உயிராற்றலானது எங்கும் நிறைந்ததாக இருந்ததாலும் அது ஒரு இடத்தில் தேங்கியும் அந்த இடத்தை விட்டு விலகாமலும் இருக்க ஒரு மூன்று சுற்று எண்ணத்தால் கொடுத்து மேற்சொன்ன பயன்களை அடைவது பலர் அனுபவத்தில் கண்டு கையாளும் வழக்கமாகும். இதற்கு அருட்காப்பு என்று பெயர்.
எந்த சங்கற்பத்தை சேர்த்து காப்பைக் கொடுக்கிறோமோ அதற்கேற்ற பயன்விளையும். நாம் எடுத்த காரியத்தில் முயற்சியையும், வெற்றியையும் அது கூட்டுவிக்கும். இதனால் உயிர் ஆற்றலின் விரயம் தடுக்கப்படுகிறது. சக்தி பெருகிக் கொண்டே போகிறது. நாம் எடுத்துக்கொண்டுள்ள நோக்கத்தின் பயன் முழுமையாகிக் கிடைக்கிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக