Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 13 ஏப்ரல், 2013

உயிர் வழி அறிவு :


 (Soul Consciousness or energy Consciousness)

மனம் தனது மூலம் நோக்கி நிற்கும் அக நோக்குப் பயிற்சியால் தனக்குப் பிறப்பிடமான உயிர் நிலையை [உயிராற்றலை] அதன் இயக்கத்தை உணர்கின்றது. உயிரை நெருப்பாகக் கொண்டால், மனதை வெளிச்சமாகக் கொள்ளலாம்.

இது போல உயிரே படர்க்கையில் மனமாக இயங்குகிறது, உயிர் "நான்" என்னும் அகங்காரமாகவும் அதன் படர்க்கைச் சிறப்பே மனம் என்றும் உணர்ந்து, அவ்வாறு விளங்கிய ஒன்றுபட்ட உணர்வு நிலையில் அறிவை விரித்...து உயிராக உடலில் இருக்கும், இயங்கும் உணர்வு ஆற்றல் விண் எனும் நிலையில் பேரியக்க களமாகவும், காணும் பல பொருட்களில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக எழும் இயக்க ஆற்றலாகவும், பிராணிகளிடத்தில் இன்ப துன்பம் உணர் உயிராகவும் இயங்கும் உண்மை, அறிவுக்கு உண்டாம். இயக்க ஆற்றலான உயிர் அணுக்கள் [பரமாணுக்கள்] ஒன்றாகக் கூடி இணைந்து திரட்சி பெற்று உருவங்களாகி மீண்டும் ஒவ்வொரு உருவத்திலும் ஊடுருவி நிறைந்து அதனதன் தன்மைக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், எனும் அறுவகையில் ஒன்றாகவோ, பலவாகவோ சிறப்புற்று இயங்கும் மறைபொருள் விளங்கும். இந்த உயிர்நிலை விளக்கத்தில் விழிப்போடு உலகைத்த் துய்க்கும் இன்ப துன்ப இயல்பறிந்து உயிர்கட்குக் கடமை செய்து இனிமையாற்றி வாழும் அறிவே உயிர்வழி அறிவு. இவ்வறிவு நிலையில் தான், ஒழுக்கம், கடமை, ஈகை மூன்றும் இணைந்த அறநெறி இயல்பாக உண்டாகிறது.
உயிர் = Spirit; அறிவு = Knowledge
உயிர் வழி அறிவு = Spiritual Knowledge  


.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

அகத்தவத்தின் பெருமை:

"உயிருணர்வே ஆன்மாக்கள்
உய்யவழி காட்டும்.
உள்நாடி அமைதிபெற
உண்மை தெளிவாகும்".
.

"உயிர் தனது மெய்யுணர 'சமத்துவம்' ஆம்.
உயிர் விரைவின் பயன்துய்க்க 'ரஜோகுணம்' ஆம்.
உயிர் பரவிக் கெடும் தீமை 'தமோகுணம்' ஆம்.
உயிர் தனது முக்குணத்தை உணர ஞானம்".
.

"உயிர் உடலில் தொடர்ந்தியங்க உணர்ச்சி தோன்றும்.
உணர்ச்சியோ தொடர் நிகழ்ச்சி பலவாய் மாறி,
உயிர் சிறக்க அம்மலர்ச்சி மனமாய் ஆற்றும்.
உணர்ச்சியே அறிவிற்கு முதல் நிகழ்ச்சி.
உயிர் என்றால் உணர்ச்சிநிலைப் பிண்டம் என்றாம்.
உணர்ச்சியில்லா நிலையில் உயிர் விண்தான் தேர்வீர்.
உயிர் உணர்ச்சி உள்ளொடுங்கத் தவம். பரத்தில்
உணர்வு லயமாகி நின்றால் வீடு பேறு".


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
 


 



மெளனம்


நாம் கருத்தொடராகப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களைக் கணக்கெடுப்பது போல எல்லோருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுங்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும், கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டத்தால் ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மெளன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்மத் தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.



+ வேதாத்திரி மகரிஷி

Vethathiri Maharishi Thoughts


1. When you do meditation, you get God consciousness and undisturbed peace in you. That will be added as a plus point to your material benefits also.

2. Man has to understand the value of himself, the purpose of birth and has to develop his consciousness to fulfill the purpose.

3. Consciousness is the radical universal principle.

4. Gnana Yoga (SKY) is the process of throwing light on the souls to guide them in reaching their goal quickly without unnecessary delay. This is possible by attaining the full understanding of Truth, Universe, Life and Knowledge.

5. The benefits of Nature are all over the Universe but the secrets of Nature are only within your own Mind. Go in and in to get more and more.

6. Desires of experiencing God through senses will never be successful. By developing your Consciousness you have to become God yourself.

7. The art of tolerating the needs, regulating the habits and making better use of the environments for the harmony of self and others is Morality.

8. When man realize himself, he realizes the value of everybody. So to respect the needs and ambitions of others and to restrict and moralize one's own activities become possible.

9. There is no problem in the Nature, only the problem is in the Mind. The principal goals of introspection are examining yourself and finding out, What You are?

10. The one and only valid test for a person's wisdom is the peace and harmony prevailing in his family.

11. The three main ways in which man wastes his energy are Greed, Anger and Worry.

12. Man's needs and achievements must be compatible to and in accordance with the purpose of his birth.

13. To speak or act in a manner which will wound the feelings of one's life-partner is really a curse that will leave an indelible on the human mind.

14. Revelation of the realities of Nature or enlightenment of Consciousness is not by any effort. Effort means conditioning.

15. Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards wisdom.

16. We are not separate in the World; We are linked by the universal force which is called Universal Consciousness.

17. Yoga is leading one’s life in tune with Nature, respecting the Law of Nature, without disturbing the rhythm of Nature.

18. No success overcomes on its own. Behind every success there are untold stories of trials, failures, losses, humiliations and miseries.

19. Understand this: “Whatever action you do, the result is the manifestation of God.

20. Being harsh to children is only a symptom of your spiritual immaturity.

21. One’s life partner, one’s child, one’s friend and one’s master – all are the outcome of one’s Karmas, both inherited and added after birth.

22. A proper spiritual approach for changing the behaviour of man and establishing World Peace is Karma Yoga.

23. You cannot see the Absolute with your eyes or touch it with your hands. But you can see its functioning.

24. Using violence against violence carefully in inevitable circumstance is non-violence.

25. No one can take away from you what Providence has allotted for you.

26. The husband-wife relationship is divine; no other can equal it in its depth and intensity, because only in this relationship the union of souls occur.

27. Vegetarianism is the only way of life based on the observance of non-violence. Non-violence is a method of living without hurting, torturing or killing any living being for one's own enjoyment

28. Do not comment on the activities of others, even if it be your life-partner or children. Guiding them is one thing, but criticizing them would have a negative effect.

29. Giving up and giving up whatever is not wanted whether it is men, material, action or enjoyment is the method of purification and enlightenment.

புதன், 27 மார்ச், 2013

வாழ்க்கைத் தத்துவம்



பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்டதே வாழ்க்கை. ஆறறிவு படைத்த நாம் பிறந்த உடனே நடப்பதில்லை. ஆனால் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கின்றன. நாம் வாழும் வாழ்க்கை இன்பமாகவே உள்ளது. ஆனால் நம்முடைய புலன்கள் வழி செல்வதாலும் பழக்கத்தாலும், சூழ்நிலைகளாலும் பெரும்பாலும் துன்பத்தை உண்டாக்கி கொள்கிறோம். கல்லூரிக்குச் செல்ல 12 வகுப்புகள் படிக்க வேண்டும் என்பது போல் வாழ்வில் முழுமைப்பேறும் குணநலப் பேறும் அடைய 12 வாழ்க்கைத் தத்துவப்படிகளை அளித்துள்ளார்.

தேவைகள் மூன்று : நம் உடலின் தேவைகளை மூன்றாகப் பிரித்துள்ளார். பசி, தாகம்,. முதல்படி. தட்பவெப்ப நிலையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளல் இரண்டாம்படி, உடலின் கழிவுகள் நீக்கம் மூன்றாம் படி.

காப்பு மூன்று : பிறஉயிர்களின் தாக்குதலில் இருந்து காத்தல், மழை, புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்திலிருந்து காத்தல், தற்செயல் விபத்து நடக்காமல் (accident) காத்தல்.

அறநெறி மூன்று : தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரா வகையில் எண்ணம், சொல், செயல்களை அமைப்பது ஒழுக்கம். தான், குடும்பம், உறவினர், ஊர், உலகம் என்ற ஐந்து வகையான கடமை. எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தேவைப்படுவோர்க்கு, அந்த நேரத்தில் உதவுதல் ஈகை.

அறிவின் நிலை : அடிப்படைத் தேவையான நம்பிக்கை. ஒவ்வொன்றுக்கும் விளக்கம் பெறுமளவு அறிவு நிலையில் வாழ்தல். தன்னையறிந்த பின் முழுமை நிலையடைதல்.

நாம் ஒரு சிறு துரும்பாய் வாழ்க்கையெனும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலையில் இந்த 12 படிகளும் நமக்கு படகாய் இருந்து நம்மை கரை சேர்க்க உதவும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார், வேதாத்திரி மகரிஷி.

நினைப்பது நடக்கும்:


வாழ்க வையகம்                                                         வாழ்க வளமுடன்



விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருந்தாலும், அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் ஒலிபரப்புகின்றன. நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டுவிலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நினைப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத்திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்; எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.

அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்தத் தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. "நம்மைத் திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, "என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்தக்காலத்தில் எந்தச் சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்துவிடும்.
முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge). அதனால், அந்த இடத்திலிருந்து நாம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் வேகமும் வரும்போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால்
அது தன்னை அறிந்து முடிக்கும் வரையில்
அமைதி பெறாது".
.
"அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை,
செயல் விளைவுத் தத்துவம் (Cause and Effect System) புரிவதில்லை; தவறு செய்தால் இன்றோ நாளையோ - அறிவிற்கோ உடலுக்கோ -துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகையஅறியாமையால் தவறு செய்து பின் கவலைப்படுகிறோம்".
.
"இயற்கையை எவ்வளவுக்கெவ்வளவு நாம் அறிந்து
கொள்கிறோமோ, அவ்வளவுக்குத்தான் நம் மனம் விரிவும், திண்மையும் பெறும். மனதின் திண்மைக்கு ஏற்பவே
செயல்திறம் அமையும். செயல் திறமைக்கு ஏற்ப
வாழ்க்கையானது வெற்றியும், மகிழ்ச்சியும் நிரம்பியதாக விளங்கும்; மனிதனின் துன்பமெல்லாம், அவனுடைய குறையெல்லாம் - இயற்கையை 'அறியாமலும்' அல்லது அறிந்தும் அதனை 'மதியாமலும்' அவன் நடந்து கொள்வதாலேயே தோன்றுகின்றன."
.
அகத்தவப் பேறு (Simplified Kundalini Yoga) :
"அகத்தவத்தால் "ஆ" லயமாம் சிறந்த வழிபாடு
ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு
அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி
அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;
அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி
அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது;
அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்
அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்."


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

புதன், 20 மார்ச், 2013

தவத்தின் பயன்கள் பத்து:


 வாழ்க வையகம்                                                வாழ்க வளமுடன்

 1) மனித வாழ்வின் பெருநிதியாகிய கருமையத்தை தூய்மையாகவும், வலுவுடையதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்கவும் உதவுகிறது.

2) மனிதனின் இறையுணர்வும், உயிர் விளக்கவும், அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாக்கும்.

3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது.

4) எண்ணம், சொல், செயல்களில் தவறு செய்யா விழிப்பு நிலை மேலோங்குகிறது.

5) அறிவின் திறன்கூடி அதன் கிரகிக்கும் சக்தி கூடுகிறது.

6) ஒத்துப் போதல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகள் மலர்கின்றன.

7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

8) ஆக்கப் பூர்வமான செயல்களை ஆற்றும் திறன் ஓங்குகிறது.

9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி மூலம் உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.

10) நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது. 


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 



ஞாயிறு, 17 மார்ச், 2013

Thoughts

You are not different from your thoughts. Thought is an illusionary object functioning with the four qualities of time, place, mass, functionality; transending beyond into the state of silence and often changing its state. If you understand the state of your thoughts, it means that you have understood yourself. Until then, keep analyzing the thoughts whenever you get the opportunity. Do n...ot try to cease the thoughts. It will waver more. If you try to understand it, then it will calm down gradually.

The functions of the thoughts forms our lives. It will keep functioning until there is blood circulation in the body, except when we are asleep. We should identify and practice ways to reform and utilise the thoughts. Do not attempt in vain to destroy the vast treasure. It ceases to exist automatically at the point of death. If thoughts cease then where does the 'You' separately exist?

Through our thought force, we can plan for monumental things in a moment, which will require the efforts of countless people over many years to achieve. When you possess such a potential force, don’t always keep planning for the future. You may forget your day-to-day duties. To synchronise our thoughts with our actions is a superior quality. To achieve and retain this, we need to practice it for a considerable amount of time. If you act considering only your bodily comforts and your family, it will result in weariness and miseries in your life.

Try to recollect often, the nature's laws and events, potential of the thoughts, society, world and the innumerable galaxies floating and roaming in the space. Match and see your knowledge and your experiences of pain and pleasure with these. As a result of this, the perennial fountain of bliss, which provides harmony both for the body and the mind together, will start to flow.

+ Vethathiri Maharishi

ஞாயிறு, 10 மார்ச், 2013

துரிய தவம்


நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.

நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.
எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.

இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.
த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .

மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்

உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்
ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்
அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்
அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்
இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.
எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு
நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு
நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்

ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

1)ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும்.
2) நடுமனத்தை வெற்றி கொள்கிறது.
3)நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும்.
4)நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும்.
5) மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும்.
6) தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .

அறிவின் எல்லை:


 
வாழ்க வையகம்                                                     வாழ்க வளமுடன்


நாம் என்னென்ன நினைக்கிறோமோ அந்த அளவு அறிவிலே விரிந்து இருக்கின்றோம். விரிந்து அறிந்த நிலை ஒன்று, அந்த நிலையை ஒட்டி குறிப்பிட்ட அளவுக்கு இயக்கம் (Localising action) ; ஒரு பொருள் மீது தனியாக அதைப் பயன்படுத்தும் போது அப்போது விரிந்த நிலையிலே அறிவாலே எவ்வளவு விளக்கம் பெற்று இருக்கின்றோமோ அந்த விளக்கம் அத்தனையும் சிறு சிறு விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும்போதோ, அதன் மீது மனம் செலுத்தும்போதோ, விரும்பும் போதோ அத்தகைய விரிந்த அறிவினுடைய தன்மை அத்தனையும், அந்தச் சிறு இயக்கத்திலும் பயன்படும்.

இப்பொழுது ஒரு மாநிலத்தை (Province) ஆளக்கூடிய ஒரு பெரிய அதிகாரி இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குச் சாதாரண ஒரு ஊருக்கான திட்டம் ஒன்றை அவர் உருவாக்கும் போதோ, அதைக் கண்காணிக்கும் போதோ, மாநிலம் முழுமையும் நிர்வகிக்கக் கூடிய நிலையிலே அந்த ஒரு சிறு விஷயம் கூட சிந்திக்க முடியும். அந்த இடத்திலே இருந்து சிந்திக்கக் கூடிய ஒரு எழுத்தர் (Clerk) அல்லது மற்றவர்களுக்கு அந்த இடத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடிய மனம், அறிவு இருக்கும். அதுபோல நம்முடைய செயலுக்கும், தன்மைக்கும், இந்தப் பண்பாட்டுக்கும் தக்கவாறு, இந்த அறிவு எந்த எல்லையில் நிற்கிறது என்பதாக இருக்கிறது.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
பெரியார்:
"அறிவு, சுகம், பொருள், அரசியல், விஞ்ஞானம்
ஐந்து தத்துவங்கள் அறிந்தவன் பெரியோன்".
.
"கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்
புதிர்போன்ற அறிவுநிலை புலன் இயங்குங்கால் தோன்றா".
.
மனம் செம்மையுற அகநோக்குப் பயிற்சி (Simplified Kundalini Yoga) :
"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
 

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

சனி, 2 மார்ச், 2013

கேள்வி : சுவாமிஜி, பரிணாம வளர்ச்சியில் முதல் பாவப்பதிவு எவ்வாறு தோன்றியிருக்கும்?



மகரிஷியின் பதில்: முதல் பாவம் என்றால் முதல் மனிதனிடமிருந்து வந்தது தான். முதல் மனிதன் விலங்கினத்தின் வித்துவிலிருந்து வந்தவன். விலங்கினங்கள் உணவிற்காகப் பிற விலங்குகளைக் கொன்று வாழ்கின்றன. பிற உயிர்களினுடைய வாழும் உரிமையைப் பறித்தே வாழ்கின்றன. இவ்வாறே பிறர்வளம் பறித்து வாழ்தல் என்பது மனிதனிடமும் வந்திருக்கின்றது. அன்றிலிருந்து இன்று வரை மனிதகுலம் இக்குணத்தை மாற்றிக் கொள்ள சிந்திக்கவில்லை. 'நான் ஏன் பிறருடைய வாழ்க்கையைப் பறித்து வாழ்கிறேன்' என்ற எண்ணம் வந்தவர்களெல்லாம் ஞானியராகி விட்டனர். அவ்வாறு சிந்திக்காதவர்கள் எல்லோரும், ஒருவர் மற்றவரை வாழவிடாது செய்து கொண்டிருக்கிறார்கள். இது தான் இன்றைய உலகம். பாவம் என்பது விலங்கினத்திலிருந்தே வந்தது. மனித உருவம் விலங்கினத்தின் வித்துத் தொடரிலிருந்தே தோன்றியது. ஆதலால் அங்கேயே பாவத்துக்கான அடிப்படை ஆரம்பித்து விட்டது.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 1 மார்ச், 2013

மனக்குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு

கேள்வி: இன்றைய கால மாணவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராட்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் இதிலிருந்து தெளிவு பெறுவது அதாவது மனக் குழப்பத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகரிஷி: மனதுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். உடலுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதாவது இரண்டு விதத்தில் உடலுக்குப் பயிற்சி வேண்டும். இது வரையில் செய்த செயல்களினால், இந்த அணு அடுக்குகள் எல்லாம் சீர் குலைந்துபோய் நோய் பதிவாகியிருக்கும். அவையெல்லாம் போக்குவதற்கும், இனி நோய் வராமல் இருப்பதற்கும் தக்க பயிற்சி உடற்பயிற்சி அவசியம்.அதற்கும் மேலாக எல்லோருக்கும் கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அதைத் தூய்மை செய்வதற்கு காயகல்பப் பயிற்சி என்று இதிலேயே ஒரு பயிற்சி இருக்கிறது. வித்து சுத்தம் செய்யும், உயிர்ச்சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் சீவ காந்த சக்தியையும் அதிரிக்கும். இந்த மூன்றையும் திருத்தி கருமையத்தையே தூய்மை செய்யக்கூடியது வளப்படுத்தக் கூடியது காயகல்பப் பயிற்சி. அதுவும் மனவளக்கலையில் சேர்ந்துதான். அதைச் செய்தால்தான் மாணவர்களினுடைய மனநிலை சரியாக, தெளிவாக இருக்கும். மேலும் மேலும், முயற்சி விடா முயற்சி நன்மை தரும்.

புதன், 27 பிப்ரவரி, 2013

முழுமைப் பேறு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்



நமது அகத்தவப் பயிற்சி, தியானம் [Meditation], தற்சோதனை [Introspection], உச்சமேம்பாடடைதல் [Sublimation], முழுமைப் பேறு [Perfection] ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகும். தியானத்தில் ஆரம்ப கட்டத்தில் மனம் உயிரில் லயமாக்கப்பட்டு மயக்க நிலை நீங்கி விழிப்பு நிலை ஏற்படுத்துகிறது. தற்சோதனை மூலம் குற்றங் குறைகளை உணர்ந்து விளக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள போராட்டம் நீங்கப்பெற்று மனம் செம்மைப்படுத்தப்படுகிறது. தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, தான் ஆற்றவேண்டிய சமுதாயக் கடமையை நன்கு உணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுத்துகிறது.

பிறகு தன் கடமைகளை ஆற்றிக்கொண்டே தானே பரம் பொருளாக இருக்கும் உண்மையை துரியாதீத தவத்தின் மூலம் உணர்ந்து உச்ச மேம்பாட்டையடைய வழி செய்யப்படுகிறது. கடைசியாக எப்பொழுதும் பரம்பொருள் நிலையிலேயே இருந்து செயல்படும் முழுமைப் பேரும் கிடைக்கப் பெறுகிறது. யாருக்கும் தீமை நினைக்கவும் முடியாத அளவு ஆன்மீக விழிப்பு, எல்லா உயிரும் பரம்பொருளின் பிரதிபலிப்பே என்ற ஆன்ம விழிப்பு [Esoteric awareness] ஏற்பட்டு விடுகிறது. ஈதல் இசை பட வாழ்தல் என்பதன் உட்கருத்தும் விளங்குகிறது. மனதின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் போது அதுவேதான் உயிர் எனத் தெரியும். உயிர் நிலையை உணர வேண்டுமாயின் அதற்கு மனம் அடங்கி மிக நுண்ணிய அதிர்வலைக்கு நாம் வரவேண்டும். சாதாரணமாக நம் மனம் எப்போதும் பொருள் கவர்ச்சியிலேயே இருப்பதால் அவற்றிற்கேற்ப அதன் ஓட்டமும் அதிர்வலைகளும் மூலாதாரத்தையே நோக்கி செயல்படும். கீழ்நோக்கியே செயல்படும். ஆகவே நுண்ணிய இயக்கத்திற்கு வரவேண்டுமானால் மனம் அடங்க வேண்டும். இயக்க வேகம் குறைய வேண்டும். இதைத்தான் நம் குண்டலினி யோகத்தால் நாம் சாதிக்கிறோம்.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 


 

பூஜ்யமும் பூஜ்யரும் :



பூஜ்யம். முழு எண் ஒன்று இருக்குமானால் அது பூஜ்யம் ஒன்று தான். ஏன் என்றால் மற்ற எண்ணெல்லாம் ஒரு பக்கம் ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடியும். உருவம் கோணல் மாணலாக இரு...க்கும். '1' என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், அதற்கு மேல் முனை, கீழ்முனை என்று இரண்டு இருக்கின்றன. '2' என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், முன் முனை இருக்கிறது. பின் முனை இருக்கிறது. மற்ற எண்கள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைகின்றன. 3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள். ' 0 ' அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.

பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம். ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது. பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].

அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன். யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள். இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.
 

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 



குடும்பம் அமைதி பெற :



இணக்கத்தை வற்புறுத்தும்போதும், பிணக்கத்தை தீர்க்கும் போதும் இன்சொல்லையே உள்ளமும் உதடும் உபயோகப்படுத்த வேண்டும். இன்சொல்லினால் கெடுதல் ஒழிய நன்மைகள் பல பெறலாம்.

... குடும்ப அமைதியைப் பெற, சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கே தான் வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு விடலாம்.

பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ் சொற்களையும் - அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதுக்கிவிட வேண்டும். அப்போது தான் அமைதி பிழைக்கும்.

தற்போது அம்மா - மகளுக்கிடையே கூடப் பிணக்குகள் தோன்றுவதையும், வளர்வதையும் பார்க்கிறோம். அவர்களுக்கிடையே கூட, விட்டுக் கொடுத்தல் (Adjustment) இல்லையானால் வேறு யாரிடம் அதைத் தேடுவது? அம்மாவுக்குப் பெண்ணாக இருக்கும் போதே இப்படி என்றால் பின்னால் வாழ்க்கை எப்படி அமையும்?. அப்புறம் யார்மேல் குற்றம் சொல்வது?.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக்கொள்ளவில்லை யென்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு - அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை - தள்ளி வைக்க வேண்டியது தான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது - ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.
 

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


 "வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும்.
உடலும் உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே".
.

"தவறு செய்யப்பட்ட கையேடு புத்தி சொல்லக்கூடாது.
குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது".
.

"தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து
தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி பின்னரும்
துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு -
உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினம் ஆகும்"
.

தற்சோதனையும் (Introspection),
தவமும் (Simplified Kundalaini Yoga) :
----------------------------------------------------
.
அருள் வெளிச்சம்:

"விழிப்பு நிலை யென்ற அருள் வெளிச்சம் கொண்டு,
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலை மனத்தின்
அழுக்கற, தற்சோதனையில் முனைந்திடுங்கள்:
அன்பூற்றால், கடமையுணர் வாகும் வாழ்வு;
பழுத்து விடும் அறிவு, அந்தப் பக்குவத்தால்,
பரத்தோடு உயிர் ஒன்றும் துரியாதீத
முழுத்தவமோ பிறப்பு இறப்புச் சக்கரத்தை
முறித்து விடும். மெய்விளங்கி முழுமையாவீர்."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.



 

மனிதனே தெய்வம்

ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டு விட்டால், மனிதனே தெய்வம். ஆன்ம உணர்வைப் பெற்று விடுகிறான்; ஆன்மாவுக்கும் மூலப் பேராற்றலான தெய்வ உணர்வையும் பெற்று விடுகிறான்.

பேரியக்க மண்டலத்தில் அவன் காணும்...
எல்லாத் தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், விளைவுகளும் தெய்வீக ஒழுங்கு அமைப்பின் திருவிளையாடலாகவே காண்கிறான். அவன் உணர்ச்சி வயப்படுவது இல்லை. பொறுமைக் கடலாகிறான். அவனிடம் பழிச்செயல்கள் எழுவது இல்லை. அறக்கடலாகத் திகழ்கிறான். அவன் அறிவிலே மயக்கமில்லை. மெய் விளக்கத்தால் மேன்மை பெற்ற பேரொளியாகத் திகழ்கிறான். அவன்வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக அமைகிறது. அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி எண்ணிறந்த மக்கள் தங்களைத் தூய்மை செய்து கொள்கின்றனர் மேன்மை பெற்று வாழ்கின்றனர்.

இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி? அது அவ்வளவு எளிதானதா? அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா? இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு. மனிதன் தான் தனது தன்முனைப்புத் திரையை விளக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
"தான் உயரவும் பிறரை உயர்த்தவும்
ஏற்ற பயிற்சியும் தொண்டும்
மனவளக்கலையில் அடங்கியுள்ளன".
.
"அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் மூன்று
வகையிலும் அறிவு வறுமை நிலவுகிறது".
.
"ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை;
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாகக வல்லது".
.
தன்முனைப்பை நீக்க :
--------------------------------
"தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து
தவம்ஆற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல்
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு,
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
எனக்கு?" என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்!"
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




தற்சோதனையின் அவசியம்



தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும...்பாலும் துன்பமே விளைகின்றது, துன்பமோ பொருந்தா உணர்வு.
அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும்வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியே தான் செயல்களை ஆற்ற முடியும். எனவே, துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான்.

தன்னைப் பற்றி, தன் இருப்பு, இயக்க நிலைகளைப் பற்றி, தன்னிடமிருந்து எழும் எண்ணங்களைப் பற்றி, செயல்களைப் பற்றி சிந்தனை செய்து, நலம் தீது உணர்ந்து, தீமைகளைந்து , நல்லன பெருக்கிப் பயன் காணும் ஒரு உளப்பயிற்சியே தற்சோதனையாகும். இது மனிதன் அறிவை உயர்த்தி வாழ்வை வளப்படுத்தும் ஓர் நற்பயிற்சி.

சமுதாயத்திலே நீ ஒரு பொறுப்பை ஏற்றுத் தொழில் புரிவதால் உன்னை வளர்த்து வாழவைத்த சமுதாயத்திற்கு நீ கடனைத் தீர்க்கிறாய். குழந்தைகளை ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறப்படையச் செய்வதும். சமுதாயத்திற்கு ஆற்றும் ஒரு சிறந்த கடமை தான். ஒரு நல்ல குடிமகனை உலகுக்கு அளித்து உதவுகிறாய் என்பது தான் பொருள். உன் வருவாயை விட்டுக் கடமைகளை மறந்து வெளியேறினால் நீ எங்கே போக முடியும்? அடுத்த வேலைக்குப் பசி வந்தால் நீ என்ன செய்யப் போகிறாய்? பிச்சை தானே எடுக்க வேண்டும். அது பிறர்க்கு சுமை அன்றோ?.
 

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
" "மனித மனமானது" இறைநிலையின் முடிவான பொருள்.
(other end of the mind is "Almighty" the god).

.
"மனதை அதன் இருப்பு நிலையான இறைநிலையை
நோக்கக் கூடிய ஒர்மைநிலையே "அகத்தவம்"(Meditation) ஆகும்".

.
"நாள்தோறும் பழகிவரும் தியானத்தினால் தவ ஆற்றல் மிக மிக..
எல்லாம் வல்ல இறைநிலையே எவ்வாறு மனிதனிடத்தில்
உயிராகவும், மனமாகவும், அறிவாகவும், இயங்கிக்
கொண்டிருக்கிறது என்கிற உள்ளுணர்வு உண்டாகும்".

.
எண்ணம் சீர்பட தற்சோதனை :

"அறிவு தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்
அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி
அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்
அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள
அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;
ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற
அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை
அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.




கால வேகம்

 

விருப்பு, வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல், காட்டிலும், குகைகளிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.

நெருப்பை...
க் கண்டுபிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர் காலங்களைச் சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.

இரும்பையும், மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக மின்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அணுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.

அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அணுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்குப் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக்கூடிய அபாயம் தோன்றிவிட்டது.

இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பெரு முயற்சி கொள்ள வேண்டும்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
ஆக்கமும் அழிவும் கண்டீர் - அமைதியும் காண்பீர் :
"விஞ்ஞான அறிஞர்களே! நம் குலத்தை
வேரறுக்க, வாழவைக்க, உங்களுக்கு,
எஞ்ஞான்றும், மேன்மேலும் திறமை கூடும்.
இனி நீங்கள் உலகநலப் பொறுப்பை ஏற்று
அஞ்ஞான முடையோர்கள் அறிவில்கூட
அணுநிலையோ டாதிநிலை இரண்டும் காட்டி,
மெய்ஞ்ஞானம் ஊட்டுதற்கு முயலவேண்டும்.
மிகஎளிது உங்களுக்கு இதைச் சாதிக்க."
.
விஞ்ஞானத்தால் விளைந்த பயன்:
"ஆறறிவின் ஆரம்ப நிலையில் நின்று
அனுபவித்தாய் அனுபவத்தின் பயனுணர்ந்தாய்;
பேரறிவைப் பெறவேண்டிப் பெருத்த வேகம்
பெரிதென்ற விஞ்ஞானத் துறையிலிட்டாய்.
யாரறிந்த ஒன்றும் இதில் ஞான, கர்ம
இந்திரியங்க்கட்கு உபகருவி யாச்சு
ஊரறிந்தாய் உலகறிந்தாய். உன்னையார் என்று
ஒன்றுமட்டும் அறியவில்லை விஞ்ஞானத்தால்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

உயர்ந்த சிந்தனை



1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.

2.உழைப்பினால், உடலும் உள்ளமும் உலகமும் பயன் பெறும் உணர்வீர்!
...
3.கடமை உணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம்.
கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.

4.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.

5.ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து, ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கடவுள் எங்கே இருக்கிறார்?


கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான். ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறுவேறாக இல்லை, இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான். அனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக, இச்சையின் காரணமாக, பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது. இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.
.

நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.
.

பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம். ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும். அனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை,
முறைப்படுத்தப்பாட்டால் நிறைமனம்".
.

"மனிதன் தன்முனைப்பு அற்றாலே போதும்; அவன்
இறைநிலையென்னும் பெரிய ஆற்றலோடு
தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்"
.

"தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று -
இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி
குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது".
.

ஓர்மை நிலைப்பயிற்சி :-

"நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே
ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது. நீயறி நினைவை நிறுத்தி".
.

நிறை நிலையில் அமைதி :-

" எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்
இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,
நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,
நட்டம் லாபம் என்று அனைத்தும் தோன்றும்;
வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள
வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்
அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்
அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்."
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கேள்வி: ஐயா, ' மனசாட்சி ' என்று கூறுகிறார்களே அது கருமையம் தானா?



மகரிஷியின் பதில்: ஆம். அதாவது ஒரு பொருளை வியாபாரி தெருவில் விற்றுக் கொண்டு வருகிறார். பொருளின் விலை என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் 10 ரூபாய் விலை சொல்கிறார். ஏனப்பா நீ என்ன விலைக்கு இதை வாங்கினாய் என்று கேட்கிறீர்கள். அதற்கு அவர் 'நான் 8 ரூபாய்க்கு வாங்கினேன்' என்று உங்களிடம் கூறுவார். ஆனால் உண்மையில் அவர் 5 ரூபாய்க்குத் தான் வாங்கியிருப்பார். உண்மையைச் சொன்னால் நீங்கள் 6 அல்லது 7 ரூபாய்க்குத் தான் வாங்க முடியும் என்று கூறுவீர்கள்' என எண்ணி 8 ரூபாய்க்கு வாங்கியதாக வாய் சொல்லும். ஆனால் அங்கே உள்ளே உள்ள கருமையப் பதிவு 5 ரூபாய்க்குத்தான் வாங்கினேன் என்று சொல்லுமல்லவா. அது தான் மனசாட்சி.

ஒரு திருடன் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். நீதிபதி திருடனைப் பார்த்து "ஏனப்பா நீ இன்னின்ன பொருட்களை இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் திருடினாய் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதே நீ என்ன பதில் சொல்கிறாய்?" என்று கேட்கிறார். திருடனுக்குள், தான் அந்த வீட்டில் எப்படிப் போய் எந்த நேரத்தில் என்னென்ன பொருள்களைத் திருடினானோ அத்தனையும் கருமையத்திலிருந்து காட்சியாகிக் கொண்டேயிருக்கும். ஆனால் வாய் "நான் திருடவே இல்லைங்க" என்று கூறும். நமக்குள் உள்ள அறிவே தெய்வமாக இருந்து கூறுவதைத்தான் 'மனசாட்சி' என்கிறோம்.


 - வேதாத்திரி மகரிஷி.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

காய கல்ப யோகம்



மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.

1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் 'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.

1.
ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2.
கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்

உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

வியாழன், 31 ஜனவரி, 2013

அளவு முறை:


 வாழ்க வையகம்                                                வாழ்க வளமுடன்

 உணவு சுவையாக உள்ளது என்று மேலே மேலே சாப்பிட்டுக் கொண்டே போனால் இன்றைக்கு வயிற்று வலி, நாளைக்கு வயிற்றுப்போக்கு என்றதாகும். டாக்டரிடம் போனால் நோய்க்கு மருந்து கொடுப்பார். குணமான மறுகணமே மீண்டும் அளவுக்கு அதிகமான உணவு நாடிப்போனால், வாழ்நாள் முழுவதும் வயிற்றுப்போக்கு என்ற நிலை ஏற்பட்டால் வாழ்க்கை என்ன ஆகும்? வேறு எந்தக் காரியத்தை நீங்கள் கவனிக்க முடியும்? சாப்பிடுவதை ஒரு உதாரணத்திற்காகச் சொன்னேன். அதேபோல் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால் உடல் வலுவிழந்து போகிறது; உடல் கெட்டால், மனம் கெட்டால், வாழ்வும் சீரழிகிறது. நாம் கெடுகிறோம்; குடும்பம் பாதிக்கப்படுகிறது; சமுதாயம் தப்புவதில்லை.

ஐயுணர்வோடு மெய்யுணர்வு இணைந்து வரும்போது உங்களுக்கு என்ன திடம் வருகிறதென்றால் உறவிலேயே ஒரு தெளிவு, அதாவது detachment in attachment, வருகிறது. இதுதான் உறவிலேயே துறவு நிலை. இது அல்லாது துறவு நிலை என்று தனியாக ஒன்று இருக்கவே முடியாது. அப்படியே எல்லாவற்றையும் விட்டு விட்டுப் போவதுதான் துறவு என்றால் இறப்பவர்கள் தான் துறவு நிலைக்குப் போகிறார்கள் என்று சொல்லலாம்! நாம் வாழும்போதே வாழ்வு நலமாக, அமைதியாக, மகிழ்ச்சியாக அமைய வேண்டுமே தவிர, நாம் இறந்தபிறகு துறவானால் என்ன, எதுவானால் என்ன? அவ்வாறு வாழும் பொழுதே வாழ்வு திருப்தியாக, மேன்மையாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அனுபோகத்திலேயும் எல்லை கட்டிக் கொள்ள வேண்டும்; அளவு இட்டுக் கொள்ள வேண்டும்.
 

-வேதாத்திரி மகரிஷி.
 .

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நட்பு

நட்பு

 1. மனித வாழ்க்கையில் விலைமதிக்க ஒண்ணாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் உறுதுணையாகி, சுக துக்கங்களிலே கூட்டுறவு கொள்ளும் மனப்பான்மைதான் நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதல்ல.

2.பொருளாதாரத்தையும் ஒழுக்கத்தையும் குலைக்கும் நோக்கத்தோடு ஒருவர் மற்றொருவரோடு நட்புக் கொள்ள இடமிருக்கின்றது. சமுதாயத்தில் இத்தகைய நட்புதான் அதிகமாக வளர்ந்திருக்கின்றது. இத்தகைய நட்பு வளர வளர அதனூடே தொக்கி நிற்கும் ஆபத்தும் வளர்ந்துகொண்டே வரும். ஆகவே இத்தகைய நட்பை ஆரம்ப காலத்திலேயே உணர்த்து முறித்து விடுவது நலம்.

3. ஒரு நீதிபதி, குற்றம் சுமர்த்தப்பட்டுத் தன் எதரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாகவும் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தே நீதி விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளிதான் என்று கொடுக்கும் தீர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அவசியமானால்தான் அளிக்கிறார். அதுவரையில் அந்தத் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அதே போன்று ஒழுங்கீனம், பொருள் தேவை மிகுந்துள்ள இக்காலத்தில், ஒருவர் தன்னோடு நட்பு கொள்ள வந்தால் அவர் ஏன் சுயநலவாதியாக, சுரண்டி வாழ்பவராக இருக்கக்கூடாது என்ற கருத்தை முதலில் உருவாக்கி மனத்தில் வைத்துக்கொண்டே அவரோடு நட்புக் கொண்டு அவர் நடத்தையைப் பற்றி ஆராய வேண்டும். சந்தர்ப்பங்கள்தான் மனித உள்ளதை உரைபோடும் கல். ஆகவே உறவாடுபவர் உள்நோக்கம் சீக்கிரம் தெளிவுபடும். அதன் பிறகே அவர் குற்றமற்றவர், நட்புக்கு ஒத்தவர் என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். நீதிபதி நிரபராதி என்ற முடிவை முன்வைத்து குற்றவாளி என்ற முடிவைப் பின்கொள்ளுகின்றார். ஆனால் நட்பை ஆராய்வோர் முதலில் கலங்கமுடையோன் என்ற கருத்தை வைத்துச் சோதனைக்குப் பின்னரே களங்கமற்றவன், நண்பன் என்ற கருத்தை முடிவாகக் கொள்ள வேண்டும்.

4. நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு - சீடன், கணவன் - மனைவி, ஆசிரியர் - மாணவன், எசமான் - பணியாள், பொருட்களை விற்பவர் - வாங்குவோர், துணைவர்கள் ஆகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம். தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி என்ற மூன்றாலும் ஒவ்வொருவரும் வேறுபட்டிருப்பதனால் நட்பு என்றும் நிரந்தரம் என்று கொள்ள முடியாது. அது நீடிக்க இருக்கும் வாய்ப்பை விட குலைந்துபோக இருக்கும் வாய்ப்புத்தான் அதிகம்.

5. சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு அத்தகைய நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கை மயக்கத்தில் எத்துணையோ விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. பொருட்கள், பதவி, மனைவி, மக்கள், கெளரவம் இவற்றை துரோகிகள் நட்பினால் இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்க்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள் தான் கொஞ்சமா ?

6. எதிரிகளால் ஏற்படவிருக்கும் கெடுதல்களைப் புரிந்து கொள்ள முடியும்; முன் ஏற்பாடோடும் இருக்கலாம். நண்பர்கள் என்ற முத்திரையில் உலாவும் நயவஞ்சகர்கள் அடுத்த நிமிடத்தில் என்ன செய்வார்கள் என்று கூடப் புரிந்து கொள்ள முடியாது. இதற்கு உலக சரித்திரம் சான்று கூறுகின்றது.

7. எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையேதான் அது வலுவுள்ளதாக இருக்கும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் குறுக்கிட்டால் - இணைந்தால் - நட்புக்கு எவ்விதத்திலேனும் ஊறு உண்டாகிவிடும்.

8. நல்ல நட்பு கிடைக்காவிட்டாலும் சரி, ஒருவரையும் பகைத்துக்கொள்ளாத இன்மொழியாளனாக இருந்தால் அது உலகையே உனக்கு வசீகரப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமாக்கித் தரும்.

9. நட்பின் உயர்வு பற்றி விரித்துரைப்பது முடியாதுதான். பொருள் தேவை, ஒழுங்கீனம் மலிந்துள்ள சமுதாயத்தில், அத்தகைய நட்பு உருவாவது அரிது. நட்பினால் நலம்பெற்றோர் எண்ணிகையை விட வாழ்வில் ஏமாற்றமடைந்தோர், சீர்குலைந்தோர் எண்ணிக்கையே அதிகம்.

10. அறிவோடும் விழிபோடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, ஆகலாமலும், நெருங்காமலும் தீக்காய்வார் போல, பொருளையோ ஆற்றலையோ உதவியும் பெற்றும் வாழ்வது நட்பினால் ஏமாறாத - ஏமாற்றமளிக்காத - உயர்முறையாகும்.

+ வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்


மனிதப் பிறவியின் மூன்று நோக்கங்கள்

1. தன்னை உருவாக்கி வளர்த்த இயற்கை, பெற்றோர், சுற்றம், ஊர், உலகம் இவற்றிற்கு ஒருவன் பட்ட கடனைத் தன் உழைப்பால் ஈடு செய்ய வேண்டும்.

2. வினைப்பதிவுகளில் தீயவைகளை ஒழிக்க அறவழியில் செயலாற்றி வாழ்வை நடத்தி மாற்றியமைத்து தூய்மை செய்து கொள்வது.
...

3. அறிவை அறிந்து அதுவே பூரணப் பொருளான தெய்வம் என்றுணர்ந்து அப்பொருளின் இருப்பு, இயக்கம், விளைவுகள் அனைத்தும் உணர்ந்து எல்லா உயிர்களோடும், பொருட்களோடும், இனிமை காத்து வாழ்வில் பேரின்பம் காண்பது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

செவ்வாய், 20 நவம்பர், 2012

மனிதன் முழுமை பெற ஏழு விதிகள்




1. வாழ்வின் நோக்கம், தேவைகள், விருப்பங்கள் இவற்றை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். இவை ஒன்றுக்கொன்று முரண்படாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. தனக்கு அமைந்துள்ள சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் கணித்துக் கொள்ள வேண்டும்.
  3. இயற்கையின் ஒழுங்கமைப்பையும், அதன் ஆற்றலின் விளைவு நியதியையும் உணர்ந்து கொண்டும், மதித்தும் நடக்க வேண்டும்.

4. வாழ வேண்டிய முறைகளையும், ஆற்ற வேண்டிய செயல்களையும் ஒழுங்காகத் தொகுத்துக் கொள்ள வேண்டும்.

5. இத்தகைய வாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள உடல்வலிமையையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவற்றிற்கு முறையான உடற்பயிற்சியையும், உள்ளப்பயிற்சியையும், சிந்தனை ஆற்றலையும் பழகிக் கொள்ள வேண்டும்.

6. விழிப்போடும் விடாமுயற்சியோடும் எண்ணம், சொல், செயல் இவற்றைப் பயன் படுத்த வேண்டும்.

7. அவ்வப்போது ஏற்படும் தவறுகளை, தற்சோதனை, செயல்திருத்தம் என இரண்டு வழிகளிலும் திருத்தித் தன்னை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 8 நவம்பர், 2012

மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

வினா: சுவாமிஜி, ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் ஒன்றை ஒன்று கொன்று தின்கிறது. அதற்கு பாவ, புண்ணியம் இல்லை என்கிறீர்கள், ஆனால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மட்டும் பாவ - புண்ணியம் ஏன்?

மகரிஷியின் விடை: உலகில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. சீவன்களில் கருணைமிக்க எந்த உயிர்களுக்கும் நன்மையே செய்கின்ற ஓர் அற்புதமான சீவன் ஓரறிவான தாவரங்களே.

இறைவனின் பரங்கருனையே பஞ்சபூதக் கூட்டான வித்தாகி, ஓரறிவுத் தாரவங்களாக உயிர்த்துள்ளது. அத்தாவரங்களே இரண்டறிவு முதல் ஆறறிவு வரையுள்ள சீவன்களுக்கு உணவாக வந்துள்ளது. தாவரங்கள் பிறவற்றிடம் இருந்து பறித்து உண்ணவேண்டிய அவசியமில்லை. பூமியில் இருந்து தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது.
...

இரண்டறிவில் இருந்து ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்களில் தாவர பட்சியான ஆடு, மாடு, மான், யானை போன்ற சில ஜீவன்களைத் தவிர மற்றவைகள் ஒன்றையொன்று கொன்று உணவாக்கிக் கொள்கிறது. அங்கு அதற்கு உணவு உற்பத்தி செய்யவோ, நாளைக்கு என்று சேமித்து வைக்கவோ தெரியாது. கிடைப்பதை அப்படியே உணவாக (Readymade Food) எடுத்துக் கொள்கிறது.

விலங்கினங்களிடையே பறித்து உண்ணல் என்பது அதன் இயற்கை சுபாவம். அவற்றிற்கு தனக்கு வேண்டிய உணவை தானே உற்பத்தி செய்து கொள்ள தெரியாது. அங்கு அதில் மனிதன் குற்றம் காண முடியாது. அதனால் ஐந்தறிவு வரை பாவ-புண்ணியம் என்பதில்லை.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறது. அதற்கு நாம் ஆறறிவு பெற்ற மனிதன் என்று தெரியாது. உணர்ந்து கொள்ளவும் முடியாது. "இரத்தமும், சதையும் நிறைந்த தன்பசிக்கான உணவு மலையே மனிதன்" என்று நினைத்துத் தனக்கு வேண்டியதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்றே கடிக்கிறது.

ஐந்தறிவு விலங்கினங்களில் இருந்து வித்து எடுத்து வந்த மனிதன், தன் முழுமையை உணரும் ஆறாவது அறிவைப் பெற்ற பின்னும் பரிமாணத்தில் பெற்று வந்த விலங்கினப் பதிவாகிய 'பறித்து உண்ணல்' என்பதை விட முடியவில்லை. அங்கு தான் மூன்று விதமான குற்றங்களைச் செய்கிறான். அதுவே உலகின் அனைத்துக் குற்றங்களுக்கும் அடிப்படையாகிறது.

1 . உயிர்க்கொலை,
2 . உணவுக்காக அதன் உடலைத் திருடிக் கொள்ளுதல்,
3 . அதன் வாழும் உரிமையைப் பறித்தல்.

இந்த மூன்றிணைப்புக் குற்றமே இன்றும் மனித வாழ்வில் தொடர்கிறது.

ஒருவன் சிறிது பொருள் வைத்திருந்தால் மற்றவன் அதைப் பறிக்க நினைக்கின்றான். தன் சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான். இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே. பொருள் பறிப்பது, அதிகார மோகம், புகழ் வேட்பு, பொறுக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது.

மனிதன் அறநெறியும் இறையுணர்வும் பெற்றாலே பாவம் போக்கி உயிர்களிடம் அன்பும் கருனையுமாக வாழ முடியும். இவ்விலங்கினப் பதிவுகளை மாற்றி மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம், கடமை, ஈகை என்ற அறநெறியும், அறிவை உயர்த்தி வாழ்வின் நோக்கம் அறிந்து வாழ இறையுணர்வும் வேண்டும்.

திங்கள், 22 அக்டோபர், 2012

காணிக்கை




மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மாவுக்குத் தேவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதாகக் கற்பித்து, இங்கே உலகில் கடவுளுக்கென்று கொடுக்கும் பொருட்களெல்லாம் சொர்க்கத்திற்குப் போன ஆன்மாக்களுக்குப் போய் கிடைப்பதாக பல காலம் பலராலும் கூறப்பட்டு, இந்நம்பிக்கையில் கடவுளுக்கு என்று உணவு அளிக்கத் திருவிழாக்களும், கடவுளுக்கென்று பலவகையான பொருட்காணிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

மனிதன் உழைத்து சம்பாதிக்கும் எப்பொருளும் அவனைப் போன்று மனித உருவில் உள்ளவர்களுக்குத் தக்க முறையில் உதவி வாழ்வுக்கு வளமளிப்பது அவசியம். மனிதன் கடவுளுக்கு என்று கொடுக்கின்ற எந்தப் பொருளானாலும் எங்கே போய்ச் சேருகிறது என்று கண்டுபிடித்துக் கொள்வது ஒன்றும் சிரமமல்ல. கடவுளுக்கு மனிதன் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இடைத்தரகர்களாக உள்ளவர்களின் ஏமாற்றுச் செயல்கள் தாம்.
...

மனிதகுலத்தின் வளத்தை அழிக்கின்ற பல விசயங்களில் முக்கியமானவை கடவுளுக்கென்று கொடுக்கின்ற பொருட்களும், செய்கின்ற செயல்களுமாகும். இந்தப் பெரிய பொத்தல், இந்த விஞ்ஞான காலத்தில் சிந்தனை மிக்க அறிஞர்களால்தான் அடைக்கப் பட வேண்டும். இப்பொத்தல் அடைக்கப்பட்டு விடும் என்று உறுதியாகவும் நம்பலாம். ஏனெனில், அந்த அளவுக்கு அறிவு கல்வியினாலும், ஆராய்ச்சியினாலும், விஞ்ஞானத்தினாலும், இயற்கையாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வெள்ளி, 19 அக்டோபர், 2012

தம்பதியர் பயிற்சி

குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே குண்டலினி யோகப் பயிற்சியை ஏற்றுப் பழகுவதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம். பால் உணர்ச்சி வேட்பு இவற்றில் சமநிலை, அறுகுணச் சீரமைப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒத்தும் உதவியும் வாழ்தல் இவை அனைத்தையும் குண்டலினி யோகத்தால் பெறவும் காக்கவும் முடியும்.

பிறக்கும் குழந்தைகள் தரமுடையனவாக இருக்கும். பிறந்த குழந்தைகளை வளர்ப்பின் முறையறிந்து வளர்ப்பதால் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நலமளிப்பவர்களாக அவர்கள் சிறப்படைவார்கள். சுருங்கச்சொன்னால் குண்டலினி யோகம் பயிலும் ஒவ்வொருவரும் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும், உலக சமுதாயத்திற்கும் அறிவின் நலமளிக்கும் சுடராக, ஆன்மீக ஒளியைப் பரப்பும் நல்விளக்காகத் திகழ்வார்கள். யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உயிரையும் அறிவையும் மேலான நிலையில் வைத்துக் கணவன் மனைவி மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ முடியும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

புதன், 10 அக்டோபர், 2012

மனதை செம்மை படுத்த வேதாத்திரி மகரிஷி கூறிய இரத்தின கருத்துக்கள் ...




வாழ்க வையகம்                                                                     வாழ்க வளமுடன்

 
* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.

* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
 

சனி, 22 செப்டம்பர், 2012

கவலை




நினைப்புக்கும், நடப்புக்கும் இடையே வித்தியாசம் வரும்போது இருக்கும் மன நிலையை கவலை என்கிறோம். இருப்புக்குத் தகுந்தவாறு தேவையை மாற்றி அமைத்துக் கொள்ளும்போது கவலை இராது. கவலை உள்ளத்தில் நிலைபெறவொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். கவலை வளர்ந்தால் மனதில் நல்லெண்ணங்கள் வரா; அவை நிலைக்கா; உடலாற்றல் செலவாகிக் கொண்டே இருக்கும்.

கவலையை ஒழிக்கத் தேவையானவை:
...
இயற்கை ஒழுங்கமைப்பை அறிதல்
சிந்திக்கும் திறனை பெருக்கிக்கொள்ளுதல்
தன்னம்பிக்கை
முயற்சி
துணிவு

கவலை எழாமல் காக்க
1. தேவையின்றி சிக்கலைத் தானே பெருக்கிக் கொள்ளாது இருத்தல்
2. அவசியமற்ற முறையில் பிறர் செயலில் தலையிடாது இருத்தல்
3. எந்தக் காரணத்தைக் கொண்டும் போதிய நீதி உணர்வு இல்லாமல் தன்கடமையிலிருந்து வழுவாது இருத்தல்

பிறரிடம் எழும் சினமும், தன்னிடம் எழும் சினமாகிய கவலையும் ஒருவரிடம் காணப்படுமானால், அவர் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வியாழன், 6 செப்டம்பர், 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " வலி, நோய், மரணம் "


 உயிர் விண்ணாம் சூக்குமம் ஆம் உடலுக்குள்ளே
உயிர் சுழல விரியும் அலை சீவகாந்தம்
உயிர் காந்தம் உடலில் அணு அடுக்கைக் காக்கும்
...
உடலியக்கம் மனஇயக்கம் நடத்திவைக்கும்
உயிர் காந்தம் உடலில் மின்குறுக்கு ஆனால்
உடலில் வலி நோய்கள் இவையாக மாறும்
உயிர் காந்தம் மின் குறுக்கால் வற்றிப் போனால்
உயிர் தாங்கும் வித்துடையும் உயிரும் போகும்.

-வேதாத்திரி மகரிஷி

பஞ்ச பூதங்களின் கூட்டுதான் சீவன்கள் ஆகும். சீவன்களில்
கண்களால் காணக்கூடிய உடல் பரு உடலாகும். கண்களுக்குப்
புலப்படாத சூக்கும உடல் என்பது தன்னைத் தானே
சுற்றிக்கொண்டும் உடல் முழுதும் சுற்றிக்கொண்டிருக்கக்
கூடிய உயிர் துகள்களின் தொகுப்பே ஆகும். இதே போன்று
கண்களுக்குப் புலப்படாத காந்த உடல் என்பது தன்னைத்
தானே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய உயிர் துகள்களிலிருந்து
வெளியேறும் நுண் துகள்களான காந்தமும் அது உடல் முழுதும்
சுற்றி கொண்டிருக்கும் ஓட்டமும் ஆகும். இக்காந்த ஓட்டம்தான்
அணு அடுக்குகளை சீராகக் காக்கிறது. இதுவே உடல்
இயக்கங்களையும் மன இயக்கங்களையும் பராமரிக்கிறது.
அணு அடுக்கில் ஏதேனும் காரணத்தால் சீர்குலைவு
ஏற்பட்டால் அதை சீர்செய்ய அதிகமான சீவகாந்தம்
அங்கே குவியும்போது அது மின் குறுக்காகி, வலியாக
உணரப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி இடத்தால் அகன்றும்,
காலத்தால் நீட்டிக்கும்போது நோய் எனப் படுகிறது.
அதிகமான சீவகாந்தம் நோயைப் போக்க முயலும்போது
உடலை நடத்த போதுமான சீவகாந்தம் குறைவுபடுகிறது.
இத்தேவையை நிறைவு செய்யவேண்டி உயிர்த் துகள்கள்
வழக்கத்தைவிட வேகமாக சுழல்வதால் உடல் வெப்பம்
அதிகமாகி, அவ்வெப்பத்தைத் தாங்கமுடியாமல் வித்துக்
கலயம் உடைந்து சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு
வெளியேறிவிடுகிறது. உயிரைப் பிடித்துக் கொண்டிருந்த
சீவ வித்துக் குழம்பு உடலைவிட்டு வெளியேறியதும்
உடலிலிருந்து உயிர் வெளியேறிவிடுகிறது. இதுவே
மரணம் ஆகும்.
 
வாழ்க வளமுடன்.

வியாழன், 12 ஜூலை, 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : " நிறைந்த உள்ளம் "




 
நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
... உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.    - வே.மகரிஷி

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பும்போது அதிலுள்ள காற்று
எவ்வாறு வெளியேறி விடுகிறதோ அதைப் போன்றே
இறைநிலையோடு தொடர்ந்து தொடர்பு கொள்ளும்போது
நம் மனதுள் உள்ள எல்லா தீய குணங்குளும், எல்லா
உலகியல் பற்றுகளும் நம்மை விட்டு நீங்குவதோடு
நம் மனம் தூய்மை அடைகிறது. இந்நிலையை நாம்
அடைய வேண்டுமானால் அதற்கு 'தவம்' மட்டுமே
உதவி புரியும். வேறு எந்த வகையிலும் யாரிடமும்
பெறவும் முடியாது. தரவும் முடியாது. இந்நிலையில்
அறிவு உயர்வடைந்து தானே பரம்பொருள் என்பதை
அறிந்துகொள்ளும். இந்த விழிப்பு நிலையில் நம்மை
நாம் சீரமைத்துக் கொண்டு, நம்மிடமுள்ள வேண்டாத
குணங்களை நீக்கிக் கொள்ள வேண்டும். நாம் மனித
நிலையிலிருந்து மகான் என்ற நிலையை அடைய
முடியும். ஒரு கல் அல்லது மரத்தில் தேவையற்ற
பகுதிகளை நீக்கும்போது எப்படி அது ஒரு அழகிய
சிலையாக மாற்றம் பெறுகிறதோ அதைப் போன்று.


வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

புதன், 11 ஜூலை, 2012

பிறப்பும் இறப்பும்




பிறப்பும் இறப்பும் உருவ தோற்றமான உடலுக்கே அன்றி, அரூபமாக இருக்கும் இயங்கும் உயிருக்கு அல்ல.

அணுக்களின் எழுச்சி, கவர்ச்சி என்ற இயக்கத்தால் ஏற்படும் அவைகளின் கூடுதல், பிரிதல் என்ற நிகழ்ச்சிகளே எல்லா உருவங்களின் தோற்ற, மறைவு சம்பவங்களாகும். தொடர்ந்து நடைபெற்று வரும் அணுக்களின் கூட்டு இயக்கத் தன்மாற்றச் சிறப்புகளின் அவ்வப்போதைய நிலைகளைக் காட்டுவதே பொருட்கள், ஜீவராசிகள் இவைகளின் உ
ருவ அமைப்புகளும் அவைகளின் பல்வேறு இயக்கங்களும் என்பது தெளிவான விளக்கம்.

உயிர் என்பது அரூபமனாது. அது அணுவுக்கு அப்பால் மெளனமாக உள்ளது. அதுவே அணுவில் இயக்கம், ஒலி, ஒளி இவைகளாக இருக்கிறது. ஜீவ ராசிகளின் புலன்கள் கூடுதலுக்கேற்பவும், தேவையுணர்வு, அனுபோகம், இன்ப துன்பம் என்பனவான அனுபவங்களுக்கு ஏற்பவும் அதே சக்தி அறிவாக இருக்கிறது. இந்தச் சக்தி எங்கும் நிறைந்து என்றும் உள்ளது. இந்தப் பேராதார நிலையாகிய உயிருக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
-