Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 மே, 2013

அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு :



மெய்ப்பொருளாக இருப்பது சிவம் அதனுடைய அசைவாக இருப்பது பரமாணு அதனுடைய கூட்டமாக இருப்பது தோற்றம் .

எந்தப் பொருளைப் பார்த்தாலும் தோற்றம்,அணுக்கூட்டு,பரமாணு,
... அதனுள் மெய்ப்பொருள் என்று பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.

இறைவனே "நான்" ஆக இருக்கிறன் என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்த நிலையிலே தன் முனைப்பு எழவே எழாது

இதுவரையில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன்,தனது மூலம் என்ன என்று தன்னையே திரும்பிப் பார்க்கிற நிலையே அறிவின் உயர்ந்த நிலை.அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்ந்த நிலை ஆறாவது அறிவு.

எல்லாப் பொருட்களிடத்தும் எல்லா உயர்களிடத்தும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படிக் காணக்கூடிய அளவு அறிவிலே உயர்வு பெற வேண்டும்.

அறிந்தது சிவம் மலந்தது அன்பு சிவமாகிய இறைநிலையை உணர்ந்ததால் அது அன்பாக மலர்ந்தது அன்பு வேறு இறைநிலை வேறு அல்ல என்ற உண்மையை உணருகின்ற போதுதான் கருணை பிறக்கும்.

எல்லாம் இறைநிலை தான் நானும் இறைநிலை தான என்று சொல்லிக்கொண்டு அதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

தன்னை உணர்வதற்குத் தவம் வேண்டும். உயர்களுக்குக் கடமை செய்ய அறம் வேண்டும் .

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக