முன்னாளில் ஒவ்வொரு தொழிலின் பெயரைக் கொண்டே அத்தொழில் புரிகின்ற மக்களை அழைத்து வந்த பழக்கம் ஏற்பட்டது. இயந்திர விஞ்ஞான சாதனங்கள் பெருகியுள்ள இக்காலத்தில், எந்தத் தொழிலையும் எவரும் செய்யலாம் என்ற முறையில், தொழிலின் பெயரால் அழைத்த ஜாதிகள் ஒழிந்து போயின.
ஆனால், பழக்கம் வழக்கம் பண்பாடு கலாச்சாரம் என்ற முறைகளால்தான் ஜாதிகள் நிலைத்தும் நீடித்தும் வருகின்றன.
உணர்ச்சி, உள்ளம் என்ற இருவகையுமே பண்பாடுகளில் இணைந்து பழக்கத்தால் பலம் பெற்றிருப்பதால், இவற்றை உடனேயே பலாத்கார முறையிலே ஒழித்துவிட முடியாது. அப்படி முயல்வதும் தவறே.
சுகாதாரம், பொருளாதாரம், மனோதத்துவம் என்ற மூன்றையும் இணைத்து, தனிமனிதன் வாழ்விலும் சமுதாய வாழ்விலும் நலமளிக்கின்ற ஓர் உயர்ந்த உலகப் பொதுவான பண்பாட்டை கல்வி முறையாக உருவாக்கி, குழந்தைப் பருவத்திலேயே பழக்கத்தில் வரச் செய்ய வேண்டும். உணவு, உடை, ஞாபகப் பயிற்சி, ஒழுக்கப் பழக்கங்கள் இவற்றிலே குழந்தைகள் ஒன்றுபட்டு வளர்ந்தால், ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாதி என்ற வார்த்தை வழக்கற்றே போய்விடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக