Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
January - 21 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
January - 21 வாழ்க்கை மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஆகஸ்ட், 2013

அறிஞர்களின் அனுபவங்கள்

அறிஞர்கள், கவிஞர்கள், தொழில் நிபுணர்கள், இவர்களின் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் எண்ணிறந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன.
...
உலக மக்களுக்கு அவர்களது அனுபவங்களை பேச்சாலும், எழுத்தாலும், கவியாலும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்கள். அவர்கள் அந்தத் துறையில் அந்தந்த நிகழ்ச்சியில் அந்தந்தச் சமயத்தில் தாங்கள் அடைந்த இன்பங்களையும், துன்பங்களையும் உலக மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவர்களின் இத்தகைய முயற்சியால் அவர்கள் அடைந்த இன்பத்தை ஒருவர் அறிந்து கொண்டது முதல் அதை நினைக்குந்தோறும் ஓரளவு இன்பமும், அதே இன்பத்தைத் தானும் வாழ்வில் பெற வேண்டும் என்ற முயற்சியும், அதைத் தொடர்ந்து, முயற்சிக்கேற்ற பயனையும் அடைய முடிகிறது.

அவர்கள் அடைத்த துன்பத்தை ஒருவர் அறிந்து கொள்வதனால் அது போன்ற துன்பம் அறிந்து கொள்வதனால் அது போன்ற துன்பம் வாழ்வில் தனக்கு ஏற்படாமல் விழிப்பாக இருப்பதற்கும் அப்படி ஏதேனும் சூழ்நிலை சந்தர்ப்ப நிர்பந்தங்களினால் ஏற்பட்டுவிட்டாலும் அதைச் சமாளிக்கவும், குறைத்துக் கொள்ளவும் ஏற்ற அளவில் திறமை, தகைமை, பொறுமை இவைகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.

ஆகவே அறிஞர்களின், அனுபவசாலிகளின் - கருத்துக்களும், சரித்திரங்களும் அவற்றைக் கற்கும் எல்லோருக்கும் பலவிதத்திலும் நற்பயனையே தருகின்றன.


                                                                                                             -வேதாத்திரி மகரிஷி.