Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நாம் வாழும் பூமிக்கருகில் உள்ள சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களுக்கும் சூரியன் மையமாக உள்ளது. மற்ற கோள்களெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கோள்களின் பருமனா? கோள்களின் சுழல் வேகமா?*

பதில்:* சூரியனுடைய தற்சுழல் வேகம் அதில் அடங்கிய அணுக்களின் கூட்டுத் தொகையைப் பொறுத்தது. அது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வருவது, சூரியனுடைய சுழல் வேகத்தில் தோன்றும் அலை எவ்வளவு தூரம் சுழன்று கொண்டிருக்கிறதோ அந்த அலையில் மிதக்கிற கோள்கள் எல்லாம் அதே வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் கோள்களின் பருமனுக்குத் தக்கவாறு களத்தில் பின் தங்கிச் செல்லும்.


சூரியன் 25 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அந்த சுழல் வேகத்தில் வரக்கூடிய அலையானது ஆயிரம் கோடி மைலில் வரை விரிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலையில் எந்தெந்தக் கோள்கள் இருந்தாலும் அது அப்படியே ரெங்கராட்டினத்தில் ஆள் வைத்து சுற்றிக் கொண்டு போவது போல சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் அந்தந்த கிரகத்தின் எடைக்கும், தூரத்திற்கும் தகுந்தவாறுதான் சுற்றுவேகம் வித்தியாசம் ஏற்படும்.

வாழ்க வளமுடன்!!


*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 28 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, பிரபஞ்சம் என்பது ஒன்றுதான் இருக்க முடியுமா?*

 


பதில்:* ஆம். ஒன்றுதான் இருக்க முடியும். இரண்டு இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிருந்தால், இரண்டையும் சேர்த்து அழுத்திக் கொண்டிருக்கிற சுத்தவெளி எனும் பேராற்றல் சூழ்ந்தழுத்தி இறுக்கி ஒன்றாக்கி விடும். பின் ஒன்றுக்குள் ஒன்றாய் நின்று சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

சனி, 27 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றது? அதற்கு ஏன் சுழற்சி ஏற்படுவதில்லை?

 


பதில்:* இறைவெளியில் தோன்றும் விண்ணின் சுழற்சியில் பஞ்ச பூதக் கூட்டில் அண்டங்கள் உருவாகிறது. மேலும் காலம் செல்லச் செல்ல தற்சுழற்சியால் அண்டத்தின் மையப் பகுதியில் திணிவு அதிகமாகி, அணுச் சிதைவு ஏற்பட்டு வெப்பக் குழம்பாகி, நீர் சுண்டி, பலகோடி ஆண்டுகளுக்குப் பின் நெருப்புக் கோளமாகி விடும். இத்தகைய அண்டங்கள் தான் சூரியன்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தொலைவிலுள்ள சூரியன்களை நட்சத்திரங்கள் என்கிறோம்.

நட்சத்திரங்களும் சுழன்று கொண்டுதானிருக்கின்றன. வெகு தொலைவுக்கப்பால் இருப்பதால் நமக்கு சுழற்சி தெரிவதில்லை. பிரபஞ்சத்தில் எந்தப் பொருளாக இருந்தாலும் அது அணுக்களின் கூட்டுத்தான். ஒவ்வொரு அணுவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பதால் அதனால் ஆன ஒட்டு மொத்தத்திலும் அந்த சுழற்சி இருக்கும். நாமும் பூமியோடு சேர்ந்து சுழன்று கொண்டு தான் இருக்கிறோம்.

வாழ்க வளமுடன்!!

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

ஞாயிறு, 21 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, ராமா என்ற பெயரை வாயால் சொன்னால் மன அமைதி கிடைக்கும், நமக்கும் நமது குடும்பத்திற்கும் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்களே? உண்மையா?*

பதில்:* இதே போன்ற கேள்வியை அமெரிக்காவில் மன இயல் தத்துவ பேராசிரியர்களிடம் கேட்டார்கள். இந்தியாவில் ராமா, கிருஷ்ணா என்று சொல்லியே பக்தி மார்க்கத்தில் மக்கள் அதிக ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்களே, எவ்வாறு என்று.

அவர்கள் பரிசோதனைக்காக நான்கு அன்பர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் Heart Beat, Pulse, B.P. அனைத்தையும் குறித்துக் கொண்டார்கள். மேலும், “கொக்கோ கோலா” என்ற வார்த்தையைக் கொடுத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து உச்சரிக்க வைத்தார்கள். அதன் பிறகு அவர்களை பரிசோதிக்கும் பொழுது அவர்களுடைய Heart Beat, Pulse, B.P. அனைத்தும் குறைந்து இருந்தது. அவ்வாறு வார்த்தையை உச்சரித்து வரும்பொழுது பல நல்ல விளைவுகள் தோன்றியதாகக் கூறினார்கள்.


உச்சரிக்கும் வார்த்தையில் மக்களுக்கு இறை நம்பிக்கையும் சேர்ந்துள்ள போது பயன் அதிகமாகவே இருக்கும்.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

செவ்வாய், 16 மார்ச், 2021

சுவாமிஜி, ஒரு தனிமம் மற்றொரு தனிமமாக எவ்வாறு மாற்றம் பெறும் என்பதை விளக்க வேண்டுகிறேன்


பதில்:* ஒரு தனிமத்தில் நுண்விண் துகள்கள் சேர்ந்து இயங்குகிறது என்றால் அவை ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு விலகாமல் ஒரே தனிமமாக பரிமளிக்க (Maintain) அவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட சுழல் விரைவு இருக்க வேண்டும். அந்த தனிமமானது தன்னியக்கத்தால் தன் நிலையிலிருந்து அதிக விரைவு பெற்றாலும் அல்லது சூழ்நிலையின் ஆதிக்கத்தால் (Activation) விரைவு பெற்றாலும் அந்த சுழற்சிக்கு தக்கவாறு தன்னுடைய நுண்துகளை இழந்து மாற்றம் பெற நேரிடும். ஒரு தனிமம் காலத்தால் அதே தனிமமாக நிலைத்து நிற்க முடியாது.

இரண்டு விண் துகள்களின் சேர்க்கையை ஹைட்ரஜன் என்று வைத்திருக்கிறோம். இதே போன்ற ஹைட்ரஜன் கூட்டு மேலும் சேரச்சேர ஒரே குழுவாக மாறுகிறது. அது குழுவாக இருந்தாலும் இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் அது சுழன்று கொண்டே தான் இருக்கும், அச்சுழற்சி இயக்கத்தால் கனமான துகள்கள் மையத்திலும் லேசான துகள்கள் அதன் ஓரப்பகுதியிலும் (Periphery) இடம் எடுத்துக் கொள்ளும். இவ்வாறு இயங்கி, ஒத்து இணையும் பொழுது இரண்டு நான்காகவும், நான்கு எட்டாகவும், எட்டு பதினாறாகவும் பொருத்திக் கொள்கிறது. அவ்வாறு 16 துகள்கள் சேர்ந்தியங்கும் பொழுது அதற்கு ஆக்ஸிஜன் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுழன்று கொண்டே வரும் பொழுது இடத்திற்கு தகுந்தவாறு ஒன்று மற்றொன்றோடு பொருந்தி வேறு தனிமமாக மாறிக் கொண்டே வருகிறது.

இப்பொழுது இரு விண்துகள்களைக் கொண்ட ஹைட்ரஜன் 16 விண் துகள்களைக் கொண்ட ஆக்ஸிஜனோடு சேர்ந்து சுழலும் பொழுது சுழற்சி வேகம் குறைந்த கனமான ஆக்ஸிஜன் மையத்திற்கு வரும். இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் (Ratio) வரும் பொழுது  ஒன்றில் உள்ள காலியிடத்தை மற்றொன்று அடைத்துக் கொள்கிறது. இல்லையெனில் அது சேர முடியாது. உதாரணமாக 5 யூனிட் பருமணுள்ள ஹைட்ரஜனும் 5 யூனிட் பருமணுள்ள ஆக்ஸிஜனும் இணையும் பொழுது இரண்டும் சேர்ந்த கூட்டு 5 யூனிட் பருமன்தான் வரும். இதனை விளங்கிக் கொள்ள, சுத்தமான உப்பு ஒரு லிட்டர், தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலக்க வேண்டும். உப்பு முழுவதும் தண்ணீரில் கரைந்த பிறகு பார்த்தால் கலவை இரண்டு லிட்டர் ஆகாது. ஒரு லிட்டர் தான் இருக்கும். இங்கு என்னவாயிற்று என்றால் (There is space between the Two) உப்பில் அமைந்த விண்களுக்கிடையேயுள்ள வெளியை (Space) தண்ணீரில் உள்ள வெளியை உப்புத் துகள்களும் ஒரு கோர்வையாக இணைந்து அடைத்து ஒன்றில் ஒன்றாகி விடுகிறது.

இதே போன்ற ஒரு கோர்வை, ஒரு தொடர்ச்சி ஹைட்ரஜனிலும் (H2) ஆக்ஸிஜனிலும் (O) ஏற்படும்பொழுது தான் அது தண்ணீர் (H2O) ஆகிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 15 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, தாங்கள் விளக்கும் போது இறைநிலை விளக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் பிற ஆன்மீக நூல்களைப் படித்து எளிதாக விளங்கிக் கொள்ள முடியவில்லையே ஏன்?*



பதில்:* இறைநிலை பற்றிய விளக்கம் மிகவும் எளிதானதே. எல்லோராலும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு எளிதாக உள்ளதை ஏன் இவ்வளவு சிக்கலாக்கினார்கள் என்று எண்ணிய போது என் உள்ளத்தில் எழுந்த ஒரு காட்சி இது. ஒரு நூல்கண்டை குழந்தையிடம் கொடுத்து விட்டு தாய் சென்று விடுகிறார். குழந்தை அதை எடுத்து கலைத்துப் போட்டு சிக்கலாக்கி விடுகிறது. பிறகு தாய்க்கு எது ஆரம்பம் என்று தெரியாமல் வெட்டி வெட்டி போட்டு விடுகிறாள். அதே போன்று தான் இறைநிலை விளக்கம் எல்லாம் துண்டு துண்டாகப் போய்விட்டது. பின்னால் வந்தவர்கள் அதை ஒன்றுபடுத்திப் பார்க்க இயலாமையே இறைநிலை பற்றிய விளக்கம் சிக்கலாகக் காரணமாகிறது.


வாழ்க வளமுடன்!!


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 5 மார்ச், 2021

கேள்வி: சுவாமிஜி, இன்பத்தை உணர்வது எது, உடலா, உயிரா, மனமா?


*

பதில்:* உயிர் தான் மனம் என்ற மலர்ச்சியில் இன்பத்தை உணர்கிறது. அதற்குப் புலன்கள் உதவியாக இருக்கின்றன. புலன்களின் வழியாக ஏற்படும் உயிரின் காந்த தன்மாற்றமே இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணமாக அமைகின்றன. எல்லா உயிரினங்களிலுமே பெருக்கம், இருப்பு மற்றும் செலவு என்ற வகையிலே உயிர்ச் சக்தி இயங்குகிறது.

உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி, அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாகச் செலவாகும். அந்தச் செலவு, உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது. உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது. உடலைக் கருவியாகக் கொண்டு புலன்வழியே தன் அலைகளால் உயிரே செலவாகி இன்ப, துன்பத்தை உணர்கிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

திங்கள், 27 ஜனவரி, 2020

"சுவாமிஜி, இப்பொழுது உலகமெங்கும் பரவிவரும் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க நாம் நமது தவத்தில் அமைதி அலைகளைப் பரப்பி வரலாமா?"


.
மகரிஷியின் பதில் :-
"நாம் அவ்வாறு தானே செய்து வருகிறோம், தற்பொழுது வல்லரசு நாடுகளுக்கெல்லாம் நல்லெண்ணம் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பழைய மரபு வழிவந்த விலங்கினப் பதிவுகளின் காரணமாக உள்ள முனைப்பும், 'தான்' என்ற அதிகாரமும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன.
.
எல்லா மக்களும் பிறந்து வாழ்ந்து மடியும் இடமான உலகம் ஒன்றுதான். நீர்வளம் அளிக்கும் கலக்கும் கடல் ஒன்றுதான். மூச்சுவிடும் காற்று ஒன்றுதான். வெளிச்சம் மற்றும் ஆற்றல்களை அளிக்கும் சூரியனும் ஒன்றுதான். இந்த உண்மையை அனைவரும் கல்வி கற்கும் காலத்திலேயே அறிந்து கொள்ள வேண்டும். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் சண்டை என்பது நாடுகளுக்கோ, மனிதனுக்கோ தேவையில்லை. அண்டை நாட்டான் ஆயுதம் இராணுவமெல்லாம் வைத்துள்ளானே, அவன் நம்மைத் தாக்கினால் என்ன செய்வது என்பதற்காக நாமும் வைத்துக் கொண்டோம். இதற்குப்பின் ஒரு கால கட்டம் வரும்போது அனைத்து நாடுகளும் ஒன்று கூடி மனித குலத்தை அழிக்கும் ஆயுதங்களும் அதற்கு ஆகும் செலவும் இனி தேவையில்லை, ஐ.நா.சபையின் மூலமாக அனைத்து நாடுகளின் பாதுகாப்பை எல்லோரும் ஏற்றுக் கொள்வோம் என்ற முடிவை 5 நிமிடத்தில் எடுத்து விடலாம். இம்முடிவு காலத்தால் வரும்.
.
உலகத்தில் ராணுவத்திற்கு ஒரு ஆண்டு செலவாகும் தொகையில் உலகத்தை செழிக்கச் செய்யலாம். மனிதன் வாழ்வின் வளங்களைக் கூட்டாகப் பெருக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் பறித்துண்ணாது உதவி வாழவும் செய்யலாம். சமுதாயத்தில் சட்டங்களால் போட்ட எல்லைகள்தான் நாட்டு எல்லைகள். ஒருவரை ஒருவர் அழிப்பதற்காகவோ, ஒரு குழுவை பிற குழு அழிப்பதற்காகவோ எல்லைக் கோடுகள் இருக்கக்கூடாது.
.
ஆனால் ஆயுதம் வாங்கும் விற்கும் இடத்தில் கிடைக்கும் வருமானத்தை எந்த அரசியல்வாதியும் விட்டுக் கொடுக்கமாட்டார். இது மனித குல வாழ்வில் மரபு வழியே வந்து நீடிக்கும் ஒரு வலுப்பெற்ற மனோவியாதியாகி விட்டது.
.
நாம் தொடர்ந்து தவத்திலும் (Simplified Kundalini Yoga - SKY), மவுனத்திலும் (silence) இருந்து அமைதியலைகளைப் பரப்பி வருவோம். காலத்தால் மனித உள்ளங்கள் கனிந்து திருந்தும் என்பது உறுதி."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

செவ்வாய், 31 டிசம்பர், 2019

❓ *கேள்வி: சுவாமிஜி! இன்றைய அரசியல், பொருளாதார நிலைகளில் உள்ள சீர்கேடுகள் எவ்வாறு நீங்கும்?*


✅ *பதில்:* உழைக்காமல் இருக்கக் கூடாது என்று கடமைகளை வலியுறுத்தவும், கடமையின் மேன்மை பற்றி உணர்த்தவும் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் தான் பிற்காலத்தில் பொருளாதாரம் என்ற துறையாகியது. பொருட்கள் ஈட்டல், காத்தல், உய்த்தல், பிறர்க்களித்தல் என்ற கூட்டுறவை உணர்த்த வகுக்கப்பட்ட சமுதாய நெறிமுறைகள் அரசியல்துறையாகியது. கடமைகளைச் செய்வதிலும் பொருள்துறையிலும் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்தாமல் இருக்க உணர்த்திய நெறிமுறைகள் மதங்கள் என்றாயிற்று. என்றாலும் இப்பொறுப்பில் உள்ள மனிதர்கள் பொருள், புகழ், செல்வாக்கு புலனின்பத்திற்கு அடிமையாகி இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பேராசை கொண்டு வாழும் நிலையால் தான் இத்தனை சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மூன்று துறைகளிலும் பொறுப்பிலுள்ளவர்களுடன் சமுதாய நலத்தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடி, தன்னல நோக்கமின்றி விஞ்ஞான அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டுத்தான் இச்சீர்கேடுகளைப் போக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்!!
*அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*

வெள்ளி, 20 டிசம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்?


✅ பதில்: நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மன நலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

ஞாயிறு, 10 நவம்பர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! முக்கியமான காரியங்களைத் தொடங்கும்போது வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்ற பஞ்ச அங்கங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்களே இது ஏன்?


✅ பதில்: மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாக முடிக்க இயற்கையின் துணையை நாடுதல் என்பது பழக்கத்திலிருந்து வருகிறது. தமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம், என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். இந்த விஞ்ஞான காலத்தில் இவ்வளவையும் பொருத்திப் பார்க்கவே முடியாது.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வியாழன், 24 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! ஒருவர் சமுதாயத்தை முன்னேற்றுவதற்காகப் பாடுபடுகிறார். அதற்காகத் தனி ஆசிரமத்தில் தங்கி அதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவருடைய இறப்பிற்குப் பின் அவருடைய உயிரின் நிலை என்ன?


✅ பதில்: எந்தச் சேவையைச் செய்தாலும் ஒருவர் எல்லை கட்டிய நிலையிலேயே தன் மனதைப் பழக்கியிருந்தால், உயிர்விட்ட பிறகும் அது இந்த உலகத்தையொட்டியே (Earth bound) இருக்கும். அது வாழும் மனிதரோடு இணைந்து செயல்படும்.
பூவுலகத்தின் புவியீர்ப்பு களத்தைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால் மனம் பரந்து விரிந்து பிரபஞ்ச நிலையிலிருக்கப் பழகியிருக்க வேண்டும். உயிரிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற முக்களங்கங்களும் நீங்கும் வரை அது இறைநிலையை அடைய முடியாது.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

புதன், 16 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! பகவதி கோவில்களில் பேய் பிடித்தவர்களை அடக்குகிறார்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகும்?


✅ பதில்: அத்தகைய கோவில்களில் மகான் ஒருவருடைய உயிர் அடக்கமாகி இருக்கலாம் அல்லது அங்கே ஒர் எந்திரத்தை நிறுவி, அதற்கு மந்திரங்களைச் செபித்து, அங்கு ஓர் ஆற்றல் களத்தை (Energy Field) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள்.
அந்த ஆற்றல் களத்திற்குச் சென்றால் இணைந்த ஆவிக்கு ஒரு வேகமான உணர்ச்சி மிக்க இயக்கம் உண்டாகும். தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சொந்த ஆன்மா மயக்கநிலையில் (Trance State) இருக்கும். அந்தச் சமயம் இணைந்த ஆவி தானாகவே ஆடி ஆடி வெளியேறக் கூடிய அளவுக்கு வந்துவிடலாம்.
ஆனால், அது வெளியேறுவது என்பது இல்லை. தான் அடைக்கலமாக எந்த உயிருடன் சேர்ந்திருக்கிறதோ அந்த உயிருடனேயே கலந்து ஒன்றுபட்டுவிடும். இதுவரை பொருந்தாது தொல்லைகள் செய்து வந்த ஆவி இப்பொழுது அமைதி பெற்று விடும்.
சில பூசாரிகள் அவற்றிற்கு ஒவ்வொரு அம்மன் பெயர்களை வைத்து , அந்த அம்மன் மலையேறிவிட்டது என்பார்கள். பின் நன்மையே வரும்.
எவ்வாறென்றால், நம்மிடமுள்ள அந்த உயிரை வணங்குந்தோறும் நன்மையே அளிக்கும். எதிர்க்கும்தோறும் தீமையே தரும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 2 அக்டோபர், 2019

❓ கேள்வி: சுவாமிஜி! முற்காலப் பெண்கள் குடும்பத்தில் பணம் தனியாகச் சேமிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. ஆனால் தற்காலப் பெண்கள் தனியாகச் சேமிக்கிறார்களே ஏன்?


✅ பதில்: வரவுக்கு அதிகமாகச் செலவு செய்யும் குடும்பத்தில் குடும்பத்தலைவன் பொறுப்பில்லாமல் செலவு செய்து கொண்டே வந்தால் “பின்பு குழந்தைகளின் நலன், படிப்பு, பிற்கால வாழ்க்கை என்னாவது என்பதை மனதில் கொண்டு, நமக்குப் பொருள் வேண்டுமே” என்ற அக்கறையில் பெண்களுக்குப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி வருகிறது.
அது தவறில்லை.
அந்தப் பொறுப்பு கணவனுக்கும் இருந்தால் இருவரும் சேர்ந்தே சேமிக்கலாம். இருவரும் தனித்தனியாக ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சேமிப்பதும், செலவு செய்வதும் குடும்ப அமைதியைக் கெடுக்கும்.
வாழ்க வளமுடன்!

வியாழன், 5 ஜூலை, 2018

❓ கேள்வி: சுவாமிஜி! ஆன்மீகத்தில் எவ்வுயிர்களுக்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது. பகைவனையும் நேசிக்க வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட நியதியாக இருக்கும் பொழுது, அர்ச்சுனனிடம் உன் பகைவர்களை கொல்வதில் தவறில்லை என்கிறாரே கீதையில் கிருஷ்ணர், இது நியாயமானதா?




 ✅ பதில்: பொதுவாக சண்டைக்குப் போகும் சிப்பாய்க்கு கூறும் அறிவுரை தான் இது. ஆரம்ப காலத்தில் மனிதன் ஒருவனை ஒருவன் கொன்று குவித்து வாழ்வது தான் நடந்தது. அந்தக் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் மகாபாரதம்.

 சண்டையே இல்லாது வாழ்வது எப்படி என்று ஆராய்ந்து, மனித வாழ்வின் நோக்கத்தை விளக்க வந்த நூல்கள் மிக அரிது. திருக்குறள் போன்று மனித வாழ்வை முழுவதும் அறிந்து தெரிவிக்கும் மற்றொரு நூல் இன்னும் வரவில்லை.

 மனிதன் பரிணாம வளர்ச்சியில் பல சீவ இனங்களைக் கடந்து தான் வந்திருக்கிறான். இறுதியில் குரங்கு மனிதனாக இருந்து, அதன்பின் மலைவாழ் மனிதனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு உடுக்க உடை, வசிக்க வீடு மற்றும் அறநெறி என்ற ஒன்றும் இருக்கவில்லை. இன்று கூட ஆதிகாலத்து மனிதன் எப்படி வாழ்ந்தானோ அது போல் ஆப்பிரிக்காவிலும் மலேசியக் காடுகளிலும் வாழ்கின்றார்கள். அந்நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, அன்பு, கருணை ஏதாகிலும் இருக்குமா? உருவத்தில் மனிதனாக இருந்தாலும் விலங்கினம் போன்று தான் வாழ்ந்து வருகிறான். இன்னும் விலங்கினப் பதிவும் செயலும் அவனுக்கு அப்படியே உள்ளது. காலத்தால் படிப்படியாக அறிவு உயர்ந்து கொண்டே வருகிறது. இருந்த போதும் கருமையத்தில் உள்ள விலங்கினப்பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும் போது சீறிக் கொண்டு வந்து செயலாகிறது. இவை மனிதனுக்கு விலங்கின வித்துத் தொடராக வந்த பதிவுகளாகும்.

 மனித குலத்திற்கு விலங்கினத்திலிருந்து தவிர்க்க முடியாத மூன்று பதிவுகள் வந்திருக்கிறது. விலங்கினங்களுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது. தன் வலுவால் கொல்லக் கூடியதும், தன் வாய்க்குள் தள்ளக் கூடியதுமான ஏதோ ஒரு சீவனைப் பிடித்து உண்கிறது. அங்கு மூன்று குற்றங்கள் நிகழ்கின்றன.

 ஒன்று கொலை; இரண்டு அதன் உடலைப் பறித்துண்ணல் என்ற திருட்டு; மூன்று அது வாழும் சுதந்திரத்தை, உரிமையைத் தடுத்தலாகும். விலங்கினத்தின் இந்த மூன்று குற்றங்கள் தான் வித்து பதிவாக வந்து ஆறறிவு பெற்ற மனிதனிடத்திலும் தொடர்கிறது.

 உலகெங்கும் உள்ள குற்ற விளக்கச் சட்டங்களை (Criminal Procedure Code) எடுத்து ஆராய்ந்தால் அனைத்தும் இந்த மூன்று குற்றங்களுக்குள் அடங்கி விடும். இதை மனிதன் தெரிந்து கொண்டால், “நான் விலங்கு இல்லை; ஆறறிவு பெற்ற மனிதனாக வந்திருக்கிறேன். வாழ்வின் நிறைவில் இறைநிலையை அடைவது எனது நோக்கமாகும். அது போன்று தான் எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளார்கள். அதனால் நான் எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டேன், என் பகைவர்களையும் நேசிப்பேன். இதுதான் மனிதப் பிறவி எடுத்த எனது பண்பு” என்று நினைத்தானானால் அந்த எண்ணமே அவனை உயர்த்தி விடும். மனிதனாக உள்ளவன் அப்போது தான் விலங்கினத்தை விட்டு மனிதனாகிறான். அதற்கு மேலான மனிதனாகி விட்ட பிறகு அவனுக்குள் உள்ள இறைநிலை பிரகாசிக்க ஆரம்பிக்கும் பொழுது தெய்வமாகிறான்.

 அங்கு பகைவர்களை மன்னிக்கவும், பிறகு நேசிக்கவும் தான் சொல்வான், கொல்லச் சொல்ல மாட்டான். பிறரைக் கொன்று வாழ்தல் நீதியெனில் பிறகு உலகில் மிஞ்சுபவர் யார்? இந்தக் கவியைக் கவனியுங்கள். 

“உலகம் என்ற மண் மீது அனைவருமே பிறந்தோம்
உயிர்காக்கும் காற்று ஒன்றே மூச்சு விடுவதற்கு
உலகெங்கும் ஒளிவீசும் சூரியனும் ஒன்றே
உள்ளகடல் ஒன்றே நீர் ஆவியாகிப் பொழிய
உலகில் உள்ளோர் இதில் ஒன்றும் செய்ததில்லை
ஒவ்வொருவரும் பிறந்து வாழ்ந்து செத்துப்போவார்
உலகில் ஒரு பகுதியினர் மற்றவரைக் கொன்று
உயிர் வாழ்தல் நீதியெனில் கொலைஞர்களே மிச்சம்”

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 2 ஜூலை, 2018

❓ கேள்வி: மகரிஷி அவர்களே! சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரங்கள் உள்ளன என்கிறார்களே, அதைத் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 ✅ பதில்: அட்சரம் என்றால் ஒலியைக் குறிக்கும் எழுத்து. அட்சரத்திற்கு அடிப்படை மௌனம். அதிலிருந்து “அ” என்று விரிந்தது முதல் அட்சரம் “அ” விலிருந்து இன்றைக்கு 31 அட்சரங்கள் தமிழில் உள்ளன. வடமொழியில் 47 அட்சரங்கள் இருக்கின்றன. அங்கும் மூன்று ஒலிகள் குறைவு. அதனால் அவர்கள் அராபியில் இருந்து அந்த ஒலியை எடுத்துக் கொண்டு அதுபோன்ற சில எழுத்துக்களைக் கண்டுபிடித்துச் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். அதையும் சேர்த்தால் 50 அட்சரங்கள் வந்துவிடும். இந்த 50 அட்சரங்களைக் கொண்டு எல்லா சப்தங்களையும் எழுதி விடலாம்.

 இந்த 50 ஒலிகளிலும்கூட சில ஜீவன்களின் சப்தத்தை எழுத முடியாது. (உ.ம்) பல்லி சப்தம் “த்ச”: பையன் மாடு ஓட்டுவது, குழந்தைகளை முத்தமிடும்போது வரும் சப்தம், இவையெல்லாம் காற்று வெளியிலிருந்து உள்ளே போகும் சப்தங்கள். அதனால் இவைகளை எழுத முடியாது. உள்ளேயிருந்து வெளிவரும் சப்தங்களைத்தான் எழுத முடியும். இந்த 50 அட்சரங்களுடன் “ஓம்” என்ற மௌன ஒலியும் சேர்த்து 51 அட்சரங்கள் ஆக்கியுள்ளார்கள்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

திங்கள், 23 அக்டோபர், 2017

கேள்வி: சுவாமிஜி! சித்தர்கள் துறவிகளா அல்லது இல்லறவாசிகளா?


✅ பதில்: இல்லற, துறவறம் என்பதன் பொருள் பற்றி முதலில் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லறம் கொண்டு பொருளீட்டி, காத்து, தானும் துய்த்து, பிறருக்கும் கொடுப்பது இல்லறம். இல்லறம் என்றால் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
பொருளீட்டிக் காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு இடம் வேண்டும். “திருமணம் செய்து கொண்டு இருவரும் வாழ்ந்தால்தான் இல்லறம்” என்பார்கள். அது தவறான கருத்து. பொருளீட்டிக் காத்து அளவுமுறையோடு துய்த்து, அறம் செய்தல் இல்லறமாகும்.
பொருளீட்டும் தொழிலை விட்டு அகத்தவத்தின் சாதனையால் பிரபஞ்ச ரகசியம் அறிந்து, உடல், உயிர், மனம், அறிவு, சீவகாந்தம் உணர்ந்து, அறநிலை தெளிந்து, அறிவுத்துறையில் முழுமை பெற்று, நேர்மை தவறாது ஒழுக்கவழி வாழும் அறிவை மக்களுக்குப் புகட்டி, அதன்மூலமாகத் தொண்டு செய்து வாழக்கூடியவர்கள் “துறவறம்” என்ற நிலையை உடையவர்கள்.
துறவறத்தான் என்றால் பொருளீட்டிக் காப்பது தவிர்த்து, அறிவுத்துறையிலுயர்ந்து தொண்டாற்றிக் கொண்டு இருப்பவன்.
ஆனால் சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டிலுமே இருந்தார்கள். தங்களுக்கு வேண்டிய பொருட்களை அவர்களே ஈட்டி, பிறருக்கும் உதவினார்கள். அதே போன்று அறிவுத்துறையிலும் மேன்மையடைந்து எல்லோருக்கும் அறிவுத்தொண்டாற்றினார்கள்.
அன்றும், இன்றும், என்றும் அவர்கள் தொண்டு எங்கும் ஏற்புடையதாயிருக்கின்றது. எனவே சித்தர்கள் இல்லறம், துறவறம் இரண்டுமிணைந்த நல்லற ஞானிகள் ஆவர்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

கேள்வி: சுவாமிஜி! சீவத்தோற்றம், மனத்தோற்றம் என்பதை விளக்க வேண்டுகிறேன்.



 ✅ பதில்: கெட்டிப்பொருள், நீர், காற்று, அழுத்தக் காற்று அல்லது வெப்பம் என்ற பௌதீகப் பொருட்களின் வரிசையில் ஐந்தாவது பூதமான விண் என்ற உயிர் புகுந்து உராய்ந்து ஓடும் பொழுது, அங்கு பரு உடலில் உள்ள செல்களே தடையாக உணரப்பெற்று, உயிர் அழுத்தம் உண்டாகி உணர்ச்சி நிலை பெற்றால் அது சீவத்தோற்றம் எனப்படும்.

 சீவனானது புலன்கள் மூலம் பொருள் தொடர்பு கொண்டு இன்பம், துன்பம் துய்க்கும்போது அது மனத் தோற்றம்.

 புலன்களைக் கடந்து மனதை மன அலை மீதே செலுத்தி அமைதி நிலை பெற்று, “நான் யார்”? என்று வினவி, ஆராய்ச்சி செய்யும் போது அறிவிற்கு ஏற்படும் விளக்கமே ஆன்மத் தோற்றம் ஆகும்.

வாழ்க வளமுடன்!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

புதன், 13 ஜூலை, 2016

சிற்றறிவு பேரறிவுடன் இணைந்து செயலாற்றப்படவேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.




மகரிஷி: புலன் இன்பத்தில் மட்டும் மனம் நிலைத்து இருக்கின்றபோது, மனம் அதில் எல்லை கட்டி உணர்ச்சி நிலையில்தான் இயங்கும். அதுதான் சிற்றறிவு; சிற்றின்பம் என்று சொல்வது.
பேரறிவு எனபது “நான் யார்” என்று தெரிந்து கொண்ட பிறகு வந்த அறிவு. எல்லாம் வல்ல இறைநிலையே இங்கு அறிவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல எல்லாப் பொருளிலேயும் அறிவாக இருப்பது அதுவே தான் என்றபோது மனம் விரிந்து அந்தப் பெருள்நிலையோடு, ஆதி நிலையோடு, பிடிப்புகொள்கிறது. அந்தப் பிடிப்பிலிருந்து பார்க்கிறபோது, எல்லாப் பொருளும் ஒரே இடத்திலிருந்துதான் உற்பத்தியாகி இயங்கிக் கொண்டிருக்கின்றன. எந்த இடத்திலும் உணர்ச்சி ஒன்றுதான். அதனால்தான் அந்த உணர்ச்சிக்கு ஒத்தும், உதவியும் வாழவேண்டும் என்கிற தெளிவு வருகின்றபோது, இது பேரறிவு.
அப்படி இல்லாமல் எனக்கு இன்பம் வேண்டும். யார் என்ன ஆனாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி என்று குறுகியிருக்கின்றபோது இது சிற்றறிவு. நாம் இப்போது பெரும்பாலும் சிற்றறிவு நிலையிலிருந்து பழகி விட்டோம்.
அப்படியின்றி அடுத்து அடுத்து எந்த காரியம் செய்தாலும் மற்றவருக்கு முரண்பட்டு இல்லாமல், பிற்காலத்தில் முரண்பாடு ஏற்படாதவாறு, இறை நிலையினுடைய ஒழுங்கு அமைப்புக்கு கேடில்லாமல் நான் வாழவேண்டும் என்ற மன விரிவோடு செய்கிறபோது, பேரறிவோடு இணைந்து செயல்படுகிறோம்.
அது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் அடுத்தடுத்து தியானம் செய்கிறபோது மனம், பதிவு செய்யக்கூடிய புலனறிவைக் கடந்து நல்லறிவிலே நிலைபெறுகிறது.
புலனறிவில் நிற்கும்போது மனம் இறைநிலையை நெருங்க முடியாதவாறு உணர்ச்சி நிலையிலிருக்கும். அது இறைநிலையை நெருங்க நெருங்க சிக்கலுக்கு விடை கிடைக்கும். இதுதான் பேரறிவோடு இணைவது.
அப்படி கிடைக்கக்கூடிய விடையை சிந்தித்துப் பார்த்தால் அடுத்து இறைநிலையிலேயே நின்று விளக்கங்களை பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். பழகப் பழக இதில் வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்