Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 4 அக்டோபர், 2013

சிக்கல்கள் குறைய




வறுமை, நோய், கடன், குடும்பத்தவர்களோடு கருத்து வேறுபாடு, பேராசை, பொறாமை, தனது அல்லது தனது சுற்றத்தாரின் மரணத்தைப் பற்றிய அச்சம். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பு இவற்றால் கவலைப்படுவோர் எண்ணிறந்தோர். வறுமையையும், கடனையும் முயற்சியாலும், சிக்கனச் செயலாலும் தான் தீர்க்க முடியும். நோயைச் செயலொழுக்கம், மருந்துண்ணல் என்பனவற்றால் தான் போக்க முடியும். கருத்து வேறுபாடுகளைக் காரணமறிந்து விட்டுக் கொடுத்தும், விளக்கம் கூறி மனநிறைவை ஏற்படுத்தியும் தான் தீர்க்க வேண்டும். பேராசை, பொறாமை என்பனவற்றின் விளைவறிந்து நிறைமனம் பெற்றுத் தான் அவற்றைப் போக்க வேண்டும். பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் இழப்பை முயற்சியாலும் ஒழுக்கத்தாலும் சமுதாய நலத் தொண்டாலும் தான் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய கடமைகளை மறந்து அவை உடனே தானாக தீர்ந்து விட வேண்டுமென்று நினைப்பது அறியாமையே.

 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"பிறரின் அறியாமையை மன்னிப்பதோடு தனது
அறியாமையை 'அகற்றுவதும்' தான் அறிவுடைமை."
.
அமைதியைப் பெற -
"பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல்
இம்மூன்றும் எல்லையின்றித் தேவையாகும்."
.
"நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதற்கு முன் கவனித்துக் கொள்வீர்."
.
"நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை வந்து விடும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக