விஞ்ஞானிகளெல்லாம் - அணுக்கள் கூடித்தான் எல்லாத் தோற்றங்கள் எல்லா இயக்கங்களும் என்று கண்டுபிடித்து விட்டார்கள். "ஓர் அணுவையாகிலும் உற்பத்தி செய்ய முடியுமா?" இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் திருவிளையாடல்களையும் அனுபவிப்பது யார் என்றால் மனிதன் தான். மனித மனதைத் தவிர வேறொன்றுமில்லை. இறைவனை நினைக்க வேண்டும் என்றால் மனித மனம் தான் நினைக்கிறது. ஆடுகளோ, மாடுகளோ ...மற்ற விலங்கினங்களோ இறைவனைப் பற்றி நினைப்பதே இல்லை. ஏனென்றால் அவையெல்லாம் புலன்களால் எல்லை கட்டிய இடத்தில் தான் இருக்கின்றன. மனிதன் ஒருவன்தான் புலன்களைத் தாண்டி சிந்தனையில் உயர்ந்து பிரபஞ்சத்தையும் உணர்ந்து பிரபஞ்சத்திற்கும் அப்பாலாக உள்ள இறைநிலையையும் உணரக்கூடியவன். மனித மனம் அத்தகைய பேராற்றல் பெற்றது. சிந்தித்து உணரக்கூடிய மனித மனம், சிந்திக்காமல் இருக்கிற வரைக்கும் காட்டாற்று வெள்ளம்போல் கட்டுக்கடங்காமல் போன வழியே போய்க் கொண்டுதான் இருக்கும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக