"Perspicacity" என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் "நுண்மாண் நுழைபுலன்" என்பதாகும். நுண்ணிய என்றால் கூர்மையான, மாண் என்றால் மாண்புடைய, அதாவது விரிந்த சிந்தனையால் உயர்ந்த ஒரு பெருந்...தன்மை, நுழைபுலன் என்பது ஊடுருவியறியும் திறன் (Penetrative Knowledge). இதுதான் நுண்மாண் நுழைபுலன் என்பதற்கான முழு விளக்கம். வள்ளுவரும் ஒரு குறளிலே இதனைக் குறிப்பிடுகின்றார்.
"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று"
"Taking right and quick decision with quick insight of the mind, linking past experiences, present circumstances & future results. என்ற ஆழ்ந்ததோர் கருத்துடைய நுண்ணறிவு நிலை நுண்மாண் நுழைபுலம்" முக்காலத்தையும் இணைத்துப் பழைய கால அனுபவத்தையும், தற்காலச் சூழ்நிலைகளையும், எதிகால விளைவுகளையும் ஒருங்கிணைத்து நோக்கி ஒவ்வொரு செயலையும் இப்படிச் செய்யலாம் என்று சரியாகவும், விரைவாகவும் தேர்ந்தெடுக்கக் கூடிய ஓர் அறிவு இருக்கிறதே அதைத்தான் "நுண்மாண் நுழைபுலம்" Perspicacity என்று சொல்வார்கள். அந்த நுண்மாண் நுழைபுலம் என்பதிலே விரிந்த அறிவு உண்டாகி விடுகின்றது. மூன்று காலத்தையும் இணைக்கிறது அறிவு - பழைய அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவுகள் என்ற அளவிலே அதே நேரத்திலே இயற்கையின் விதியான செயல்-விளைவுத் தத்துவமும் கருத்தில் உள்ளது. மனிதனுடைய தன்மை, அவனுடைய தேவை - இவற்றை இணைத்துச் செயல்படுகிறபோது, சரியான முறையிலே, சரியான வழியிலே, குறுகிய நேரத்திலே, சலனமில்லாமல், குழப்பமில்லாமல் தேர்ந்தெடுக்கக் கூடிய மனப்பக்குவத்தைத் தான் நுண்மாண் நுழைபுலன் (Perspicacity) என்று சொல்லுகிறோம்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"ஞானம் பெற தவம்; தவத்தைப் பெற குரு".
.
"விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும்
உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை".
.
"அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி
அவரவர் எண்ணங்களே"
.
"குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்."
.
.- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக