Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

கடந்து உள்ளே செல்


 
ஒரு அன்பர் வந்தார். நான் ஒரு நாத்திகன்(Athiest) கடவுளை நம்புவது இல்லைங்க நானே நேரடியாக விளக்கம் கேட்க வந்தேன் என்றார்.
சரி சொல்கிறேன். நீங்கள் தினம் சாப்பிடுகிறீர்கள் இல்லையா? என கேட்டேன். சாப்பிடாது எப்படி வாழ முடியும் என்றார். சாப்பிட்ட சாப்பாடு என்ன ஆகிறது என்றேன். சீரணம் ஆகிறது என்றார். பொதுப்படையாகச் சொல்லாதீர்கள். நான் சொல்கிறேன். சாப்பாடு உள்ளே போனதும் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் என்ற திரவம் சுரக்கிறது. அது உணவை ஜூஸ் ஆக மாற்றுகிறது. அதிலிருந்து ரசம் பிரிந்து ஒரு பகுதி இரத்தமாக மாறுகிறது; இரத்தம் கெட்டிப்பட்டு ஒரு பகுதி தசையாக மாறுகிறது. தசையிலிருந்து எண்ணெய் வடிகட்டி, ஒரு பகுதி கொழுப்பாக மாறுகிறது. கொழுப்பில் இருந்து கால்சியம் பிரிந்து எலும்பாக மாறுகிறது. எலும்பாக மாறும்பொழுது அதிலிருந்து வரக்கூடிய பொருள் மூளை அதாவது மஜ்ஜை (Marrow) ஆகிறது. அதிலிருந்து வரும் எச...ன்ஸ் (Essence) தான் விந்து நாதமாக (Sexual Vital Fluid) மாறுகிறது. இந்த மாதிரி ஏழு தாதுக்களாக மாறி தினந்தோறும் இந்த உடலில் இருந்து அணுக்கள் கழிந்து கொண்டே இருக்கும். அணுக்களை எல்லாம் சரிப்படுத்தி நம் உடலை இயக்கி வருகிறது. நீங்கள் தினந்தோறும் சாப்பிடுகிற சாப்பாடு என்ன ஆகிறது என்று இப்ப உங்களுக்குத் தெரியுமில்லை; இப்ப இந்த வேலைகளையெல்லாம் யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? இல்லை வேறு யாராவது செய்கிறார்களா? என்றேன்.
அதற்கு அவர், அது "இயற்கை" என்றார். அந்த இயற்கை என்ற வார்த்தைதான் மாற்றமே தவிர அந்த இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். வேறு ஒன்றும் இல்லை என்றேன். நீங்கள் "கடவுள்" என்பதை பெயர்ச் சொல்லாக கூறுகிறீர்கள். அந்த வார்த்தையை முதலில் கொண்டு வந்தவன் அறிவாளி. "கட+ உள்" என்பதை இணைத்துக் "கடவுள்" என்று கொடுத்தார்கள். உள்மனமாக, அதாவது மனதை ஒடுக்கி உள்ளே போனால் நிலையில் எதுவோ அதுதான் முழுமுதற்பொருள்; அது தான் அறிவு, அதுதான் இறைவன் என்று சொல்வதற்காக, "கடவுள் (கட + உள்)" என்று சொன்னார்கள், என்றேன். 'அது தான் கடவுள் என்றால் நான் ஒத்துக்கொள்கிறேன்' என்றார். எனவே குண்டலினியோகத்தின் மூலம் மனதினுடைய இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். மனித மனம் என்னவென்று உள் ஒடுங்கி அகத்தவத்தின் (Meditation) மூலம் தெரிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களும் தெரிந்து போகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக