இறைநிலை என்னும் இருப்பாற்றலின் இயக்கச் சிறப்பான அலை நிலையே மனம். பிரபஞ்சம் முழுவதும் உள்ள செயற்களத்தோடும் எல்லா உயிரினங்களோடும் தொடர்பு உடையதாக மனம் இருப்பதால், ஒருவர் தனது மனத்திலோ அல்லது பிறர் மனத்துடனோ பிணக்கை உண்டாக்கினால் இயற்கையின் செயல் விளைவுத் தத்துவக் கோட்பாட்டின்படி அதற்குத் தகுந்தாற் போல் துன்பம், ஆழ்துயர் அல்லது வாழ்க்கை வளத்தில் இழப்பு ஏற்படும்.
மனஅலைச்ச...ுழல் விரைவைக் குறைப்பதற்கான தவப் பயிற்சியை உள்ளடக்கிய மெய்ஞ்ஞான தத்துவ அறிவைச் சிந்திக்கும் வயது வந்த எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதர்களையும் உயிரினங்களையும் உண்மையாகவே மதித்து வாழ ஆரம்பித்துப் பிறருக்குத் துன்பம் கொடுக்காது முடிந்த வரை எல்லா வகைகளிலும் ஒத்துதவி வாழ்வதைத் தன் வாழ்க்கையின் புனிதமான கடமையாகக் கொள்வான். இதுவே தற்காலத்தில் உள்ள பிறரை மதியாத நிலையைப் போக்குவதற்கான ஆய்வுத் தீர்வாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக