Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 30 மே, 2014

மனவளக்கலையின் நான்கு அங்கங்கள்

மனவளக்கலை பயிற்சி முறை நான்கு அங்கங்களை கொண்டது. தவம் (Meditation), தற்சோதனை அல்லது அகத்தாய்வு (Introspection) குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection) என்பவை. தவத்தினால் உயிரின் படர்கைநிலை கழிந்து அடக்கநிலை கிடைக்கிறது; உயிரிலேயே ஒன்றி நிற்கிறோம். விவகாரங்களிலிருந்து விடுபட்டு நிற்க மனதிற்குத் திறமை கிடைக்கிறது; மன வலிமை (Will Power) கிடைக்கிறது. "நான் யார்?" துன்பம் ஏன் வருகிறது? துன்பம் நீங்கிய இன்ப வாழ்வெய்த என்ன வழி? இந்தச் சமுதாயத்தின் வளத்திற்கும் உயர்வுக்கும் என் பங்குப் பனி என்ன? நான் எங்கே போக வேண்டும்? எப்படிப் போவது?" - இவையெல்லாம் தற்சோதனையின் பாற்படும். தன்னைப்பற்றி, தன் தகுதியை பற்றி, தன மதிப்பைப் பற்றி ஆராய்வது தற்சோதனை. இந்தத் தற்சோதனையில் பெறும் தெளிவைக்கொண்டு எடுக்கும் முடிவை, தவத்தினால் மனத்திற்கு கிடைத்திருக்கும் உறுதியைக் கொண்டு, வாழ்வில் எதிர்காலச் செம்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது கிடைப்பதுதான் "குணநலப்பேறு". தவத்தாலும் தற்சோதனையாலும் கிடைக்கும் குணநலப்பேற்றின் இறுதிப்படிதான் "முழுமைப்பேறு (Perfection). மனவளக்கலையின் நான்கு அங்கங்களுக்கும் மனமே விளைநிலம். மனம் தன் திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சிதான் தவம் (Meditation). மனம் தன்னை தூய்மை செய்து கொள்ள எடுக்கும் முயற்சிதான் தற்சோதனை (Introspection). தூய்மையில் மேலும் மேலும் அடையும் முன்னேற்றந்தான் குணநலப்பேறு (Sublimation). தூய்மையில் பூரணத்தைக் காணும் இடந்தான் முழுமைப்பேறு (Perfection).
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக