நீண்ட காலமாக மனித இனம் உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 1] உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத தேவைகளையும், வசதிகளையும் உற்பத்தி செய்து அவற்றை அளவு முறை அறிந்து அனுபவித்தல், 2] இய...ற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுதல், 3] வேற்றுயிர்ப் பகையிலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் ஆகிய மூன்று வகையிலும் தங்கள் அறிவையும் உடல் உழைப்பையும் பயன்படுத்த வேண்டியது வாழ்க்கையின் அவசியமாகும். வாழ்க்கையின் அவசியங்களை உணர்ந்து முயற்சித்து மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். ஆதிகாலம் முதற்கொண்டு இக்காலம் வரையில் மனித இனம் எடுத்த வாழ்க்கை வள முயற்சிகள், கல்வி, ஒழுக்கம், பண்பாடு, தொழில் திறன் இவையாக எல்லா நாடுகளிலும் தொடர்ந்து செயல் முறையில் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் நிலவிய வெப்ப தட்பம், நிலவளம், அறிஞர்கள் போதனை இவற்றால் சில பல பழக்க வழக்கங்கள் ஆங்காங்கு உருவாயின. அவை மற்றவர்களுக்கும் மற்ற நாட்டுக்கும் பரவி வாழ்க்கை முறையில் பழக்கமாகி விட்டன. பல காலங்களைக் கடந்து இன்று மனிதகுலம் விஞ்ஞான யுகத்திற்கு வந்திருக்கிறது. எந்தெந்த காலத்தோ, எந்தெந்த இடத்திலோ அவ்வப்போதைய பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போது எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்கும் வாழ்வுக்கு ஒத்ததாக இருக்க முடியாது. இக்கால அறிஞர்கள் கூடிச் சிந்தனை செய்து மனித இனப் பண்பாட்டினைப் புதுப்பிக்கவேண்டியது அவசியம்.
புதிய பண்பாடு
புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய் ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்
அதிகசுமை ஏதுமில்லை 1] அவரவர் தம் அறிவின்
ஆற்றலினால் உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2] மதிபிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா
மாநெறியும், 3] உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4] பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச் சுதந்திரத்தை
போற்றிக் காத்தும், 5] பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக