Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 16 அக்டோபர், 2013

Astronomical radiations

Astronomical radiations எப்பொழுதும் நட்சத்திரங்கள், கோள்கள், பிரபஞ்சத்திலிருந்து வந்துகொண்டே இருக்கும். எந்த அலை வருகிறதோ அந்த அலையில் ஆற்றல் துகள்களும் ஓரளவுக்கு அடித்து வரப்படும். உதாரணமாக ஓடையில் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீரைவிட கல்லில், மண்ணில் வலுவு அதிகம் என்றாலும் ஓடும் தண்ணீர் அந்தக் கல்லையும் அரித்து மணலையும் அடித்துக் கொண்டு ஓடுகிறது அல்லவா? அதே போல ஆற்றல் துகள்களும் அடித்து வரப்படுகின்றன. அதிலேயிருந்து வந்து மோதும்போது எந்தெந்த உயிர் - வகை இருக்கிறதோ அந்த species க்குத் தக்கவாறு அந்த blue-print உள்ளே இருக்கும். எது எதை வாங்குகிறது. எது எதை விட்டுவிடுவது என்பது அவற்றின் தன்மையை ஒத்தது; it is super - computerised. உதாரணமாக நூறு தொட்டி வைத்திருக்கின்றோம்; நூறு விதைகளை ஊன்றுகிறோம். ஒரே மண், ஒரே தண்ணீர் என்றாலும் அந்த விதைக்குத் தகுந்தவாறு மரம் வளரும். அது போல ஒவ்வொரு ஜீவனும் உணவு, காற்று கோள்களின் அலையியக்கம், பூமியின் மத்தியிலிருந்து மேற்பரப்பு நோக்கி வந்து கொண்டேயிருக்கின்ற சக்தி - தனக்கு வேண்டியதைத்தான் எடுக்கும். மனிதன் தான் தனக்கு உதவாது போனாலும் வாரி வைத்துக் கொண்டு சேர்த்து வைத்து பூட்டி வைத்துக் கொண்டு இன்னும் இன்னும் என்று காத்திருப்பான். ஆனால் இயற்கையில் எந்தப் பொருளும் தனக்கு வேண்டாததை எடுப்பதே இல்லை. அது அதற்கு ஒரு அளவு முறை இருக்கிறது.

சந்திரனிலிருந்து ஒரு radiation; சூரியனிலிருந்து ஒரு radiation; இரண்டும் வேறு வேறு. பதினான்குக்குப் பதினான்கு விதமான radiations; அந்த பதினான்கும் நிறைவாக இருந்தால் அதனுடைய radiation வேறு. தண்ணீர் அலை யாது? உடலில் உள்ள ரத்தம். இதனுடைய இயக்கம் வேறு. திடப்பொருளின் இயக்கம் வேறு. அதனால் Astronomical radiations ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிறந்தபொழுது என்ன magnetic wave balance capital ஆக இருந்ததோ, அதற்கும் மேலாக ஒவ்வொரு கோளும் அருகில் வரவும், தூரம் போகவும், ஒரு கோள் இன்னொரு கோளோடு சேர்ந்து வரும்போது ஒரு வகையிலேயும், மாறி வரும்போது வேறுவகையிலேயும், இப்படியே கோள்களின் கூட்டமைப்புக்கும் தகுந்தவாறு அதன் பலன் (effect) வித்தியாசப்படும். ஆகையினால் இந்த Astronomical radiations are also one of the causes for change in the mechanical, electrical and other functions in the metabolism.


 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக