Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 8 அக்டோபர், 2013

மெய்ப்பொருள்

மனமும் மெய்ப்பொருள்தான். ஆதியும் மெய்ப்பொருள்தான். பூரணமாகிய மெய்ப்பொருள் எல்லாமாக இருக்கிறது. கடவுள் எல்லாமாக இருக்கிறார். நானுமாக இருக்கிறார். எனவே, எனக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. அதன் ஒரு முனை நான். இன்னொரு முனை அவர் என்னும்போது இந்தச் சங்கிலியைப் போட்டுவிட்டு அவரை எங்கே போய்த் தேடினால் கிடைப்பார்? எனவேதான் "உன்னை நீ அறிவாயாக" என்று பல பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள். 'நான்' என்னும் போது நானென்று சொல்லிக்கொள்பவர் யார்? மனம் தான். எனவேதான் நாம் மனத்தைப் பிடித்துக்கொள்கிறோம். உயிர் தான் மனமாக உள்ளது. பரம்பொருளின் இயக்கத்தில் தோன்றிய முதல் பூதமான ஆகாசமே உயிராக இருக்கிறது. எனவேதான் நமது உலக சமுதாய சேவா சங்கத்தில் 'மனவளக்கலை' ஆகிய குண்டலினி யோக முறையில் மனத்தை உயிரில் ஒடுக்கி, உயிரின் அடக்கத்தில் மனமே மெய்பொருளாகும் நிலையை துரியாதீத தவத்தின் மூலம் சாதிக்க முடிகிறது.
"ஐயப் படாஅது அகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்".
என்ற குறளையும் இந்த இடத்தில் சிந்தித்துப் பாருங்கள்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக