தொன்று தொட்டு உலகமுழுவதும் பரவி வாழ்ந்து வரும் மனித இனத்தில் இன்று வரை பழக்கத்திற்கு வந்துள்ள மருத்துவ முறைகள் மூன்று ஆகும்.
இரத்தத்தையும், சதைகளையும், இரசாயன முறையில் சீரமைக்கும் முறை ஒன்று. இந்த முறையில் அலோபதி, யுனானி, ஆயுர்வேதம், உடற்பயிற்சி, உணவு மாற்றம் இவை அடங்கும்.
உயிர்த்துகள்களைப் பெருக்கி அதன் மூலம் சீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி நோய் போக்கும் முறை இரண்டாவது முறையாகும். இரசம், கந்தகம், பாஷாணம் வகைகளைக் கொண்டு செய்யப்படும் சித்த மருத்துவமும் அது போலாகிய முறைகளும் இதில் அடங்கும்.
சீவகாந்தத்தின் தன்மையை மாற்றும் காந்த அலைகளையூட்டி அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை மூன்றாவதாகும். ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும், இவையொத்தவையும் இதிலடங்கும்.
ஒவ்வொரு மருத்துவத்திலும் மற்ற மருத்துவங்களின் பயனும் மறைமுகமாக ஓரளவில் செயலாகும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக