Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 20 ஜனவரி, 2014

அனைவரும் செல்வர்களே

இறைவனுடைய சிறு துளியாக இருக்கக்கூடிய மனிதனிடம் முழுமையாக ஆறாவது அறிவு செயல்படுகிறது. அவனிடம் இறைநிலையோடு கலக்கக் கூடிய அளவுக்கு ஆற்றல் இருக்கிறது. மனத்தின் அடித்தளத்தில் இறைநிலையே அமர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இறைநிலையின் பிரதிநிதியாகவே, இருக்கிறான். அவனிடம் பேராற்றல் அடங்கியிருக்கின்றது .

தனக்கு , தன் குடும்பத்திற்கு ,சுற்றத்தாருக்கு , சமுதாயத்திற்கு , உலகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ன? அதற்குத் தன்னிடம் உள்ள உடல்வலு , அறிவின் உயர்வு, அதிகாரம் , செல்வம், வயது இவற்றைக் கணித்துக் எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருப்பது என்றிருந்தால் பிறரிடமிருந்து கையேந்த வேண்டியது இல்லை, பிறரிடம் எதிர்பார்த்துப் பெறுவதற்காக, இயற்கை மனிதனைப் படைக்க வில்லை, அதற்காக யாரும் பிறக்கவில்லை. எதிர்பார்க்க வேண்டியது இல்லை. எதிர்பாத்தல் பெரும் பாலும் ஏமாற்றத்தில் முடிகின்றன. அதோடில்லாமல் வறுமையில் ஆழ்த்தி விடுகிறது.


பிறரிடம் எதிர்பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு, துன்பத்திற்குரிய செயல்களைத் தவிர்ப்பது, எந்தக் காரணத்தாலோ துன்பப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய உயிருக்குத் தன்னிடம் இருக்கக் கூடிய மிகுதியான ஆற்றலைக் கொண்டு என்னென்ன உதவி தேவையோ அந்த உதவியைச் செய்வது என்ற பண்புகளோடு ஒரு மனிதன் இருக்கும் பொது அவனிடம் அளவற்ற ஆற்றல் பெருகிவிடும். அத்தகைய நிலையில் அவன் அளவற்ற செல்வம் உடையவனாகக் கருதப்படுகிறான். அங்கே ஆற்றல் குறைவுபடுவதே இல்லை. இன்ப ஊற்று வற்றாது சுரக்கும். இறைநிலையோடு இறைநிலையாகவே நிற்கும் காட்சி உள்ளத்தில் ஏற்படும் .

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக