Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 16 மார்ச், 2021

சுவாமிஜி, ஒரு தனிமம் மற்றொரு தனிமமாக எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை விளக்க வேண்டுகிறேன்


பதில்:* ஒரு தனிமத்தில் நுண்விண் துகள்கள் சேர்ந்து இயங்குகிறது என்றால் அவை ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு விலகாமல் ஒரே தனிமமாக பரிமளிக்க (Maintain) அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட சுழல் விரைவு இருக்க வேண்டும். அந்த தனிமமானது தன்னியக்கத்தால் தன் நிலையிலிருந்து அதிக விரைவு பெற்றாலும் அல்லது சூழ்நிலையின் ஆதிக்கத்தால் (Activation) விரைவு பெற்றாலும் அந்த சுழற்சிக்கு தக்கவாறு தன்னுடைய நுண்துகளை இழந்து மாற்றம் பெற நேரிடும். ஒரு தனிமம் காலத்தால் அதே தனிமமாக நிலைத்து நிற்க முடியாது.

இரண்டு விண் துகள்களின் சேர்க்கையை ஹைட்ரஜன் என்று வைத்திருக்கிறோம். இதே போன்ற ஹைட்ரஜன் கூட்டு மேலும் சேரச்சேர ஒரே குழுவாக மாறுகிறது. அது குழுவாக இருந்தாலும் இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் அது சுழன்று கொண்டே தான் இருக்கும், அச்சுழற்சி இயக்கத்தால் கனமான துகள்கள் மையத்திலும் லேசான துகள்கள் அதன் ஓரப்பகுதியிலும் (Periphery) இடம் எடுத்துக் கொள்ளும். இவ்வாறு இயங்கி, ஒத்து இணையும் பொழுது இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் பொருத்திக் கொள்கிறது. அவ்வாறு 16 துகள்கள் சேர்ந்தியங்கும் பொழுது அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுழன்று கொண்டே வரும் பொழுது இடத்திற்கு தகுந்தவாறு ஒன்று மற்றொன்றோடு பொருந்தி வேறு தனிமமாக மாறிக் கொண்டே வருகிறது.

இப்பொழுது இரு விண்துகள்களைக் கொண்ட ஹைட்ரஜன் 16 விண் துகள்களைக் கொண்ட ஆக்ஸிஜனோடு சேர்ந்து சுழலும் பொழுது சுழற்சி வேகம் குறைந்த கனமான ஆக்ஸிஜன் மையத்திற்கு வரும். இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் (Ratio) வரும் பொழுது  ஒன்றில் உள்ள காலியிடத்தை மற்றொன்று அடைத்துக் கொள்கிறது. இல்லையெனில் அது சேர முடியாது. உதாரணமாக 5 யூனிட் பருமணுள்ள ஹைட்ரஜனும் 5 யூனிட் பருமணுள்ள ஆக்ஸிஜனும் இணையும் பொழுது இரண்டும் சேர்ந்த கூட்டு 5 யூனிட் பருமன்தான் வரும். இதனை விளங்கிக் கொள்ள, சுத்தமான உப்பு ஒரு லிட்டர், தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். உப்பு முழுவதும் தண்ணீரில் கரைந்த பிறகு பார்த்தால் கலவை இரண்டு லிட்டர் ஆகாது. ஒரு லிட்டர் தான் இருக்கும். இங்கு என்னவாயிற்று என்றால் (There is space between the Two) உப்பில் அமைந்த விண்களுக்கிடையேயுள்ள வெளியை (Space) தண்ணீரில் உள்ள வெளியை உப்புத் துகள்களும் ஒரு கோர்வையாக இணைந்து அடைத்து ஒன்றில் ஒன்றாகி விடுகிறது.

இதே போன்ற ஒரு கோர்வை, ஒரு தொடர்ச்சி ஹைட்ரஜனிலும் (H2) ஆக்ஸிஜனிலும் (O) ஏற்படும்பொழுது தான் அது தண்ணீர் (H2O) ஆகிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக