'மனம்' ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை, பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதே 'அகத்தவம்' (Meditation) எனும் "குண்டலினி யோகமாகும்".

அகத்தவப் பயிற்சினால் (Meditation) தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால், ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள், பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல உலகின் உண்மை நிலைமைகளை அலையும் மனதால் உணர முடியாது. எனவே அகத்தவத்தை (Meditation) கற்று, மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னத உளப்பயிற்சியே "குண்டலினியோகமாகும்".

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக