Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 9 நவம்பர், 2019

திருக்குறள் உட்பொருள்

♨திருக்குறள் உட்பொருள்♨

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் "

இந்த குறளுக்கு விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும்;
பிற உயிர்களை கொல்லாமல்; உணவுக்கு புலால் வேண்டாம் என்று மறுத்தவர்களை மற்ற எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் :-

மற்ற உயிர்களைவிட மனிதனிடம் அமைந்துள்ள  ஆறாம் அறிவின் சிறப்பு யாதெனில்; மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களையும் அறியும் திறமே ஆறாம் அறிவு.இந்த நுண்ணறிவால் பிற உயிர் உணர்தலாக பெறும் இன்பத்தின் அல்லது  துன்பத்தின் அளவை யூகித்து உணர்ந்து கொள்கிறான்.துன்பம் கண்ட உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டு தக்க உதவி செய்து அவ்வுயிர் படும் துன்பத்தைப்
போக்குகிறான்.இது சிந்தனையாற்றல் உயர்ந்த நிலையில் ;பழக்கத்தை விளக்கத்தின் வழியில் வாழும்போது அந்த  முரண்பாடு நீங்கிவிடுகிறது.

இந்த நிலையில்  ஒரு நண்பர் இல்லத்திற்கு விருந்தினராக போகிறார்.அங்கு அவருக்கு மாமிச புலால் உணவை அன்போடு படைக்கும் போது; எனக்கு புலால் உணவு வேண்டாம் என்று கூறுகிறார். மீண்டும் விருந்து படைத்த அன்பரோ அன்பின் மிகுதியால் அவரை உண்ணும்படி வேண்டுகிறார்.உடனே விருந்தாளி இரு கைகளையும் கூப்பி புலாலை மறுத்து தனது உறுதிப் பாட்டை விளக்குகிறார்.
கைகூப்பி மறுத்த பிறகு மீண்டும் வற்புறுத்த மாட்டார்கள்.

கைகூப்பி மறுக்கும் செயல் புலால் உண்ணாமையில் அவன் கொண்டுள்ள உறுதிப்பாட்டை
விளக்குகிறது. அந்த  உறுதிப்பாடே உயிர்களிடத்தில் அவன் கொண்டுள்ள கருணயால்,அன்பால் விளைந்தது.அத்தகைய கருணை உள்ளம் கொண்டவரிடம் எல்லா உயிர்களும் அன்பு பாராட்டும்.தஞ்சமடையும்.

இந்த குறளில் சரியான கருத்து விளங்க வேண்டுமானால்;கைகூப்பி  என்ற சொல்லை மறுத்தானை என்ற சொல்லுக்கு முன் வைத்துப் பார்க்க வேண்டும்.

"கொல்லான் புலாலை கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும்"

என்ற விளக்கம் கிடைக்கும்.

'கைகூப்பி எல்லா உயிரும் தொழும்' என்றால் கருத்து பொருந்தாது. 'கைகூப்பி மறுத்தானை எல்லா உயிரும் தொழும்' என்றால் அந்த அன்புள்ளத்திலிருந்து எழும் மன அலைச்சுழல் எல்லா உயிர்களையும் வசீகரிக்கிறது, நட்பு கொள்ளச் செய்கிறது என்று கொள்ள வேண்டும்.

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இந்த உட்கருத்தில்தான் திருவள்ளுவர் என்ற முனிவன் இந்த குறளை இயற்றியிருக்கிறார் என்பதை மகரிஷி அவர்கள்; திருவள்ளுவர் இந்தக் குறளை எழுதும் போது எந்த மன அலைச்சுழலில் இருந்து  எழுதினாரோ அதே அலைச்சுழலுக்கு சென்றுதான் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்கள் என்பது புலானாகிறது.

குரு மகானின் அலைச்சுழலில் இணைவோம்!

ஓங்கி ஒலிப்போம்
வேதாத்திரியம்.

வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக