Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம்

சிக்கனம் என்பது முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறையிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்த்திருத்தமுடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா? போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும், நலம் பெற முடியும். எனவே, அந்த முறையிலே சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால், அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
 "மனிதர்கள், பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன".
.
"இறைநிலை நோக்கிய சிந்தனைக்கு நேரம் ஒதுக்கிக்கொண்டு பயிற்சி செய்வதும், தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவதைப் பொருத்தே அறிவின் முழுமை கிட்டும்".
.
"மனம் ஒடுங்கி இறைநிலை நின்று, அகம்
தூய்மையான நிலையில் செயல்களைச் செய்வதற்கு
மனதிற்கு வேறு இடையூறுகள் இருக்கக்கூடாது".
.
நல்லுரை :
"சிக்கனமும் சிந்தனையும் சிறந்த பண்பும்
சீர்திருத்தமுடன் வாழும் துணிவும் கொண்டே
எக்கணமும் இருவருமே பிறர் உள்ளத்தில்
எழுகின்ற உணர்ச்சிகளைக் கூர்ந்துணர்ந்து
அக்கணத்தின் சூழ்நிலையைப் பயனைப் பெற்றே
ஆராய்ந்து எதிர்விளைவைக் கணித்துக் கொண்டு
மிக்க நலமுள வழியே செயல்களாற்றி
மேலான அறவழியில் வாழ வேண்டும்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக