Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 11 அக்டோபர், 2013

வறுமை

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு."

மனித வாழ்க்கையில் அமைதியின்மையும் , துன்பங்களும், சிக்கல்களும் பெருகி இருக்கின்றன.... இவற்றிற்குப் பொருள் வறுமை, அறிவு வறுமை என்னும் இரண்டுமே காரணம்.

1.அறியாமை (Innocence )
2.அலட்சியம் (Ignorance )
3.உணர்ச்சிவயம் (Emotional moods)
இவையே அறிவு வறுமைக்கு காரணம்.

1. சோம்பல்,
2.வீண்செலவு,
3.இயற்கைச் சீற்றம் ,
4.பொருள் பதுக்கல்,
5. பொறுப்பும் திறமையுமற்ற ஆட்சி நிர்வாகம் .
இவை பொருள் வறுமைக்கு காரணம் என்று சுவாமிஜி குறிப்பிடுகிறார்கள்.

பொருள் வளத்தில் மக்கள் நிறைவு பெற்றால்தான் உலகில் அருள்வாழ்க்கை அமைந்து அமைதி கிட்டும். பொருள் இன்றி அறிவு அடிமை. அருள் இன்றிப் பொருட்கள் மட்டும் மிகும்போது அறநெறி நிலைக்காது .

"பொருள்துறையில் சமநீதி உலகம் கண்டால்
புகழும் இகழும் ஒழுக்க நிலைமேல் நிற்கும்
அருள்துறையில் ஒளிவீசும் அன்பும் பண்பும்
அகத்தூய்மை வினய்த்தூய்மை இயல்பாய் ஓங்கும் "

                                                                             --அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக